நீங்க முட்டாளா.? இல்ல ஒரு பெரிய ஜீனியஸா.? இன்னைக்கு தெரிஞ்சுடும்.!

இதற்கு நீங்கள் மட்டுமே முழு பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டாம்; உங்களின் சயின்ஸ் டீச்சர்களுக்கும் ஒரு பெரிய பங்கு உண்டு.!

|

பூமி உருண்டையானதா.? - ஆம்; புதன் தான் இருப்பதிலேயே மிகவும் வெப்பமானதொரு கிரகமா.? - ஆமாம்; சூரியன் மஞ்சள் நிறத்தில் உள்ளதா.? அட.. ஆமாம்பா ஆமாம்.!

இந்த கேள்விகளுக்கெல்லாம் நீங்களும் "ஆமாம், ஆமாம்" என்று கூறும் நபரா.? ஐ யம் வெரி சாரி.! வானியல் பற்றிய உண்மையான அறிவு இல்லாதவர்கள் பட்டியலில் நீங்களும் இணைந்து கொண்டீர்கள், இதற்கு நீங்கள் மட்டுமே முழு பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டாம்; உங்களின் சயின்ஸ் டீச்சர்களுக்கும் ஒரு பெரிய பங்கு உண்டு.!

சில தவிர்க்கமுடியாத மற்றும் மறுக்க முடியாத உண்மைகள் இருக்கின்றன. அவைகளை பற்றி மீண்டும் யோசிக்க ஒரு சிறிய வாய்ப்பை தமிழ் கிஸ்பாட் உங்களுக்கு வழங்குகிறது.

உலகம் உருண்டையான வடிவம் கொண்டுள்ளதா.?

உலகம் உருண்டையான வடிவம் கொண்டுள்ளதா.?

இல்லை. கண்டங்களின் தட்டுகளின் முடிவற்ற இயக்கம் காரணமாக நமது பூமி கிரகத்தின் வடிவம் மாறிக்கொண்டே இருக்கிறது. நிச்சயமாக, பூமியின் நகரும் விகிதம் மிகவும் சிறியதாக தான் உள்ளது - சராசரியாக சுமார் 5 செ.மீ உள்ளது.

அடுத்தமுறை யாரேனும் பூமியை உருண்டையென குறிப்பிட்டால்.?

அடுத்தமுறை யாரேனும் பூமியை உருண்டையென குறிப்பிட்டால்.?

இருப்பினும் அது இன்னமும் கிரகத்தின் "தோற்றத்தில்" விளைவைக் ஏற்படுத்திக்கொண்டே தான் இருக்கிறது. ஆகமொத்தத்தில் பூமி கிரகத்திற்கும் உருண்டையான வடிவத்திற்கும் இடையே மிகப்பெரிய தூரம் இருக்கிறது. அடுத்தமுறை யாரேனும் பூமியை உருண்டையென குறிப்பிட்டால் குபீர்ரென்று சிரித்துவிடுங்கள் - தவறே இல்லை.!

புவியின் உண்மையான வடிவத்தை வெளிப்படுத்தும் புகைப்படம்.!

புவியின் உண்மையான வடிவத்தை வெளிப்படுத்தும் புகைப்படம்.!

வெறும் வார்த்தைகளால் கூறினால் நம்ப மாட்டீர்கள் என்று தெரியும். புவியின் உண்மையான வடிவத்தை வெளிப்படுத்தும் புகைப்படம் இதுதான். இது பூசாமி கிரகத்தின் ஈர்ப்பு மாதிரியால் உருவாக்கம் பெற்ற ஒரு படமாகும். அதாவது செயற்கைக்கோள் தரவரிசைகளில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரி புகைப்படத்தில் பூமியின் ஈர்ப்பு சக்தியின் வலிமையின் வேறுபாடுகளையும் காண முடிகிறது.

நிலவிற்கு முதுகு உண்டா.? அதாவது நாம காணாதவொரு பின்பக்கம் உண்டா.?

நிலவிற்கு முதுகு உண்டா.? அதாவது நாம காணாதவொரு பின்பக்கம் உண்டா.?

