Home
Scitech

உலக நாடுகள் முடியாததை செய்து இஸ்ரோ சாதனை.! மறுஏவுகலனில் தெறிகாட்டியது.!

ராக்கெட்களை மறுபயன்பாட்டிற்கு கொண்டு வந்தால், செலவு குறையும் என்று இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து முயற்சியிலும் இறங்கியுள்ளது. இது சீனா, நாசா, ஸ்பேஸ் எக்ஸ் போன்ற விண்வெளியில் உள்ள நாடுகளையும்

விண்வெளிக்கு அனுப்பும் ராக்கெட்கெட்களுக்கு அதிகம் செலவாகின்றது. மேலும், செலவை குறைந்த பல்வேறு நாடுகளும் திட்டமிட்டு வருகின்றது. மேலும், இந்தியாவில் குறைந்த விலையில் அதிக ராக்கெட்கள் ஏவப்படுகின்றது. இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் சர்வதேச வர்த்தக மையமாகவும் உருவெடுத்துள்ளது.

உலக நாடுகள் முடியாததை செய்து இஸ்ரோ சாதனை: மறுஏவுகலனில் தெறிகாட்டியது.!

மேலும், இந்நிலையில் ராக்கெட்கள் ஏவுவதில் இஸ்ரோவுக்கும் அதிக செலவாகின்றது. இந்நிலையில் அந்த ராக்கெட்களை மறுபயன்பாட்டிற்கு கொண்டு வந்தால், செலவு குறையும் என்று இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து முயற்சியிலும் இறங்கியுள்ளது. இது சீனா, நாசா, ஸ்பேஸ் எக்ஸ் போன்ற விண்வெளியில் உள்ள நாடுகளையும் திக்குமுக்காட வைத்துள்ளது. மேலும், இந்தியாவின் நற்பெயரும் உயரும் வகையில் அமைந்துள்ளது. மேலும் வர்த்தக ரீதியிலும் வெற்றி காணும் திட்டமிட்டமாகவும் இது அமைந்துள்ளது.

இஸ்ரோவின் மறுபயன்பாடு:

இஸ்ரோவின் மறுபயன்பாடு:

செயற்கைக்கோள்களை ஏவ ஆகும் செலவைக் குறைக்கும் வகையில், மீண்டும் மீண்டும் பலமுறை பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பத்தில், ராக்கெட்டுகளின் முதல் மற்றும் இரண்டாம் நிலைகளை தயாரிக்கும் நடவடிக்கைகளில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது.

மதிப்பு உயரும்:

மதிப்பு உயரும்:

செயற்கைக்கோள்களை ஏவித் தருவதற்கான சந்தை தற்போது 39ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ளதாக இருக்கும் நிலையில், இது 2024ஆம் ஆண்டுவாக்கில் 49 ஆயிரம் கோடி ரூபாயாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்பேஸ் எக்ஸ்:

ஸ்பேஸ் எக்ஸ்:

எலன் மஸ்க்கின் அமெரிக்க நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ், மறுபயன்பாட்டு ஏவூர்தி தொழில்நுட்பத்தின் மூலம் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஏவித் தருவதற்காக 2018ஆம் ஆண்டில் பிஎஸ்எல்வி ராக்கெட் 3 முறை ஏவப்பட்டது.

முன்னணி இடத்தில் இஸ்ரோ:

முன்னணி இடத்தில் இஸ்ரோ:

ஆனால் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஃபால்கன் ராக்கெட்டை வணிக அடிப்படையில் 20 முறை ஏவியுள்ளது. எனவே செயற்கைக்கோள் ஏவுதல் சந்தையில் முன்னணி இடத்தைப் பிடிக்கும் வகையில், இஸ்ரோ மறுபயன்பாட்டு ஏவூர்தி தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

பால்கன் ராக்கெட்:

பால்கன் ராக்கெட்:

இந்த தொழில்நுட்பத்தை வரும் ஜூன்-ஜூலையில் இஸ்ரோ சோதித்துப் பார்க்க உள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஃபால்கன் ராக்கெட்டில் செய்தது போல, ராக்கெட்டின் முதல் நிலையை கடலில் விழச் செய்து மீட்க வழிவகை செய்யப்படும்.

