கேப்புல நடந்த கிடா வெட்டு! Elon Musk அசந்த நேரம் பார்த்து ISRO செய்த "அடேங்கப்பா" வேலை!

|

இந்நேரம் உங்களில் பலருக்கும் தெரிந்து இருக்கும் - இப்போது, எலான் மஸ்க் (Elon Musk) தான் ட்விட்டரின் புதிய உரிமையாளர் ஆவார்.

வந்த வேகத்திலேயே, ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாக (Twitter CEO) பணிபுரிந்த பராக் அகர்வால் மற்றும் நிறுவனத்தின் பாலிசி சீஃப் ஆன விஜயா காடே ஆகியோரை எலான் மஸ்க் பணி நீக்கம் செய்துள்ளார்.

செம்ம பிஸியாக எலான் மஸ்க்.. கேப்புல கிடா வெட்டிய இஸ்ரோ!

செம்ம பிஸியாக எலான் மஸ்க்.. கேப்புல கிடா வெட்டிய இஸ்ரோ!

ட்விட்டர் நிறுவனத்திற்குள் "புகுந்துள்ள" எலான் மஸ்க், இன்னும் என்னென்ன அதிரடி மாற்றங்களை செய்யலாம் என்கிற தீவிரத்தில் பிஸியாக உள்ள நேரத்தில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ (ISRO) ஒரு தரமான சம்பவத்தை செய்துள்ளது.

அதென்ன சம்பவம்? இஸ்ரோவின் செயல்பாடுகள் எலான் மஸ்க்குடன் தொடர்புப்படுத்தப்பட என்ன காரணம்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

25 மணி நேரமாக மாறப்போகும் 1 நாள்.. விஞ்ஞானிகள் புட்டுப்புட்டு வைக்கும் 3 உண்மைகள்!25 மணி நேரமாக மாறப்போகும் 1 நாள்.. விஞ்ஞானிகள் புட்டுப்புட்டு வைக்கும் 3 உண்மைகள்!

PSLV தெரியும்.. GSLV தெரியும்.. ஆனால் NGLV தெரியுமா?

PSLV தெரியும்.. GSLV தெரியும்.. ஆனால் NGLV தெரியுமா?

உங்களில் பலருக்கும் இஸ்ரோவின் போலார் சாட்டிலைட் லான்ச் வெஹிக்கிள் (Polar Satellite Launch Vehicle) என்கிற பிஎஸ்எல்வி ராக்கெட் (PSLV Rocket) பற்றி தெரிந்து இருக்கலாம்.

மேலும் ஜியோசிங்க்ரநைஸ் சாட்டிலைட் லான்ச் வெஹிக்கிள் (Geosynchronous Satellite Launch Vehicle) என்கிற ஜிஎஸ்எல்வி ராக்கெட் (GSLV rocket) பற்றி தெரிந்து இருக்கலாம். ஆனால் என்ஜிஎல்வி ராக்கெட் (NGLV) பற்றி தெரியுமா?

என்ஜிஎல்வி என்றால் என்ன?

என்ஜிஎல்வி என்றால் என்ன?

என்ஜிஎல்வி (NGLV) என்பது இஸ்ரோவின் நெக்ஸ்ட் ஜெனரேஷன் லான்ச் வெஹிக்கிள் (Next-Generation Launch Vehicle) ஆகும்.

இது முன்னெப்போதும் இல்லாத அளவிலான அதிக எடையுள்ள செயற்கைகோள்களை சுமந்து சென்று சுற்றுப்பாதையில் விட்டுவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்பும் ரீயூசபிள் ராக்கெட் (Reusable rocket) ஆகும். அதாவது "மறுபடியும் மறுபடியும்" பயன்படுத்தக்கூடிய ராக்கெட் ஆகும்!

நரகம் இப்படி தான் இருக்குமோ? தங்கத்தை நரகம் இப்படி தான் இருக்குமோ? தங்கத்தை "உருக்கும்" புதிய கிரகம் கண்டுபிடிப்பு!

சாத்தியமாக்கி காட்டிய எலான் மஸ்க்!

சாத்தியமாக்கி காட்டிய எலான் மஸ்க்!

"மறுபடியும் பயன்படுத்தப்படும் ராக்கெட்டுகள்" என்றதுமே எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் ரீயூசபிள் ராக்கெட்களின் ஞாபகம் வந்தால் அதில் எந்த தவறும் இல்லை!

ஏனென்றால், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தான் ரீயூசபிள் ராக்கெட் என்கிற கான்செப்ட் சாத்தியமாக்கி காட்டிய தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஆகும்!

சைலன்ட் ஆக இஸ்ரோ செய்த சம்பவம்!

சைலன்ட் ஆக இஸ்ரோ செய்த சம்பவம்!

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா (NASA) உட்பட, இனிமேல் ரீயூசபிள் ராக்கெட் தான் விண்வெளி ஆராய்ச்சியின் வருங்காலம் என்பதை ஒப்புக்கொண்டுள்ளன; அது தொடர்பாக பணியாற்றி வருகின்றன.