சூரிய கதிர்கள் சந்திரனின் ஒரே ஒரு பக்கத்தில் மட்டும்தான் பிரகாசிக்கின்றன என்ற கருத்து நிலவி வருகிறது. இதன் அர்த்தம் நிலவின் முதுகுப்பகுதி நிரந்தரமான இருட்டில் இருக்கிறது என்ற நமபிகை பரவலாக உள்ளது. இந்த நம்பிக்கைக்கு பலமூட்டும் வண்ணம் பூமியின் எந்தவொரு நிலப்பகுதியிலிருந்து பார்த்தாலும் சரி நிலவில் ஒரேயொரு பக்கம் மட்டும் தான் தென்படும் என்ற காரணம் திகழ்கிறது. எது உண்மை.?

காணக்கூடிய மற்றும் கண்ணுக்கு தெரியாத நிலவு பகுதிகள்.!

காணக்கூடிய மற்றும் கண்ணுக்கு தெரியாத நிலவு பகுதிகள்.!

உண்மை என்னவென்றால், காணக்கூடிய மற்றும் கண்ணுக்கு தெரியாத நிலவு பகுதிகள் ஆகிய இரண்டையுமே சூரியன் ஒளியூட்டுகிறது மற்றும் சூடுபடுத்துகிறது. அப்போது ஏன் நிலவின் மறுபக்கத்தை நம்மால் காண முடிவதேயில்லை.? - சந்திரன் அதன் அச்சில் சுழற்சியை எடுக்கும் காலமும், பூமியுடன் அதுகொண்டுள்ள சுற்றுப்பாதை நேரமும் வியப்பான முறையில் ஒற்றப்போகிறது. அதனால்தான் நாம் நிலவும் ஒரு பக்கத்தை மட்டுமே காண்கிறோம்.

லாஜிக் இடிக்கும்.! ஆனால் உண்மை சுடும்.!

லாஜிக் இடிக்கும்.! ஆனால் உண்மை சுடும்.!

எல்லாம் இங்கே தருக்கமாக (லாஜிக்) தெரிகிறது. மெர்குரி, சூரியனின் மிக நெருக்கத்தில் உள்ள கிரகமாகும், ஆகையால் அதன் மேற்பரப்பு வெப்பநிலை மற்ற எல்லா கிரகங்களை விடவும் அதிகமாக இருக்க வேண்டும். அல்லவா.? - உடனே ஆமாம் ஆமாம் என்று மண்டைய ஆட்டிவிட்டு வேண்டாம். சூரிய குடும்பத்திலேயே மிகவும் வெப்பமான மெர்குரி அல்ல- வீனஸ் தான்.

480 டிகிரி செல்சியஸ்.!

480 டிகிரி செல்சியஸ்.!

வீனஸ் கிரகமானது சூரியனை விட்டு சுமார் 50 மில்லியன் கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ளது என்பது உண்மைதான். அதேநேரத்தில் மெர்குரியின் சராசரி பகல்நேர வெப்பநிலை சுமார் 350 டிகிரி செல்சியஸ் என்பதும் அதுவே வீனஸ் கிரகத்தில் 480 டிகிரி செல்சியஸ் உள்ளதென்பதும் உண்மைதான்.

வீனஸ் வெந்து கொண்டிருக்கிறது.!

வீனஸ் வெந்து கொண்டிருக்கிறது.!

இதற்கு காரணம், வீனஸ் கிரகத்தின் வளிமண்டலமாகும். நடைமுறையில் மெர்குரி கிரகத்திற்கு வளிமண்டலம் கிடையாது, மறுகையில் உள்ள வீனஸ் கிரகத்திற்கோ, கிட்டத்தட்ட முற்றிலும் தடித்த கார்பன் டை ஆக்சைடு வளிமண்டலம் உள்ளது. இது மிகவும் வலுவான பசுங்குடில் (கிரீன்ஹவுஸ்) விளைவை உருவாக்குகிறது, கிடைக்கப்பெறும் அனைத்து சூரியனின் வெப்பத்தையும் ஈர்த்து நம்பமுடியாத வெப்பநிலை கொண்ட ஒரு கிரகமாக வீனஸ் வெந்து கொண்டிருக்கிறது.

சூரியன் ஒரு நெருப்பு பந்து.?! அப்படியா.?

சூரியன் ஒரு நெருப்பு பந்து.?! அப்படியா.?

சூரியனின் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலை கற்பனைக்கு எட்டாதது - என்பதை நாம் அனைவருமே அறிவோம். அது சுமார் 5,700 டிகிரி செல்சியஸ்க்கும் அதிகமானது. ஆக அது நிச்சயமான ஒரு பெரிய நெருப்பு பந்தாக இருக்க வேண்டும் என்பது தான் தருக்கம். மன்னிக்கவும் நாம் நினைப்பது கண்ணால் பார்ப்பது எல்லாமே ஒரு தவறான ஒப்பீடாகும்.

