Just In
- 9 hrs ago
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- 10 hrs ago
வீட்டுல இருக்குற எல்லோருக்கும் 1 வாங்கும் விலையில் அறிமுகமான Noise இயர்பட்ஸ்!
- 11 hrs ago
இந்த மாசம் மட்டும் 15 போன் ரிலீஸ்.! இதுல லவ்வர்ஸ் டேக்கு (February 14) எந்த போன் ரிலீஸ் தெரியுமா?
- 13 hrs ago
Jio, Airte, Vi வழங்கும் மலிவு விலை திட்டங்கள்: அதிக நன்மைகள் வழங்கும் நிறுவனம் எது?
Don't Miss
- News
சகோதரி மறைவால் துடிதுடித்துப் போன துர்கா ஸ்டாலின்! ஆறுதல் சொல்லி தேற்றிய குடும்பத்தினர்!
- Sports
களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
- Movies
பாடல்களை உலகுக்குப் பரிசளித்த பறவையாக வாழ்ந்த வாணி ஜெயராம்... ட்வீட்டரில் கமல் புகழஞ்சலி
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அங்கே என்ன காத்திருக்குமோ? யாருக்கும் தெரியாது.. நிலவின் "மர்ம பகுதிக்கு" செல்லும் ISRO!
இஸ்ரோ அமைப்பு தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. அதேபோல் இஸ்ரோ வரும் ஆண்டுகளில் நிலவுக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் விண்கலங்களை அனுப்புவது தொடர்பான திட்டப்பணிகளை வேகமாக மேற்கொண்டு வருகிறது.

சந்திராயன்-3 மற்றும் ஆதித்யா எல்-1
குறிப்பாக வரும் ஆண்டுகளில் சந்திராயன்-3 மற்றும் ஆதித்யா எல்-1 ஆகிய விண்கலங்களை விண்ணில் செலுத்த உள்ளது இஸ்ரோ அமைப்பு. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனில் ஆகாஷ் தத்வா எனும் மாநாடு நடைபெற்றது.

ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம்
இந்த மாநாட்டில் பங்கேற்ற அலகாபாத் சார்பு இயற்பியல் ஆய்வகத்தின் இயக்குனர் அனில் பரத்வாஜ், இஸ்ரோவின் வருங்கால திட்டங்கள் குறித்துப் பேசினார். அதாவது அவர் கூறியது என்னவென்றால், ஜப்பான் விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைந்து நிலவின் இருண்ட மறுபக்கத்திற்கு இஸ்ரோவின் விண்கலத்தை அனுப்பும் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

ரோவர் மற்றும் லேண்டர்
குறிப்பாக ஜப்பானில் உருவாக்கப்பட்ட ராக்கெட் மூலம் இஸ்ரோவால் தயாரிக்கப்பட்ட ரோவர் மற்றும் லேண்டர் கருவிகளை நிலவின் தென் துருவத்திற்கு அனுப்பி வைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அனில் பரத்வாஜ் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிலவின் மறுபக்கத்தைக் குறித்து ஆய்வு
சூரிய வெளிச்சம் படாத நிரந்தர இருளைக் கொண்ட நிலவின் மறுபக்கத்தைக் குறித்து ஆய்வு செய்ய இந்த திட்டம் உதவும் என்று கூறியுள்ளார் அவர். மேலும் இந்த திட்டம் நிறைவேறினால் நிலவு ஆராய்ச்சியில் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கலாம் என்று கூறியுள்ளார் அனில் பரத்வாஜ்.

சந்திரயான் 3
அதேபோல் சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த தகவலின்படி, நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்கான சந்திரயான் 3 விண்கலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.

குறிப்பாக சந்திரயான்-2 திட்டத்திலிருந்து கற்றுக்கொண்ட படிப்பினை, தேசிய அளவிலான நிபுணர்களின் ஆலோசனை அடிப்படையில், நிலவை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள சந்திராயன் 3 விண்கலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர்சோம்நாத் கூறினார்.

அண்மையில் செய்தியாளர்களுடன் பேசிய இஸ்ரோ தலைவர், நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 3 விண்கலம் தயாராக உள்ளது. பின்பு இந்த சந்திரயான் 3 விண்கலம் ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக சந்திரயான் 2 இல் ஏற்பட்ட பிரச்சனைகள் இதில் இருக்காது எனவும், சந்திராயன் 3 மிகவும் வலிமையானதாக உருவாக்கி இருப்பதாகவும், விண்கலத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

குறிப்பாக ஒரு கருவி பழுதடைந்தால் மற்றொரு கருவி அந்த பணியை கண்டிப்பாக முன்னெடுத்து செல்லும் வகையில் இந்த சந்திரயான் 3 உருவாக்கப்பட்டுள்ளது. பின்பு ஏற்கனவே ஆர்பிட்டர் நிலவை சுற்றவருவதால், இந்த முறை லேண்டர் ரோவர் விண்கலங்களை மட்டும் அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார் இஸ்ரோ தலைவர்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470