இந்நிலைப்பாட்டில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, NGLV என்கிற பெயரின் கீழ் ரீயூசபிள் ராக்கெட்டை வடிவமைப்பதை உறுதி செய்துள்ளது.

லண்டன் அருகே விழுந்த விண்கல்லுக்குள் இருந்த நம்ப முடியாத லண்டன் அருகே விழுந்த விண்கல்லுக்குள் இருந்த நம்ப முடியாத "பொருள்"!

இனி 10 டன்... 20 டன் எல்லாம் அசால்ட்!

இனி 10 டன்... 20 டன் எல்லாம் அசால்ட்!

இஸ்ரோவின் தலைவர் ஆன எஸ் சோமநாத்தின் கூற்றுப்படி, ரீயூசபிள் ராக்கெட் வடிவமைப்பில் செயல்பட்டு வருகிறது மற்றும் இந்த புதிய ராக்கெட் ஆனது 10 டன் பேலோடை ஜியோஸ்டேஷனரி டிரான்ஸ்ஃபர் ஆர்பிட்டில் (ஜிடிஓ) செலுத்தும் வண்ணம் வடிவமைக்கப்படும் அல்லது 20 டன் பேலோடை லோ-எர்த் ஆர்பிட்டிற்கு கொண்டு செல்லும்படி வடிவமைக்கப்படும்.

இதில் இன்னொரு மாஸ்டர் பிளானும் அடக்கம்!

இதில் இன்னொரு மாஸ்டர் பிளானும் அடக்கம்!

இஸ்ரோவின் என்ஜிஎல்வி ராக்கெட் பற்றி இஸ்ரோ அதிகாரி ஒருவர் கூறுகையில், 2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதால் இதுபோன்ற புதிய ராக்கெட் மிகவும் உதவியாக இருக்கும் என்று கூறி உள்ளார்.

ஆக, என்ஜிஎல்வி ராக்கெட்டின் உருவாக்கத்திற்கு பின்னால், இஸ்ரோவின் இன்னொரு மாஸ்டர் பிளானும் உள்ளது!

"இதை" உடனே டெலிட் செஞ்சிட்டா உங்க Phone-க்கு நல்லது.. இல்லனா? வார்னிங் கொடுக்கும் Google!

அதாவது?

அதாவது?

விண்வெளி பயணங்கள், மனித விண்வெளி பயணங்கள், சரக்கு பயணங்கள் மற்றும் ஒரே நேரத்தில் பல வகையான தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை சுற்றுவட்டப்பாதையில் வைப்பது போன்றவைகளை சாத்தியப்படுத்துவது மட்டுமே இஸ்ரோவின் என்ஜிஎல்வி ராக்கெட்டின் முக்கிய பணிகளாக இருக்காது!

என்ஜிஎல்வி ராக்கெட் ஆனது, இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையத்தை உருவாக்கவும் உறுதுணையாக இருக்க போகிறது!

பிஎஸ்எல்வி.. அதுக்கு சரிப்பட்டு வராது!

பிஎஸ்எல்வி.. அதுக்கு சரிப்பட்டு வராது!

இஸ்ரோவின் கூற்றுப்படி, போலார் சாட்டிலைட் லாஞ்ச் வெஹிக்கிள் (பிஎஸ்எல்வி) ஆனது 1980 களில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. எனவே அதை எதிர்கால விண்வெளி ஆராய்ச்சிகளுக்கான லான்ச் வெஹிக்கிள் ஆக பயன்படுத்த முடியாது.

அதற்கெல்லாம் NGLV ராக்கெட் தான் சரிப்பட்டு வரும், ஏனென்றால் இது விண்வெளி போக்குவரத்திற்கான செலவை குறைக்கும் அதே சமயம், மொத்த உற்பத்திக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு எளிய, வலுவான "இயந்திரமாகவும்" செயல்படும்!

செவ்வாய் கிரகத்தில் ஓட்டை போட்ட NASA.. உள்ளே காத்திருந்த அதிர்ச்சி!செவ்வாய் கிரகத்தில் ஓட்டை போட்ட NASA.. உள்ளே காத்திருந்த அதிர்ச்சி!

காசு மேல.. காசு வந்து கொட்டுகிற நேரம் வரும்!

காசு மேல.. காசு வந்து கொட்டுகிற நேரம் வரும்!

இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் ஆனது கடந்த 2020 ஆம் ஆண்டில் 9.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டது. அது வருகிற 2025 ஆம் ஆண்டில் 12.8 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற நாடுகளின் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த உதவும் இஸ்ரோவின் லான்ச் சர்வீசஸ் செக்மென்ட்-ஐ (Launch services segment) பொறுத்தவரை - இந்தியாவின் பங்கு - கடந்த 2020 ஆம் ஆண்டில் 600 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது, இது வருகிற 2025 ஆம் ஆண்டில் 1 பில்லியன் டாலர்களை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது!

Photo courtesy: ISRO, NASA, Wikipedia

Best Mobiles in India

English summary
ISRO starts working on reusable rocket in the name of NGLV while SpaceX CEO Elon Musk busy with Twitter

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X