விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் சோதனை முயற்சி வெற்றி: இஸ்ரோ அசத்தல்.!
மனிதனை ஏற்றிச்செல்லும் விண்கலம் குறித்த ஆராய்சியை இதுவரையில் கடந்த ஏழு ஆண்டுகளான இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்து வருகின்றனர்.
முதன்முறையாக விண்வெளிக்கு மனிதனை ஏற்றிச்செல்லும் விண்கலம் ஒன்றின் சோதனை ஓட்டத்தை ஶ்ரீஹரிகோட்டாவில் இருந்து,விண்ணில் ஏவி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது இஸ்ரோ. மேலும் இஸ்ரோ இதுவரை பல்வேறு சாதனைகள் செய்துள்ளது, ஆனால் இப்போது மனிதனை ஏற்றிச்செல்லும் விண்கலம் மூலம் வெற்றிபெற்று உலகம் முழுவதும் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பின்பு வரும் காலத்தில் விண்வெளிக்கு ராக்கெட் மூலம் மனிதர்களை விண்வெளி வீரர்களாக அனுப்பும் திட்டம் உள்ளதால், தற்சமயம் சோதனை முயற்சியாக இஸ்ரோ இந்த திட்டத்தை நடத்தி வெற்றியும் பெற்றுள்ளது.

இஸ்ரோ:
குறிப்பாக இஸ்ரோ சார்பில் தெரிவிக்கப்பட்டது என்னவென்றால் விண்வெளிக்கு மனிதன்; செல்லும் போது, ஏதேனும் சிக்கல் ஏற்பட்டு அதில்
பாதுகாப்பாக தப்பிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாட் அபாட் டெஸ்ட்:
மேலும் ஶ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் சதீஸ் தாவன் விண்வெளி மையத்தில் பாட் அபாட் டெஸ்ட் என்ற சோதனை நேற்று துவங்கி வெற்றி
பெற்றமு என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் இந்த விண்கலமானது 2.7கிமீ தொலைவை அடைந்ததும், வங்காள விரிகுடா கடலில் விழும்
வண்ணம் திருப்பிவிடப்பட்டது.

பாராசூட் :
விண்கலத்தின் இருந்து விஞ்ஞானிகள் மற்றும் மனிதர்கள் இருக்கும் பகுதி மட்டும் தனியாக பிரிந்து பாராசூட் மூலம் மெதுவாக கீழிறங்கி
கடலில் விழுந்தது. இதன் மூலம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விண்வெளியில் இருந்து மனிதர்களை கொண்டு வர பயன்படும் கேப்ஸ்யூல் வசதியை இந்தியாவில் இஸ்ரோ சிறப்பாக செய்து இருக்கிறது.

173கோடி:
மனிதனை ஏற்றிச்செல்லும் விண்கலம் குறித்த ஆராய்சியை இதுவரையில் கடந்த ஏழு ஆண்டுகளான இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்து
வருகின்றனர். மேலும் ஏற்கனவே இந்த திட்டத்திற்கு 173 கோடி ரூபாய் வரை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் பல கோடி தேவைப்படுவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

அரசு ஒப்புதல்:
இதுவரை மனிதனை விண்ணுக்கு அனுப்பு முயற்சிக்கு அதிகாரப்பூர்வ ஒப்புதலோ அறிவிப்போ வெளியிடப்படவில்லை. அப்படியே அரசு ஒப்புதல் கிடைத்தாலும் இந்த திட்டத்தை செயல்படுத்த இன்னும் ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை ஆகலாம் என்று விஞ்ஞானிகள்
கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications








