சத்தமின்றி சம்பவம் செய்த ISRO: ஒலியை விட பல மடங்கு வேகத்தில் செல்லும் ஹைப்பர்சோனிக் சோதனை! வெற்றி..

|

ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் குறைந்தது ஒலியைவிட 5 மடங்குக்கும் அதிகமான வேகத்தில் பாய்ந்து செல்லும் திறன் கொண்டது. குறிப்பாக பல்வேறு நாடுகள் இந்த ஹைப்பர்சோனிக் தொழில்நுட்பத்தில் அதிக ஆர்வம் காட்டுகின்றன என்றுதான் கூறவேண்டும்.

சூழ்ச்சிச்செய்து அழிக்கக்கூடியது..

சூழ்ச்சிச்செய்து அழிக்கக்கூடியது..

அதாவது அதிநவீன பாலிஸ்டிக் ஏவுகணைகள் குறிப்பிட்ட பாதையில் மட்டுமே பயணிக்கக்கூடியது. ஆனால் இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஆனது பாலிஸ்டிக் போல் பாதையை பின்பற்றாமல் இலக்கை சூழ்ச்சிச்செய்து அழிக்கக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

50% எக்ஸ்ட்ரா டேட்டா.. இந்த 2 திட்டங்கள் மீது மட்டும் ஸ்பெஷல் ஆபரை அறிவித்துள்ள Jio.. தேங்க்ஸ் அம்பானி சார்!50% எக்ஸ்ட்ரா டேட்டா.. இந்த 2 திட்டங்கள் மீது மட்டும் ஸ்பெஷல் ஆபரை அறிவித்துள்ள Jio.. தேங்க்ஸ் அம்பானி சார்!

தலை சிறந்த நவீன தொழில்நுட்பம்

தலை சிறந்த நவீன தொழில்நுட்பம்

குறிப்பாக இந்த ஹைபர் சோனிக் தொழில்நுட்பத்தை விமானம், ஏவுகணை மற்றும் விண்கலங்களில் பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. இதுதான் உலகில் தலை சிறந்த நவீன தொழில்நுட்பம். பின்பு இந்தியா, சீனா, ரஷ்யா, அமெரிக்கா உட்பட பல நாடுகள் ஹைபர்சோனிக் ஏவுகணை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன.

Samsung முதல் Nokia வரை: ரூ.6000 இருந்தாலே புது போன் வாங்கலாம்: தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய AmazonSamsung முதல் Nokia வரை: ரூ.6000 இருந்தாலே புது போன் வாங்கலாம்: தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய Amazon

அணு ஆயுதங்களை ஏவ முடியும்

அணு ஆயுதங்களை ஏவ முடியும்

அதேபோல் நமது இந்தியா தற்போது ரஷ்யாவுடன் இணைந்து ஹைபர் சோனிக் ஏவுகணைகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக இதன் மூலம் அணு ஆயுதங்களை ஏவ முடியும். பின்பு இந்த தொழில்நுட்பத்தை இந்தியா கடந்த 2019 மற்றும் 2020 செப்டம்பரிலும் பரிசோதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த பரிசோதனையில் ஸ்கிராம்ஜெட் இன்ஜினுடன் கூடிய ராக்கெட் பயன்படுத்தப்பட்டது.

1 ரீசார்ஜ் பிளான் 15 OTT இலவசம்.! இனி தனியா OTT சந்தா வாங்காதீங்க.! இந்த Airtel & Jio பிளானை பாருங்க.!1 ரீசார்ஜ் பிளான் 15 OTT இலவசம்.! இனி தனியா OTT சந்தா வாங்காதீங்க.! இந்த Airtel & Jio பிளானை பாருங்க.!

கடந்த வாரம்...

இந்நிலையில் கடந்த வாரம் ஹைபர்சோனிக் vehicle பரிசோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக மேற்கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதுபோன்ற பரிசோதனையின் வெற்றி இந்தியாவுக்கு மேலும் வலிமை சேர்க்கும் என்றே கூறலாம். குறிப்பாக இஸ்ரோ தொடர்ந்து இதுபோன்ற பல புதிய சாதனைகளைச் சத்தமின்றி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. 43-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு 41% தள்ளுபடி வழங்கி தெறிக்கவிட்ட Flipkart.!இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. 43-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு 41% தள்ளுபடி வழங்கி தெறிக்கவிட்ட Flipkart.!

சந்திரயான் 3 விண்கலம்

சந்திரயான் 3 விண்கலம்

இஸ்ரோ அமைப்பு மேலும் பல்வேறு புதிய முயற்சிகளை அடுத்த வருடம் செயல்படுத்த உள்ளது. அதாவது நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்கான சந்திரயான் 3 விண்கலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.

வச்சிட்டாங்க ஆப்பு! இனி இஷ்டத்துக்கு Google Pay, Paytm-ஐ யூஸ் பண்ண முடியாது! 2 புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!வச்சிட்டாங்க ஆப்பு! இனி இஷ்டத்துக்கு Google Pay, Paytm-ஐ யூஸ் பண்ண முடியாது! 2 புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

இஸ்ரோ தலைவர் சோம்நாத்

இஸ்ரோ தலைவர் சோம்நாத்

சந்திரயான்-2 திட்டத்திலிருந்து கற்றுக்கொண்ட படிப்பினை, தேசிய அளவிலான நிபுணர்களின் ஆலோசனை அடிப்படையில், நிலவை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள சந்திராயன் 3 விண்கலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார்.

புது போன் வாங்க கையில் 5000 இருந்தால் போதும்.! Amazon-ன் அப்கிரேட் டே விற்பனைய மிஸ் செய்யாதீங்க.!புது போன் வாங்க கையில் 5000 இருந்தால் போதும்.! Amazon-ன் அப்கிரேட் டே விற்பனைய மிஸ் செய்யாதீங்க.!

சந்திரயான் 2 இல் ஏற்பட்ட பிரச்சனைகள்..

சந்திரயான் 2 இல் ஏற்பட்ட பிரச்சனைகள்..

சந்திரயான் 2 இல் ஏற்பட்ட பிரச்சனைகள் இதில் இருக்காது எனவும், சந்திராயன் 3 மிகவும் வலிமையானதாக உருவாக்கி இருப்பதாகவும், விண்கலத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் இஸ்ரோ தலைவர் சோம்நாத்.

ஹே அமுக்கு டுமுக்கு அமால் டுமால்: கம்மி விலையில் இந்தியாவில் அறிமுகமான Nokia C31.!ஹே அமுக்கு டுமுக்கு அமால் டுமால்: கம்மி விலையில் இந்தியாவில் அறிமுகமான Nokia C31.!

லேண்டர் ரோவர்..

லேண்டர் ரோவர்..

குறிப்பாக ஒரு கருவி பழுதடைந்தால் மற்றொரு கருவி அந்த பணியை கண்டிப்பாக முன்னெடுத்து செல்லும் வகையில் இந்த சந்திரயான் 3 உருவாக்கப்பட்டுள்ளது. பின்பு ஏற்கனவே ஆர்பிட்டர் நிலவை சுற்றவருவதால், இந்த முறை லேண்டர் ரோவர் விண்கலங்களை மட்டும் அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார் இஸ்ரோ தலைவர்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

News Source: republicworld.com

Best Mobiles in India

English summary
ISRO successfully conducts hypersonic vehicle tests without noise: Full details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X