ககன்யான்பணி:ரஷ்யாவுக்கு செல்லும் 12விண்வெளி வீரர்கள்-சிவன்.!

|

ககன்யான் திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 12 இந்திய விண்வெளி வீரர்கள் சுமார் மாதம் பயிற்சி பெறுவதற்கு ரஷ்யாவுக்கு செல்ல இருக்கின்றனர். இந்த தகவலை இந்திய விண்வெளி ஆராய்ச்சி (இஸ்ரோ) மைய தலைவர் கே சிவன் அகமதாபத்தில் உள்ள மையத்திற்கு வருகை தந்த போது, தெரிவித்தார்.

விண்வெளி மனிதர்கள்

விண்வெளி மனிதர்கள்

விண்வெளிக்கு இந்தியா முதல் முதலில் மனிதர்களை அனுப்பும் என்று பிரதமர் மோடி தெரிவித்து இருந்ததார். உறங்குகின்ற யானை எழுந்து நிற்கும் நேரம் என்றும் பெருமையாக பிரதமர் குறிப்பிட்டார். மேலும், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி ஆய்வு பணியை துவங்குகின்றது. இதற்கு நிதியும் ஒதுக்குவதாகவும் பேசியிருந்தார்.

சந்திராயன் 2 பிறகு பணிகள்

சந்திராயன் 2 பிறகு பணிகள்

சந்திராயன்-2 திட்டபணிகள் பல்வேறு முறை தொழில்நுட்ப கோளாறுகளால், தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், சந்திராயன்-2 ஆர்பிட்டர் வெற்றிகரமாக இயங்கி வருகின்றது. மேலும், சந்திரனை ஆய்வு செய்து வருகின்றது. மேலும், லேண்டர் விக்ரம் மட்டும் தரையிறங்கும் போது, நிலவின் தரைப்பகுதியில் இருந்து, 2 கி.மீ இஸ்ரோவுடன் தொடர்பை இழந்தது. ஆனாலும், லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை.

தினமும் 3ஜிபி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல்: மற்ற நிறுவனங்கள் ஷாக்.!தினமும் 3ஜிபி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல்: மற்ற நிறுவனங்கள் ஷாக்.!

இஸ்ரோ மற்ற பணிகளில் ஆர்வம்

இஸ்ரோ மற்ற பணிகளில் ஆர்வம்

வெற்றியும் தோல்வியும் விஞ்ஞானிகளுக்கும் அழகு என்ற போர்வையில் மற்ற பணிகளில் இஸ்ரோ தனது குழுவினர்களுடன் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. மேலும், தற்போது உள்நாட்டு தொழில்நுட்பத்தில் விண்வெளிக்கு சென்றாலும், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப ரஷ்யாவிடம் பயிற்சிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.

ரஷ்யாவில் பயிற்சி

ரஷ்யாவில் பயிற்சி

ககன்யான் திட்ட பணிக்காக ரஷ்யாவின் விண்வெளி வீரர்களுக்கு பயிற்சியளிக்கப்பட இருக்கின்றது. இந்த திட்டம் குறித்து ஏற்கனவே 12 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களை ஒரு மாதம் விண்வெளி பயிற்சிக்கு ரஷ்யாவுக்கு அனுப்ப திட்டமிட்டப்பட்டுள்ளது.

மனைவி அந்தரங்க காட்சி லீக்-கணவர் ஷாக்: எல்இடி டிவியில் நுழைந்த ஹேக்கர் அட்டகாசம்.!மனைவி அந்தரங்க காட்சி லீக்-கணவர் ஷாக்: எல்இடி டிவியில் நுழைந்த ஹேக்கர் அட்டகாசம்.!

இறுதியாக 4 பேர்  தேர்வு

இறுதியாக 4 பேர் தேர்வு

இந்நிலையில், பயிற்சி பெறும் 12 வீரர்களில் இருந்து இறுதியாக 4பேரை ரஷ்ய விஞ்ஞானிகள் தேர்வு செய்வார்கள். அவர்களுக்கு விண்வெளி குறித்த பயிற்சியும் முழுமையாக கற்றுத்தரப்படும். அவர்கள் 15 மாதங்களுக்கு கடுமையான பயிற்சி பெறுவார்கள் என இஸ்ரோ சிவன் தெரிவித்தார்.

 டிசம்பருக்குள் துவங்கப்படும்

டிசம்பருக்குள் துவங்கப்படும்

ககன்யானின் கீழ் முதல் ஆளில்லா பணி 2020 டிசம்பருக்குள் தொடங்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் கூறினார். "ஜூலை 2021 க்குள் நாங்கள் திட்டமிட்டுள்ள இரண்டாவது ஆளில்லா பணி 2021 டிசம்பருக்குள் ஆளில்லா பயணத்தை மேற்கொள்ள முடியும்" என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார்.

20நீண்ட கால பிளான்களை அறிவித்து மிரட்டிய டாடாஸ்கை- பயனர்கள் குஷியோ குஷி.! .!20நீண்ட கால பிளான்களை அறிவித்து மிரட்டிய டாடாஸ்கை- பயனர்கள் குஷியோ குஷி.! .!

விண்வெளி வீராங்கனை இருக்கின்றார?

விண்வெளி வீராங்கனை இருக்கின்றார?

தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஒரு பெண் விண்வெளி வீரர் இருக்கிறாரா என்று கேட்டதற்கு, சிவன், "இப்போது வரை, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில், ஒரு பெண்ணும் இல்லை. ஆனால் ஒரு பெண் அங்கே இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அநேகமாக அடுத்த முறை ஒன்றைத் தேர்ந்தெடுப்போம். "

Best Mobiles in India

English summary
ISRO to send 12 astronauts to Russia from Kaganan Projects : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X