Home
Scitech

நாட்டின் பாதுகாப்பைக் கருதி இஸ்ரோவின் அடுத்த அடி.! 2 புதிய பாதுகாப்பு செயற்கைக்கோள்கள்.!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO), ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் இரண்டு சிறிய பாதுகாப்பு செயற்கைக்கோள்களை எடுத்துச் செல்லும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை இஸ்ரோ இன்று

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO), ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் இரண்டு சிறிய பாதுகாப்பு செயற்கைக்கோள்களை எடுத்துச் செல்லும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை இஸ்ரோ இன்று அறிவித்துள்ளது.

எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்

எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்

ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் செலுத்தப்படும் எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்டின் மொத்த எடை 500 கிலோ கிராம் என்றும், இந்த ராக்கெட்டில் எடுத்துச் செல்லப்படும் இரண்டு சிறிய பாதுகாப்பு செயற்கைக்கோள்கள் ஒவ்வொன்றும் 120 கிலோ கிராம் எடை கொண்டதென்றும் இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறியுள்ளார்.

பாதுகாப்பு செயற்கைக்கோள்

பாதுகாப்பு செயற்கைக்கோள்

இரண்டு தனி பாதுகாப்பு செயற்கைக்கோள்களைத் தவிர்த்து அடாப்டர்கள் மற்றும் இதர சாதனங்கள் எல்லாம் 300 கிலோ கிராம் வரை எடை கொண்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்டின் மொத்த எடை 110 டன்னாக இருக்கும் என திரு சிவன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன்

ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன்

இரண்டாவது வணிகப் பிரிவின் தேவை பற்றி இஸ்ரோ தலைவர் சிவனிடம் கேட்டபோது, ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் முக்கிய டிரான்ஸ்பாண்டர், லீசிங் மற்றும் பிற வேலைகளைக் கவனித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2 அல்லது 3 எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்

2 அல்லது 3 எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்

வரும் காலங்களில் எஸ்.எஸ்.எல்.வி-யின் உற்பத்தியை அதிகரிக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாகவும் குறைந்தது மாதத்திற்கு 2 அல்லது 3 எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்களை ஏவத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

போலார் சாட்டிலைட்

போலார் சாட்டிலைட்

அதுமட்டுமின்றி வரும் காலத்தில் போலார் சாட்டிலைட் ஏவுகணை வாகன வாகனங்களின்(PSLV) உற்பத்தியை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எலன் மஸ்க்கின் டெஸ்லா ரோட்ஸ்டர்-க்கு விண்வெளியில் நடந்த கொடுமை.!

எலன் மஸ்க்கின் டெஸ்லா ரோட்ஸ்டர்-க்கு விண்வெளியில் நடந்த கொடுமை.!

ஸ்பேஸ் எக்ஸ்-ன் ஃபால்கோன் ஹெவி ராக்கெட் மூலம் முதன்முதலாக செலுத்தப்பட்ட எலன் மஸ்கின் சிவப்பு நிற டெஸ்லா ரோட்ஸ்டர், விண்ணில் செலுத்திய ஓராண்டிற்கு பிறகு, காஸ்மிக் கதிர்களின் காரணமாக அந்த ரோட்ஸ்டர் வாகனம் எதிர்பார்த்தபடி இயங்காது என கார்பேக்ஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.

டெஸ்லா மற்றும் அதன் அழிவில்லா இயக்கி முதன்முதலில் இன்பைனிடி மூலம் விண்வெளிக்கு சென்றபோது, ​​ஸ்டார்மேன் ஒரு பில்லியன் ஆண்டுகள் செயல்படும் என ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் நம்பியது. ஆனால் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வில் சற்று குறைவான வானியல் கணிப்பு வெளியாகியுள்ளது. சில மில்லியன் வருடங்களுக்கு பிறகு விண்கலம் பூமி அல்லது வெள்ளியில் மோதுவதற்கு முன்னரே (ஒரு வருடத்திற்கு முன்னர் எலன் மஸ்க், இந்த விண்கலம் வெள்ளியில் மோதாது என கற்பனை செய்தார்), விண்வெளியில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கவுள்ளது.