சிவன் தகவல்:

சிவன் தகவல்:

ஆனால் ராக்கெட்டின் இரண்டாவது நிலையை மீண்டும் பயன்படுத்தத் தக்க வகையில் மீட்பது எளிது அல்ல. எனவே விண்கலம் போன்ற இறக்கை பகுதிகள் அமைந்ததாக அதை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

பயன்பாடுகள்:

பயன்பாடுகள்:

இந்த விண்கலம் போன்ற அமைப்பு ராக்கெட்டின் இரண்டாம் நிலையாக பயன்படுத்தப்படும். ராக்கெட்டின் மூன்றாம் நிலையாக அமையும், விண்ணில் செலுத்துவதற்கான செயற்கைக்கோள் அல்லது விண்கலம் பொருத்தப்பட்ட மேல்பகுதியை இந்த இறக்கையுடன் கூடிய இரண்டாம் நிலை ஏந்திச்செல்லும்.

மிஞ்சும் இஸ்ரோ தொழில்நுட்பம்:

மிஞ்சும் இஸ்ரோ தொழில்நுட்பம்:

செயற்கைக்கோள் அதன் சுற்றுவட்டப் பாதையில் செலுத்தப்பட்ட பின்னர் பூமிக்கு திரும்பி திட்டமிடப்பட்ட நிலப்பரப்பில் இரண்டாம் நிலை தரையிறங்கும்.

இஸ்ரோவுக்கு பெருமை:

இஸ்ரோவுக்கு பெருமை:

ராக்கெட்டின் இரண்டாவது நிலையை மீட்கும் முயற்சியை ஸ்பேஸ்எக்ஸ் மட்டுமல்ல, உலகின் எந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் முயற்சித்துப் பார்த்ததில்லை என்றும் சிவன் கூறியுள்ளார்.

 70 கி.மீ சோதனை:

70 கி.மீ சோதனை:

இறக்கை அமைப்புடன் கூடிய ஏவுவாகன சோதனை முதல்முறையாக கடந்த 2016ஆம் ஆண்டு மே 23ஆம் தேதியன்று இஸ்ரோவால் நடத்தப்பட்டது. அப்போது மறுபயன்பாட்டுத் தொழில்நுட்பத்தில் அமைந்த ஏவு வாகனம் 70 கிலோமீட்டர் வரை உயரேசென்று பின்னர் கடலில் விழும் வகையில் சோதனை நடத்தப்பட்டது.

கீழே விழ வைக்கப்படும்:

கீழே விழ வைக்கப்படும்:

வரும் ஜூன்-ஜுலையில் நடத்தப்பட உள்ள சோதனையில், சோதிக்கப்பட உள்ள ஏவு வாகனம் குறிப்பிட்ட உயரத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து கீழே விழவைக்கப்படும்.

3ம் கட்ட சோதனையில் இஸ்ரோ:

3ம் கட்ட சோதனையில் இஸ்ரோ:

அது பூமியில் திட்டமிட்ட பகுதியில் தரையிறங்கும் வகையில் இந்த சோதனை நடத்தப்படும். இதேபோல, மறுபயன்பாட்டு ஏவுவாகனத்தின் மூன்றாம் சோதனையை சுற்றுவட்டப்பாதையில் இருந்து செய்ய இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

தெறிக்கவிடும் இஸ்ரோ:

தெறிக்கவிடும் இஸ்ரோ:

இந்த மறுபயன்பாட்டு ஏவுவாகனம் தரையிறங்கும் பகுதியை அந்தமான்-நிக்கோபார் தீவுகளில் அமைக்க உள்ளதாக கூறப்பட்டாலும், அதுதொடர்பாக எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை.

Best Mobiles in India

English summary
ISRO's reusable satellite launch project : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X