வான் வெளியில் டி.வி. கேமிராக்களைப் பொருத்திய விண்வெளி வீரர்கள்!

விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் சிதைவுகள் மற்றும் பூமியிலிருந்து ஏவப்பட்ட செயற்கைக் கோள்களின் பகுதிகள் ஆகியவற்றில் இருந்து தங்களைப் பாதுகாக்கப் பெரும் பாடுபட வேண்டியிருந்தது.

|

சர்வேதச வின்வெளி நிலையத்தைச் சேர்ந்த வீரர்கள் (International Space Station's), கடந்த வாரம் வான் வெளியில் டி.வி.கேமராக்களை வெற்றிகரமாகப் பொருத்தியுள்னர். வணிகரீதியாக விண்வெளிக்குப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு உதவும் வகையில் இந்தக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

வான் வெளியில் டி.வி. கேமிராக்களைப் பொருத்திய விண்வெளி வீரர்கள்!

சர்வேதச வின்வெளி நிலையத்தைச் சேர்ந்த கமாண்டர்கள், ட்ரு ஃபியூஸ்டல் (Drew Feustel) மற்றும் ரிக்கி அர்னால்டு ஆகிய இருவரும் சேர்ந்து இந்த வேலையை வெற்றிகரமாக முடித்துள்ளனர். இந்த வேலையை முடிப்பதற்கு அவர்கள் கடுமையாகப் பேராட வேண்டியிருந்தது. விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் சிதைவுகள் மற்றும் பூமியிலிருந்து ஏவப்பட்ட செயற்கைக் கோள்களின் பகுதிகள் ஆகியவற்றில் இருந்து தங்களைப் பாதுகாக்கப் பெரும் பாடுபட வேண்டியிருந்தது. எல்லாவற்றையும் சமாளித்த அவர்களால் தங்களால் தவறவிடப்பட்ட ஒரு சிறு பொருளால் சிறு பிரச்சினை ஏற்பட்டது.

விண்வெளியில் தவறவிட்ட பொருள்

விண்வெளியில் தவறவிட்ட பொருள்

விண்வெளி வீரர் ட்ரு ஃபியூஸ்டல், கேமராவைப் பொருத்துவதற்கான இறுதிக்கட்டப் பணியில் இருந்த போது கேமராவுக்குத் தேவையான ஒரு சிறிய வயர் சுருளைத் (twisty wire tie) தவறவிட்டு விட்டார். அது வான்வெளியில் மிதந்து கொண்டிருந்தது. எப்படியோ பிரச்சினையைச் சமாளித்து வெற்றிகரமாகப் பொருத்திவிட்டனர். "ஒரு சிறிய வயர்சுருளைக் கூடப் பாதுகாத்திட முடியாத வருத்தத்துடன்தான் இனி வாழ வேண்டும்" என நகைச்சுவையுடன் இந்த நிகழ்வைப் பற்றிக் கூறுகிறார், ட்ரு ஃபியூஸ்டல்.

விண்வெளியில் அதிக நேரம் நடந்த வீரர்

விண்வெளியில் அதிக நேரம் நடந்த வீரர்

தன்னுடைய விண்வெளிப் பயணத்தில் ஒன்பதாவது முறையாக வான்வெளியில் நடந்திருக்கிறார் ட்ரு ஃபியூஸ்டல். வான்வெளியில் அதிக நேரம் நடந்தவர்கள் பட்டியலில் இவருக்கு மூன்றாவது இடம். முதலிடத்தில் இருப்பவர் ரஷ்யநாட்டைச் சேர்ந்தவர். ஒட்டுமொத்தமாக இவர் 61 மணிநேரம் மற்றும் 48 நிமிடங்கள் வெற்றுவெளியான வான்வெளியில் மிதந்திருக்கிறார்.

