Subscribe to Gizbot

சாதித்தது இஸ்ரோ : இண்டர்ஸ்டெல்லர் என்ற புனைக்கதை நிஜமாகிறது.!

Written By:

2014-ஆம் ஆண்டு ஆஸ்கார் விருது வென்ற அறிவியல் புனைகதைத் திரைப்படமான "இண்டர்ஸ்டெல்லர்" நினைவில் இருக்கிறதா.?? தன்னார்வலர்களின் குழு ஒன்று மனிதகுலத்திற்கான ஒரு புதிய வீட்டை தேடி விண்மீன் முழுவதும் பயணம் செய்யும் அந்த அறிவியல் புனைகதையை அவ்வளவு எளிதாக யாரும் மறந்து விட இயலாது.

"இண்டர்ஸ்டெல்லர்" என்ற திரைப்படத்திற்கும், பூமி மற்றும் அதை சூழ்ந்து நிரம்பியுள்ள அண்டம் சார்ந்த ஆய்வு ஆகிய இரண்டிற்கும் எவ்வளவு ஒற்றுப்போகும்.? "இண்டர்ஸ்டெல்லர்" கதையில் நடப்பது போல நிஜ வாழ்க்கையில் நடத்திக்காட்டுவது சாத்தியமா.?? என்றெல்லாம் கேள்வி கேட்டால் - இதுவரை மொத்தம் 5 விண்கலங்கள் மட்டுமே நமது சூரிய குடும்பத்தின் கிரகங்களுக்கு அப்பால் சென்றுள்ளது, அந்த ஐந்துமே அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசாவின் விண்கலங்கள் என்பது தான் பதில்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சாத்தியமான பகுதி

சாத்தியமான பகுதி

இருப்பினும், இண்டர்ஸ்டெல்லர் புனைகதை போன்று நட்சத்திரங்களுக்கு இடையிலேயான அல்லது கிரக அமைப்புக்களுடனும் பயணிப்பது என்பது விண்வெளி ஆய்வுகளை பொறுத்தமட்டில் சாத்தியமான பகுதியாவே திகழ்கிறது. ஆனால், அதை யார் நிகழ்த்துவதென்பது தான் இங்கு கேள்வி.

ஸ்டார் டிராவல்

ஸ்டார் டிராவல்

அம்மாதிரியான 'ஸ்டார் டிராவல்' எனப்படும் நட்சித்திரங்களுக்கு இடையிலேயான விண்வெளி பயணத்தை சாத்தியப்படுத்தும் வண்ணம் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் மையமான - இஸ்ரோ, உலகின் மிகச்சிறந்த ஒரு திட்டத்தின் பகுதியாக தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. மீண்டும் ஒருமுறை, வெற்றிகரமான விண்வெளி ஏவுதலில் உலக நாடுகளுக்கு சிம்மசொப்பனமாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டுள்ளது.

ஆறு இண்டர்ஸ்டெல்லர் ஸ்பேஸ்கிராப்ட்ஸ்

ஆறு இண்டர்ஸ்டெல்லர் ஸ்பேஸ்கிராப்ட்ஸ்

இந்த ஆண்டு கடந்த ஜூன் மாதம் 23-ஆம் தேதியன்று இஸ்ரோ அதன் பிஎஸ்எல்வி சி38 ராக்கெட் மூலமாக லோ-எர்த் ஆர்பிட்டில் (கோளப்பாதையில்) ஆறு இண்டர்ஸ்டெல்லர் ஸ்பேஸ்கிராப்ட்ஸ் அல்லது ஸ்ப்ரைட்ஸ்களை செலுத்தியது.

வெறும் 4 கிராம் எடை மற்றும் 3.5 செ.மீ நீளம்

வெறும் 4 கிராம் எடை மற்றும் 3.5 செ.மீ நீளம்

நற்செய்தி என்னெவெனில், இஸ்ரோவினால் வெற்றிகரமாக விண்வெளிக்குள் ஏவப்பட்ட6 ஸ்டாம்ப் சைஸ் அளவிலான ஸ்ப்ரைட்ஸ்களில் ஒன்று வெறும் 4 கிராம் எடை மற்றும் 3.5 செ.மீ நீளம் கொண்டதாகும், முக்கியமாக அது நிலத்தடி நிலையங்களுடன் தொடர்பும் கொள்ளும் என்பது தான், இதன் மூலம் அது மிகச்சிறிய விண்கலமாக மாறியுள்ளது.

முதல் விதையாக

முதல் விதையாக

இது விண்வெளி தொழில்நுட்பத்தில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக காணப்படுகிறது. இது எதிர்கால இண்டர்ஸ்டெல்லர் பயணங்கள் என்னவாக இருக்க முடியும் என்பதற்கான முதல் விதையாக இருக்கலாம் என்பதில் இஸ்ரோவிற்கு எந்த விதமான சந்தேகமும் கிடையாது.

பிரேக்த்ரூ ஸ்டார்ஸ்ஹாட்

பிரேக்த்ரூ ஸ்டார்ஸ்ஹாட்

ரஷ்ய பில்லியனர் மற்றும் தொழில்நுட்ப முதலீட்டாளர் ஆன யூரி மில்னரின் நிதியுதவி மற்றும் உலகின் தலைசிறந்த அண்டவியல் நிபுணர் ஆன ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களின் ஆதரவின் கீழ் பல மில்லியன் டாலர் செலவிலான 'பிரேக்த்ரூ ஸ்டார்ஸ்ஹாட்' என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆறு விண்கலங்களும் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.

4.37 ஒளியாண்டுகள்

4.37 ஒளியாண்டுகள்

இந்த பிரேக்த்ரூ ஸ்டார்ஸ்ஹாட் திட்டமானது, பூமியின் அருகாமை நட்சத்திர மண்டலமான ஆல்ஃபா சென்ட்யூரிக்கு, 4 கிராம் எடை அளவிலான சிறிய விண்கலங்களை அனுப்புவதை இலக்காகக் கொண்டுள்ளது. ஆல்ஃபா சென்ட்யூரி ஆனது பூமியில் இருந்து 4.37 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள அருகாமை நட்சத்திர அமைப்பு ஆகும்.

சென்சார்கள்

சென்சார்கள்

இதனை இலக்காக கொண்டுள்ள ஒவ்வொரு நுண் விண்கலங்களும் 4 கிராம் எடை கொண்டுருக்கும். மேலும் அது கொண்டுள்ள ஒரே சர்க்யூட் போர்டில் - சென்சார்கள், சூரிய பேனல்கள், ரேடியோ உபகரணங்கள் மற்றும் கணினிகள் ஆகிய அனைத்தும் அடங்கும். ஒவ்வொரு நுண் விண்கலங்களில் இருக்கும் சென்சார்கள், விண்வெளியில் அதன் இயக்கங்களை விஞ்ஞானிகளுக்கு காண்பிக்கும்.

14 நாடுகளின் 29 நானோ செயற்கைக்கோள்

14 நாடுகளின் 29 நானோ செயற்கைக்கோள்

இந்தியாவின் கார்ட்ஓசாட்-2 செயற்கைக்கோள் தான் ஜூன் 23-அம தேதி நிகழ்ந்த ஏவுதலின் பிரதான காரணமான இருந்தாலும், பிஎஸ்எல்வி சி 38-ல் 14 நாடுகளின் 29 நானோ செயற்கைக்கோள்களும் இடம்பெற்றன, அதில் இந்த 6 நுண் செயற்கை கோள்களும் அடங்கும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Isro sows seeds of future interstellar missions. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot