விண்ணில் ஏவப்பட்டது பிஎஸ்எல்வி சி52 ராக்கெட்: இதனால் என்னென்ன பயன்கள்.!

|

இன்று அதிகாலை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து பிஎஸ்எல்வி சி52 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது. குறிப்பாக 3 செயற்கைக்கோள்களுடன் இந்த ராக்கெட்டை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது என்பது குறிப்பிடத்தக்கது..

பிஎஸ்எல்வி சி52 ராக்கெட்

பிஎஸ்எல்வி சி52 ராக்கெட்

அதாவது பிஎஸ்எல்வி சி52 ராக்கெட் மூலம் ஈஓஎஸ்-04 என்ற செயற்கைக்கோளும், இன்ஸ்பயர் சாட்-1 மற்றும் ஐ.என்.எஸ்-2டிடி என்ற 2 சிறிய வகையிலான செயற்கைக்கோள்களும் ஏவப்பட்டன. குறிப்பாக விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக்கோள்கள்பூவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது எனத் தகவல் வெளிவந்துள்ளது.

அடுத்து மனிதர்களா?- நியூரோலிங்க் சிப் பொருத்தப்பட்ட 23 குரங்குகளில் 15 இறப்பு: எலான் மஸ்க் நிறுவனத்தின் சோதனை!அடுத்து மனிதர்களா?- நியூரோலிங்க் சிப் பொருத்தப்பட்ட 23 குரங்குகளில் 15 இறப்பு: எலான் மஸ்க் நிறுவனத்தின் சோதனை!

 செயற்கைக்கோள்களில் பூமியின் தட்பவெப்பநிலை

மேலும் செயற்கைக்கோள்களில் பூமியின் தட்பவெப்பநிலை, விவசாயம், வனவளம் போன்றவற்றை துல்லியமாக படம்பிடிக்கும் அதிநவீன கேமரா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இஸ்ரோ தலைவராக புதிதாக பதிவியேற்றுள்ள சோம்நாத் தலைமையில் ஏவப்பட்ட முதல் செயற்கைக்கோள் இதுதான்.

Samsung Galaxy A03 இந்த மாத இறுதியில் அறிமுகமா? ரூ.12,000 விலையில் இவ்வளவு அம்சங்களா?Samsung Galaxy A03 இந்த மாத இறுதியில் அறிமுகமா? ரூ.12,000 விலையில் இவ்வளவு அம்சங்களா?

 பிஎஸ்எல்வி சி52 ராக்கெட்டை விண்ணில்

அதேபோல் பிஎஸ்எல்வி சி52 ராக்கெட்டை விண்ணில் வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பல்வேறு தரப்பினர் பாரட்டுகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த தகவலின்படி, சந்திரயான்-3 விண்கலம் வரும் ஆகஸ்ட் மாதம் விண்ணில் ஏவப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இதுதொடர்பான தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சிறந்த பட்ஜெட் விலை திட்டங்கள்: ரூ.118 முதல் ரீசார்ஜ் திட்டம்.. 70ஜிபி டேட்டா வரை வழங்கி அசத்தும் BSNL..சிறந்த பட்ஜெட் விலை திட்டங்கள்: ரூ.118 முதல் ரீசார்ஜ் திட்டம்.. 70ஜிபி டேட்டா வரை வழங்கி அசத்தும் BSNL..

சந்திரயான் 3

சந்திரயான் 3

அதாவது மக்களவையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறுகையில், சந்திரயான் 3-ன் சோதனைகள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டு விட்டதாகவும், இதனை ஏவும் பணி வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி, ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாச தள்ளுபடி- காதலர் தின சலுகை பாஸ்., மெர்சல் பண்ணுங்க!சியோமி, ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாச தள்ளுபடி- காதலர் தின சலுகை பாஸ்., மெர்சல் பண்ணுங்க!

சந்திரயான்-2 விண்கலம்

சந்திரயான்-2 விண்கலம் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலத்தில் இருந்த ரோவர் என்ற கருவியின் மூலம் நிலவில் தரையிறங்கி, அதன் மேற்பரப்பை ஆய்வு செய்ய விஞ்ஞானிகள் திட்டமிட்டனர். ஆனால் கடந்த செப்டம்பர் 7, 2019 அன்று நிலவில் தரையிறங்கிய போது லேண்டர் கருவி நிலவில் மோதியதால், அந்த திட்டம் தோல்வியடைந்தது.

ஒப்போ ரெனோ7 5ஜி பயன்படுத்த எப்படி இருக்கு?- விலைக்கேற்ற அம்சம்., நியாயமான தரமான ஸ்மார்ட்போன்!ஒப்போ ரெனோ7 5ஜி பயன்படுத்த எப்படி இருக்கு?- விலைக்கேற்ற அம்சம்., நியாயமான தரமான ஸ்மார்ட்போன்!

 சந்திரயான்-2 விண்கலத்தின்

இருந்தபோதிலும் சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர் கருவி, தொடர்ந்து நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நிலவின் தென் துருவத்தை ஆராய சந்திரயான்-3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ உருவாக்கி உள்ளது.

 இதுகுறித்து மக்களவையில்

மேலும் இதுகுறித்து மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் திருநாவுக்கரசர் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறுகையில், சந்திராயன்-3 விண்கலத்தின் அடிப்படை பணிகள் மற்றும் சோதனைகள் நிறைவடைந்துவிட்டதாகவும் அதனை வரும் ஆகஸ்ட் மாதம் விண்ணுக்கு ஏவ முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
ISRO successfully launches Earth observation satellite: full details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X