அடேங்கப்பா.. இஸ்ரோ வெளியிட்டுள்ள புகைப்படங்களில் இவ்வளவு விஷயம் இருக்குதா? மிஸ் பண்ணிடாதீங்க.!
இஸ்ரோ அமைப்பு தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட பூமியின் அசத்தலான படங்களை இஸ்ரோ பகிர்ந்துள்ளது. பின்பு விண்வெளியிலிருந்து இந்தியா பார்க்க எப்படி இருக்கும் என்பதை விளக்கும் சில அரிய புகைப்படங்களையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
இஸ்ரோ புகைப்படங்கள்: அதாவது இஸ்ரோ அமைப்பு சமீபத்தில் நிலம் தொடர்பான 5 புகைப்படங்களை வெளியிட்டது. குறிப்பாக அந்த புகைப்படங்களில் பூமி சிவப்பு நிறமாகத் தெரிகிறது. அதேபோல் இயற்கையான நீல நிறத்திற்குப் பதிலாகச் சிவப்பு நிறம் இருப்பது கண்டிப்பாக அனைவருக்கும் ஒரு ஆச்சரியத்தைக் கொடுக்கும். அதாவது விண்வெளியில் இருக்கும் செயற்கைக்கோள்களில் இருந்து பார்க்கும் போது பூமி இப்படித் தெரிகிறது என்று இஸ்ரோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பூமியின் வழக்கமான வண்ணங்களைத் தவிர ஏன் இத்தகைய வண்ணங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று கேள்வி வரும். ஆனால் கடலுக்குள் இருக்கும் காடுகளை அடையாளம் காட்ட இந்த நிறங்கள் உள்ளன என்றும்,இவை பூமிக்கு ஏற்ற நிறங்கள் என்றும் கூறுகிறார்கள். குறிப்பாக இதன் மூலம் ஆழமான நீல கடல் மற்றும் அடர்ந்த காடுகள் அனைத்து தெளிவாகத் தெரியும் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பிஎஸ்எல்வி-சி54 திட்டத்தின் ஒரு பகுதியாக ஓஷன்சாட்-3 என்ற நானோ செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. குறிப்பாக இது வளிமண்டலம் மற்றும் கடல்சார் ஆய்வுக்குப் பயன்படுத்தப்படும் செயற்கைக்கோள்களின் தொகுப்பின் ஒரு அங்கமாகும். இந்த ஓஷன்சாட்-3 மற்றும் ஓஷன் கலர் மானிட்டர் (ஓசிஎம்-3) மூலம் எடுக்கப்பட்ட பூமியின் கண்கவர் புதிய படங்களைச் செயற்கைக்கோள் சமீபத்தில் அனுப்பியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ஓஷன்சாட்-3 செயற்கைக்கோள் அனுப்பிய மொத்தம் 2939 படங்களை இணைத்து ஒவ்வொரு கண்டத்தையும் உள்ளடக்கிய மிகத் தெளிவான படங்கள், இந்த ஆண்டு பிப்ரவரி 1முதல் பிப்ரவரி 15 வரை பூமியில் நடந்த அத்தனை நிகழ்வுகளையும் ஒன்றிணைத்த படமாக தொகுக்கப்பட்டது. தற்போது இதைத் தான் இஸ்ரோ அமைப்பு டிவிட்டரில் பகிர்ந்துள்ளது.
சந்திரயான் -3 : அதேபோல் இஸ்ரோ அமைப்பு சந்திரயான் -3 திட்டத்திற்குத் தயாராகி வருகிறது. நிலவு குறித்த ஆய்வுக்காக சந்திரயான் பணி திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமல்ல உலக நாடுகளும் இத்திட்டத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர். இஸ்ரோ இந்தாண்டு இத்திட்டத்தை செயல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்திரயான்-2 தோல்வியையடுத்து சந்திரயான்-3 திட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இஸ்ரோ தோல்வியிலிருந்து தவறுகளை கற்றுக் கொண்டதாகக் கூறியுள்ளது. சந்திரயான்-3 என்பது சந்திரயான்-2 பயணத்தின் தொடர்ச்சியாகும். சந்திர மேற்பரப்பில் விண்கலம் பாதுகாப்பாகத் தரையிறங்குதல், லேண்டர்-ரோவர் தரையிறங்குதல் மற்றும் சந்திர மண்டலத்தில் இறங்கி ஆய்வு செய்தல் ஆகியவற்றைக் குறித்து கவனமாக பணி மேற்கொண்டு வருகிறது.

மேலும் சந்திரயான் 3 மிகவும் வலிமையானதாக உருவாக்கி இருப்பதாகவும், விண்கலத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும். அதேபோல் ஒரு கருவி பழுதடைந்தால் மற்றொரு கருவி அந்த பணியைக் கண்டிப்பாக முன்னெடுத்துச் செல்லும் வகையில் இந்த சந்திரயான் 3 உருவாக்கப்பட்டுள்ளது. பின்பு ஏற்கனவே ஆர்பிட்டர் நிலவைச் சுற்றவருவதால், இந்த முறை லேண்டர் ரோவர் விண்கலங்களை மட்டும் அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








