தீவிரவாதத்தை அழிக்க இந்தியா ஏவும் சேட்லைட்: பதறும் பாகிஸ்தான்.!
இதற்கிடையே அதிநவீன ரேடார் செயற்கைகோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். அந்த செயற்கைகோளுக்கு ரிசாட்-2 பி.ஆர்.1 என்று பெயரிடப்பட்டுள்ளது.
விரைவில் நிலாவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன்-2 விண்கலத்தை ஏவுவதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். செப்டம்பர் மாதம் 6-ந்தேதி அந்த விண்கலம் நிலாவில் தரை இறங்க உள்ளது.
இதற்கிடையே அதிநவீன ரேடார் செயற்கைகோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். அந்த செயற்கைகோளுக்கு ரிசாட்-2 பி.ஆர்.1 என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஹரி கோட்டாவில் இருந்து ஏவுதல்:
வருகிற 22-ந்தேதி அந்த செயற்கைகோள் ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்த செயற்கை கோளில் அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

துல்லியமாக படம் பிடிக்கும்:
இந்தியாவில் உள்ள கட்டிடங்கள் உள்பட தரையின் அனைத்து பகுதிகளையும் துல்லியமாக படம் பிடிக்கும் கருவிகள் இந்த செயற்கைகோளில் இடம் பெற்றுள்ளன. ஒரு நாளைக்கு ஒரே இடத்தை 3 தடவை படம் பிடிக்கும் ஆற்றல் இந்த நவீன கருவிகளுக்கு உள்ளது.

இந்தியாவை முழுமையாக கண்காணிக்கும்:
இதன் மூலம் நாட்டின் எந்த பகுதிகளிலும் பயங்கரவாத செயல்கள் நடப்பதை உடனுக்குடன் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க முடியும். இந்த செயற்கைகோள் மூலம் இந்தியாவை முழுமையான கண்காணிப்பில் வைத்திருக்க முடியும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

தீவிவாதிகளை கண்டுபிடிக்கும்:
எல்லை தாண்டி வரும் தீவிரவாதிகளை உடனுக்குடன் கண்டுபிடிக்க இந்த செயற்கைகோள் உதவியாக இருக்கும். கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவினால் இந்த செயற்கைகோள் மிக துல்லியமாக காட்டி கொடுத்து விடும்.

ரிசாட்-1 செயற்கைகோள்:
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்தியா நடத்திய அதிரடி தாக்குதலுக்கு இதுபோன்ற ரிசாட்-1 செயற்கை கோள் தான் கைகொடுத்து உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.

பதறும் பாகிஸ்தான்:
ஏற்கனவே இந்தியா பல்வேறு முறை சர்ஜிக்கல் தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தி வருகின்றது. மேலும், இதுபோன்ற செயற்கைகோளளை ஏவுவதால், தங்கள் நாட்டை சேர்த்து இந்தியா முழுமையாக கண்காணிக்கும் என்று பாகிஸ்தான் கதறுகின்றது.


Click it and Unblock the Notifications