விண்வெளியில் சாகச நிமிடங்கள்:

விண்வெளியில் சாகச நிமிடங்கள்:

ட்ரு ஃபியூஸ்டல், டி.வி. கேமராவுடன் புதிய கேபிளை இணைப்பதற்குத் தடையாக இருந்த தன்னுடைய பாதுகாப்புக் கவசத்தைக் கழட்ட ஒரு சிறிய கடப்பாரை போன்ற இரும்புக் கம்பியைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. அந்தச் சமயத்தில் மற்றொரு வீரரான அர்னால்டு அவருக்கு உதவி செய்தார். அப்பொழுது அவர்கள் சந்தித்த பிரச்சினைகள் அவர்களுடைய பணியைத் தாமதப்படுத்தியது. இறுதியாக இவர்கள் இருவரும் மிகவும் துல்லியமாகப் படம் பிடிக்கும் திறன் கொண்ட டி.வி.கேமராவைப் பொருத்தினர்.

விரைவில் விண்வெளிக்கு வணிகரீதியான போக்குவரத்து

விரைவில் விண்வெளிக்கு வணிகரீதியான போக்குவரத்து

விண்வெளி நிலையத்திற்கு வணிகரீதியாகப் பயணம் மேற்கொள்பவர்கள் மிகத் தெளிவான காட்சிகளைப் பார்ப்பதற்கு இந்தக் கேமிராக்கள் மிகவும் உதவிகரமாக இருக்கும். SpaceX மற்றும் Boeing ஆகிய நிறுவனங்கள் விண்வெளிக்கான தங்களுடைய போக்குவரத்தைத் தொடங்கும் வரை நாசா (NASA) விண்வெளி மையத்திற்குத் தங்களுடைய வீரர்களை அனுப்புவதற்கு ரஷ்யாவின் உதவியை நாடவேண்டியுள்ளது. இதற்காக, நாசா ஒவ்வொரு விண்வெளி வீரருக்கும் 82 மில்லியன் டாலர் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது.

SpaceX மற்றும் Boeing நிறுவனங்களின் சேவை விரைவில் தொடங்கும்

SpaceX மற்றும் Boeing நிறுவனங்களின் சேவை விரைவில் தொடங்கும்

2011 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்க விண்வெளி வீரர்கள் விண்வெளிக்குச் செல்ல ரஷ்யநாட்டு விண்வெளி ஓடத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவின் SpaceX மற்றும் Boeing ஆகிய நிறுவனங்களின் விண்வெளிப் போக்குவரத்து ஃபுளோரிடா மாநிலத்தில் உள்ள கேப் கார்னிவல் தளத்திலிருந்து இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விண்வெளிக்கு ஆளில்லா விமானத்தை முதலில் அனுப்பிச் சோதித்த பிறகு, இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் விண்வெளி வீரர்களுடன் போக்குவரத்துத் தொடங்கப்படும் எனத் தெரிகிறது.

மீண்டும் வீட்டுக்கு வந்துட்டோம்....
கேமராவைப் பொருத்துவதற்காக ட்ரு ஃபியூஸ்டல் மற்றும் ரிக்கி அர்னால்டு ஆகிய இருவரும் ஏறக்குறைய ஏழு மணி நேரம் விண்வெளியில் மிதந்தனர். அப்பொழுது தங்களுடைய விண்வெளி நிலையத்தின் மற்றொரு பகுதியில் இருந்த கேமராவையும் சரி செய்தனர். இதனோடு சேர்ந்து கதிர்வீச்சு நெருப்புச் சோதனை போன்ற சில வேலைகளையும் முடித்துவிட்டு மீண்டும் தங்களுடைய விண்வெளி நிலையத்திற்குத் திரும்பினர். விண்வெளி நிலையத்திற்குள் பாதுகாப்பாகத் திரும்பிச் சென்றதும் "நாம் வீட்டிற்கு வந்து விட்டோம்" என இருவரும் தங்களுடைய மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

Best Mobiles in India

English summary
ISS Astronauts Set Up TV Cameras for Arriving Ships : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X