போருக்கு வந்தால் சீனா-பாக்., கதறவிடும் இஸ்ரோ ஆயுதம்.!

இனிமேல் எலைக்குள் நுழைந்தால் இஸ்ரோவின் புது செயற்கைகோள் கண்டறியந்து அப்போதே இந்திய ராணுவத்திற்கும் மத்திய உள்துறை பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் தகவல் அளித்து விடும். இதன் மூலமாக இந்திய எல்லைக்குள் நு

|

இந்தியா எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானுக்கும், எல்லையை ஆக்கிரமித்து கூடாரம் அமைக்கும் சீனாவுக்கும் இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோ தற்போது இந்த பிரச்னையை தீர்க்க புது தொழில் நுட்பத்தை கையில் எடுத்துள்ளது.

போருக்கு வந்தால் சீனா-பாக்., கதறவிடும் இஸ்ரோ ஆயுதம்.!
இனிமேல் எலைக்குள் நுழைந்தால் இஸ்ரோவின் புது செயற்கைகோள் கண்டறியந்து அப்போதே இந்திய ராணுவத்திற்கும் மத்திய உள்துறை பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் தகவல் அளித்து விடும்.

இதன் மூலமாக இந்திய எல்லைக்குள் நுழைவது முறியடிக்கப்படும் இந்த பணியில் இஸ்ரோவின் புது செயற்கைகோள் களமிறிங்குகின்றது.

டிஜிட்டல் இந்தியா:

டிஜிட்டல் இந்தியா:

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப்பு ஏற்றது முதல் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை பல்வேறு துறைகளில் புகுத்தி வருகின்றது. மேலும், இஸ்ரோ மூலம் 2021ம் ஆண்டிற்குள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பவும் திட்டமிட்டுள்ளது.

மேலும், இஸ்ரோ மூலம் ராக்கெட்களை செலுத்தி பன்னாட்டு வர்த்தகத்தையும் கையாண்டு வருகின்றது. டிஜிட்டல் இந்திய திட்டத்தில் இஸ்ரோவுக்கு முக்கிய பங்கு இருக்கின்றது.

பாகிஸ்தான்:

பாகிஸ்தான்:

இந்திய எல்லைக்கு சீனாவும் பாகிஸ்தானும் அத்துமீறி வருகின்றது. இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சுடு நடத்தி வருகின்றது. மேலும் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியும் வருகின்றனர்.

சீனா:

சீனா:

இந்தியாவின் எல்லைக்குள் நுழைந்து தன் ராணுவத்தால் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றது சீனா. மேலும், அருணாச்சல பிரதேசத்தின் ஒரு சில இடங்களையும் சீனா ராணுவம் ஆக்கிரமித்துள்ளது.

மேலும், எல்லையில் ராணுவத்தை இந்திய எல்லைக்குள் அனுப்பி முகாம் அமைக்கும் வேலைகளிலும் சீனா ஆர்வம் காட்டி வருகின்றது.

அத்துமீறல்கள்:

அத்துமீறல்கள்:

இந்தியா-பாகிஸ்தான் மற்றும் இந்தியா-சீனா எல்லைகளில் எப்போதும் பதற்றம் நீடித்து வருகிறது. அத்துமீறல்கள், துப்பாக்கிச் சண்டைகள், ஊடுருவல்கள், ஆக்ரமிப்புகள் என தொடர்ந்து அண்டை நாட்டவரிடமிருந்து எல்லையைப் பாதுகாக்க ஏராளமான வீரர்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர்.

இஸ்ரோவுக்கு ஒப்புதல்:

இஸ்ரோவுக்கு ஒப்புதல்:

இந்நிலையில் எல்லைகளைக் கண்காணிக்கவும் பாதுகாக்கவும் இஸ்ரோ விஞ்ஞானிகளின் ஒத்துழைப்பை மத்திய அரசு நாடியுள்ளது. இது தொடர்பான ராணுவத்தினரின் பரிந்துரைகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

இஸ்ரோ செயற்கைகோள்:

இஸ்ரோ செயற்கைகோள்:

சாட்டிலைட் மூலமாக எல்லையை பாதுகாக்க திட்டமிடப்பட்டு இதற்கென பிரத்தியேக செயற்கைக் கோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாராகி வருகின்றனர்.

துணை ராணுவத்திற்கு உதவும்:

துணை ராணுவத்திற்கு உதவும்:

உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையின் பேரில் இஸ்ரோ விஞ்ஞானிகள் இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். எல்லையை பாதுகாக்கும் துணை ராணுவப் படையினருக்கு இந்த செயற்கைக் கோள் வழிகாட்டியாக திகழும்.

செயற்கோள்-ராணுவம்:

செயற்கோள்-ராணுவம்:

இதன் மூலம் எங்கெங்கு படைகளைக் குவிக்க வேண்டும் என்பதையும் எந்த இடத்தில் இருந்து படைகளை நீக்க வேண்டும் என்றும் செயற்கைக்கோள் வழிகாட்டுதலின் அடிப்படையில் ராணுவத்தினர் நடவடிக்கை எடுப்பார்கள்.

பயன்பாட்டிற்கு வரும்:

பயன்பாட்டிற்கு வரும்:

தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் உதவியுடன் எல்லைப் பாதுகாப்பு பணி மேம்படுத்தப்படும். இந்த நடவடிக்கை அடுத்த 5 ஆண்டுகளில் அமலுக்கு வரக்கூடிய வாய்ப்புள்ளது.

 ஊடுறுவலுக்கு முற்றுப்புள்ளி:

ஊடுறுவலுக்கு முற்றுப்புள்ளி:

இந்திய எல்லைக்குள் சீனா, பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் நுழைந்தால், இஸ்ரோவின் பிரத்யேக செயற்கைகோள் மூலம் அவர்களை ஊடுறுவலை இந்தியா முற்றுப்புள்ளி வைக்கும் என்று இந்திய சார்பில் நம்படுகின்றது.

Best Mobiles in India

English summary
ISROs, exclusive, satellite, protect, pak-china, border, telecom, Smartphone, Android, Technology, News, India, இஸ்ரோ, செயற்கைகோள், எல்லை பாதுகாப்பு, துணை ராணுவம், ஸ்மார்ட்போன், டெலிகாம், தொழில்நுட்பம், செய்திகள், இந்தியா

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X