அபார வெப்பம் மற்றும் கண்கூசும் ஒளி.!

அபார வெப்பம் மற்றும் கண்கூசும் ஒளி.!

சூரியன் உண்மையில் ஒரு நட்சத்திரமாகும். அந்த நட்சத்திரத்தின் மையத்தில் நிகழும் வெப்பாற்றல் (தெர்மோநியூக்ளிக்) எதிர்வினைகள் தான் அதன் அபார வெப்பம் மற்றும் கண்கூசும் ஒளியை உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒரு செறிவான வெப்பாற்றல் எதிர்விளைவுகள், சில தனிமங்களை மற்ற தனிமங்களுடன் மாற்றியமைப்பதுடன், வெப்பம் மற்றும் ஒளி ஆற்றலை வெளியேற்றவும் செய்கிறது. இந்த ஆற்றல் சூரியனின் அனைத்து அடுக்குகளிலும் கடந்துசெல்லும் அதன் மேற்பரப்பு ஒரு பிரம்மாண்டமான எரியும் பந்து போல் நம் கண்களுக்கு காட்சிப்படுகிறது.

கண்ணை மூடிக்கொண்டு சொல்வோம் - சூரியனின் நிறம் மஞ்சள்.!

கண்ணை மூடிக்கொண்டு சொல்வோம் - சூரியனின் நிறம் மஞ்சள்.!

வானியல் பற்றி தெளிவு கொண்டவர்களுக்கு சூரியன் ஒரு நட்சத்திரம், அதுவும் மஞ்சள் நிற ட்ராஃப் வகையை சேர்ந்த ஒரு நட்சத்திரம் என்பதை அறிந்திருப்பர். ஆக மீண்டும் நமது தருக்கத்தின்படி சூரியன் ஒரு மஞ்சள் நிற நட்சத்திரமென்று நினைப்பதில் ஒரு தவறுமில்லை; அவ்வளவு ஏன் பார்ப்பதற்கும் அது மஞ்சள் நிறத்தில் தானே உள்ளது. ஆனால் - மீண்டும் மன்னிக்கவும், மற்ற மஞ்சள் குள்ள நட்சத்திரங்களைப் போலவே தான் சூரியனும் முற்றிலுமாக ஒரு வெள்ளை நிற நட்சத்திரமாகும்.

நாங்கலாம் என்ன முட்டாளா.?

நாங்கலாம் என்ன முட்டாளா.?

நீ என்ன சொன்னாலும் நம்புவதற்கு நாங்கலாம் என்ன முட்டாளா.? என்ற மைண்ட் வாய்ஸ் எகுறுவதை உணர முடிகிறது. விளக்கமாக சொன்னால் புரியும். மனிதனின் கண்களுக்கு சூரியன் ஏன் மஞ்சள் நிறமாக தெரிகிறது.? என்று கேட்டால் - அதற்கு முழு பொறுப்பையும் பூமியின் வளிமண்டலம் தான் ஏற்றுக்கொள்ளும்.

சற்று குழப்பமான விளக்கம் தான்; புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க.!

சற்று குழப்பமான விளக்கம் தான்; புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க.!

ஒரு நீண்ட அலைநீளம் கொண்ட ஒளியானது, ஸ்பெக்ட்ரத்தின் மஞ்சள் மற்றும் சிவப்பு பகுதியிலுள்ள அனைத்து வளிமண்டலத்தின் வழியாகவும் செல்கிறது. சிறிய அலைநீளங்களிலான ஒளியானது, ஸ்பெக்ட்ரத்தின் பச்சையிலிருந்து ஊதா நிறத்திற்கான பகுதியில் வளிமண்டலத்தினால் அதிக அளவில் சிதைக்கப்படும். இந்த விளைவு தான், சூரியனை மஞ்சள் நிறத்தில் காட்சிப்படுத்துகிறது. அப்போது சூரியனை அதன் நிஜமான வெள்ளை நிறத்தில் பார்க்கவே முடியாதா.? ஒருவேளை நீங்கள் வளிமண்டலத்தை விட்டு வெளியேறினால், சூரியனை அதன் "உண்மையான" நிறத்தில் ரசிக்கலாம்.!

Best Mobiles in India

English summary
It Turns Out That the Solar System Is Not at All Like We Think It Is. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X