6 சதவீத வாய்ப்பு மட்டுமே உள்ளது

6 சதவீத வாய்ப்பு மட்டுமே உள்ளது

வளிமண்டலத்தின் வழியாக பூமியை தாக்கவரும் அந்த விண்கலத்தைப் பற்றி அதிகம் கவலை கொள்ள தேவையில்லை. விண்கலம் மீண்டும் பூமியை வந்தடைவதற்கு 6 சதவீத வாய்ப்பு மட்டுமே உள்ளது, மேலும் அது வெள்ளி கிரகத்தின் மீது மோதிக் கொள்ள 2.5 சதவீத வாய்ப்பே உள்ளது. ஒருவேளை அது மோசமான வெப்பத்தின் காரணமாக உருகுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

ஆஸ்ட்ரோ-மேனேக்யூன் க்ரூஸ்

ஆஸ்ட்ரோ-மேனேக்யூன் க்ரூஸ்

கடந்த வருடம் சூரியனின் சுற்றுப்பாதையிலும், புதனை தாண்டியும் ஆஸ்ட்ரோ-மேனேக்யூன் க்ரூஸ் பயணம் செய்தபோது, ​​அவரது ரோட்ஸ்டர் நுண்துகள்களால் நிரப்பப்பட்டதன் காரணமாக, அதன் பிரகாசமான சிவப்புநிற வெளிப்புற பகுதி மாறியது. இது தொடர்ந்து சிவப்பு நிறமாக இருக்க வாய்ப்பில்லை. காஸ்மிக் கதிர்கள் மற்றும் சூரிய கதிர்வீச்சு காரணமாக, விண்கலத்தின் பிளாஸ்டிக், தோல், மற்றும் துணி கூறுகளில் உள்ள கார்பன் பிணைப்புகள் சிதைக்கப்படுகிறது. சிவப்பு வண்ணப்பூச்சு ஏற்கனவே டயர் மற்றும் லுக்ஸ் லெதர்ஸ் போன்றவற்றுடன் சேர்ந்து போயிருக்கலாம்.

வேதிபொருட்கள்

வேதிபொருட்கள்

"அந்த சூழலில் உள்ள வேதிபொருட்கள் ஒரு வருடம் கூட தாக்குபிடிக்காது "என்கிறார் வேதியியலாளர் வில்லியம் கரோல்.

எலும்புக்கூடாக மட்டுமே இருக்கும்

எலும்புக்கூடாக மட்டுமே இருக்கும்

டெஸ்லா அநேகமாக இன்னும் ஒரு மில்லியன் ஆண்டுகளுக்குகூட சுற்றுப்பாதையில் இருக்கும், ஆனால் அது வெறும் அலுமினிய எலும்புக்கூடாக மட்டுமே இருக்கும். இது ஏற்கனவே தனது உத்தரவாதத்தை சுமார் 10,000 மடங்கு அதிகப்படுத்தியது. டெஸ்லாவின் தற்போதைய ரோட்ஸ்டரின் உத்தரவாதமானது 50,000 மைல் ஆகும். ஸ்டார்மான் ஏற்கனவே 470 மில்லியன் மைல்களுக்கு விண்வெளியில் நிறைவுசெய்துள்ளது.

சொந்த கிரகத்திற்கு திரும்புவதாக இருக்கலாம்

சொந்த கிரகத்திற்கு திரும்புவதாக இருக்கலாம்

வளிமண்டலத்திலிருந்து ஏதேனும் ஒரு விசித்திரமான பொருள் விழுவதை நீங்கள் பார்க்கிறீர்கள் என்றால், அது எலன் மஸ்ஸின் டெஸ்லா விண்கலம் அதன் சொந்த கிரகத்திற்கு திரும்புவதாக இருக்கலாம்!

Best Mobiles in India

English summary
ISROs New Rocket Likely To Carry 2 Defence Satellites : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X