திருநெல்வேலியில் நடைபெற்ற விகாஸ் ராக்கெட் இயந்திர சோதனை வெற்றி !

இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் இரண்டாம் கட்ட துருவ செயற்கைக் கோள் ஏவு வாகனத்தின் ஆற்றலை அதிகப்படுத்த இந்த விகாஸ் இயந்திரம் உதவும்.

|

அதிக உந்து சக்தி கொண்ட மேம்படுத்தப்பட்ட ராக்கெட் இயந்திரமான “விகாஸ்” இயந்திரத்தின் சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு உள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் (ISRO) தெரிவித்துள்ளது. இந்திய விண்வெளித் திட்டங்களின் முன்னோடியாகத் திகழ்ந்த, விக்ரம் அம்பாலால் சாராபாய் – Vikram Ambalal Sarabai – என்னும் விஞ்ஞானியின் பெயரில் உள்ள முதல் எழுத்துக்களைச் சேர்த்து உருவாக்கப்பட்ட பெயர்தான் விகாஸ் – VIKAS ஆகும்.

திருநெல்வேலியில் நடைபெற்ற விகாஸ் ராக்கெட் இயந்திர சோதனை வெற்றி !

விகாஸ் என்பது திரவ எரிபொருள் ராக்கெட் இயந்திரமாகும். துருவ செயற்கைக் கோள் ஏவு வாகனம் (PSLV), புவி சுற்றுவட்ட செயற்கைக் கோள் ஏவு வாகனம் ஆகியவற்றில் (GSLV) பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதுதான் விகாஸ் ராக்கெட் இயந்திரமாகும்.

திருநெல்வேலியில் நடைபெற்ற சோதனை

திருநெல்வேலியில் நடைபெற்ற சோதனை

அதிக எடை கொண்ட செயற்கைக் கோள்களையும் விண்ணுக்கு எடுத்துச் செல்லும் வகையில் விகாஸ் இயந்திரத்தை மேம்படுத்துவதற்கு ஏற்ப ஆய்வுகள் நடைபெற்று வந்தன. தற்போது ஆய்வுப் பணிகள் முடிந்து அதிக உந்துசக்தி கொண்ட விகாஸ் ராக்கெட் இயந்திரம் வெற்றிகரமாகச் சோதித்துப் பார்க்கப்பட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் அறிவித்துள்ளது.

ராக்கெட் இயந்திரம்

ராக்கெட் இயந்திரம்

ஏவு வாகனங்கள் அதிக எடையைச் சுமந்து செல்ல இந்த ராக்கெட் இயந்திரம் உதவும். விண்வெளி விஞ்ஞானிகளால் இந்தச் சோதனை 195 விநாடிகளுக்கு நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியில் அமைந்துள்ள இந்திய விண்வெளி ஆய்வுக் கழக உந்துவிசை வளாகத்தில் (ISRO Propulsion Complex (IPRC)) இச் சோதனை நடத்தப்பட்டது.

அதிக உந்துவிசையுடன் விகாஸ்

அதிக உந்துவிசையுடன் விகாஸ்

இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் இரண்டாம் கட்ட துருவ செயற்கைக் கோள் ஏவு வாகனத்தின் ஆற்றலை அதிகப்படுத்த இந்த விகாஸ் இயந்திரம் உதவும். இதனைப் போலவே, புவி சுற்றுவட்ட செயற்கைக் கோள் ஏவு வாகனத்தின் ஆற்றலை அதிகப்படுத்தவும் (GSLV) இது உதவும். GSLV Mk-III வாகனத்தின் இரட்டை இயந்திரத் திறனை அதிகப்படுத்தவும் விகாஸ் உதவும். "மகேந்திரகிரியில் உள்ள உந்துவிசை ஆய்வு வளாகத்தில் (IPRC) அதிக உந்துவிசை கொண்ட மேம்படுத்தப்பட்ட விகாஸ் ராக்கெட் இயந்திரத்தின் சோதனை 195 விநாடிகளுக்கு நடத்தப்பட்டது" என இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் கூறியுள்ளது.

சோதனை முழு வெற்றி

சோதனை முழு வெற்றி

உந்து விசைக்கான அளவீடுகள் மிகச் சரியான முறையில் இருந்ததாக விகாஸ் சோதனையின் போது கண்டறியப்பட்டது. ஆய்வின் போது கவனத்தில் கொள்ளப்பட்ட அனுமானங்களை பூர்த்தி செய்யும் வகையிலும் சோதனையின் முடிவுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் புவிச்சுற்று வட்ட செயற்கைக் கோள் ஏவு வாகனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியான GSLV Mk-III வாகனத்தில் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் விகாஸ் உள்ளதாக சோதனையின் போது கண்டறியப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
ISRO Successfully Conducts Vikas Engine Ground Test : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X