சர்வதேச விண்வெளி மையத்தில் சிறு துளை: நாசவேலையா?
இதுகுறித்து அமெரிக்க விண்வெளி மைய செய்தி தொடர்பாளர் கூறியபோது இந்த துளை குறித்து நாசா எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.
கடந்த புதன் அன்று ரஷ்ய விண்வெளி மையம் கூறியது என்னவெனில் ரஷ்யாவின் சர்வதேச விண்வெளி மையத்தில் ஒரு சிறிய துளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக அபாயம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அறிவித்துள்ளது. இரண்டு மில்லிமீட்டர் விட்டம் உள்ள இந்த சிறிய துளையை கடந்த வாரம் விண்வெளி வீரர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த துளை உள்சுவரில் இருப்பதாகவும், இதனால் உள்ளே உள்ள அழுத்தம் அதிகமாக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. இருப்பினும் இப்போதைக்கு இந்த விண்வெளி மையத்தில் உள்ள மூன்று அமெரிக்கர்கள், இரண்டு ரஷ்யர்கள் மற்றும் ஜெர்மனியருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த துளையை டேப் உள்ளிட்ட ஒருசில பொருட்களை வைத்து தற்போதைக்கு அடைக்கப்பட்டுள்ளதால் உள்ளே உள்ள ஆக்சிஜன் சேதமில்லாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் விண்வெளி மைய இயக்குனர் டிமிட்ரி ரோகோசின் என்பவர் இதுகுறித்து கூறியபோது ஒரு நபர் வேண்டுமென்றே சுவரில் ஊடுருவி இருக்கலாம் அல்லது உற்பத்தி செய்யும் சமயத்தில் கைவினைப்பகுதியில் சுற்றுப்பாதையில் இருக்கும் போது சேதமாகியிருக்கலாம் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு சிறிய பொருளாலும் இந்த துளை ஏற்பட்டிருக்கலாம் என்று ரோகோசின் தெரிவித்துள்ளார்.

நோவோஸ்டி அவர்களின் கூற்றுபடி பலமுறை ஒரு துருப்பிடிக்காத பொருள் அந்த துளையை சுற்றி வட்டமடித்து வருவதாகவும், இது ஒரு விண்வெளி வீரர் அல்லது மற்றவர்களது ஒரு சிறிய தவறால் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து ரஷ்யாவின் விண்வெளி மையம் விசாரணை செய்து வருவதாகவும் இம்மாதத்திற்குள் இந்த விசாரணை முடிந்துவிடும் என்றும் அவர் மேலும் கூறினார்.

இதுகுறித்து அமெரிக்க விண்வெளி மைய செய்தி தொடர்பாளர் கூறியபோது இந்த துளை குறித்து நாசா எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்றும், ரஷ்ய விண்வெளி மையத்தின் விசாரணையில் இதற்கான காரணம் தெரிய வரும் என்றும் அவர் கூறினார். அவர்கள் நிச்சயம் இதற்கான வழியை கண்டுபிடித்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக ஸ்டீபானி சியச்சர்ஹோல்ஸ் என்பவர் கூறியுள்ளார். இருப்பினும் அமெரிக்க விண்வெளி வீரர்கள் தேவைப்பட்டால் இந்த விசாரணைக்கு உதவி செய்து விண்வெளி மையத்தில் உள்ள வீரர்களின் பாதுகாப்புக்கு உதவி செய்யும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications