Home
Scitech

ராமர் பாலம் மனிதனால் கட்டப்பட்டதா? உண்மையை உடைக்க.. பெரிய ரிஸ்க் எடுக்கும் ISRO விஞ்ஞானிகள்!

அமெரிக்காவின் நாசா (NASA) உட்பட பல நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி மையங்களை திரும்பி பார்க்க வைப்பதில் கில்லாடியான - இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான - இஸ்ரோ (ISRO), தற்போது ஒட்டுமொத்த இந்தியர்களையும் உற்றுநோக்க வைக்கும்படியான ஒரு சர்ச்சைக்குரிய விஷயத்தில் கை வைத்துள்ளது!

அந்த சர்ச்சைக்குரிய விஷயம் - ராம் சேது (Ram Setu) என்று அழைக்கப்படும் ராமர் பாலம் தான். மனிதர்கனால் கட்டப்பட்டதா அல்லது இயற்கையாக உருவானதா என்று இன்றளவும் "தெளிவாக" கண்டுபிடிக்க முடியாத இந்த பல்லாண்டு கால மர்மத்திற்கு பின்னால் உள்ள உண்மையை உடைக்க, இஸ்ரோ நேரடியாக களமிறங்கி உள்ளது!

ராமர் பாலம் மனிதனால் கட்டப்பட்டதா? களத்தில் குதித்த ISRO விஞ்ஞானிகள்!

இதற்காக இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலுடன் (Indian Council of Historical Research) இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான (Indian Space Research Organisation) இஸ்ரோ, புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் (MoU - Memorandum f Understanding) கையெழுத்திட உள்ளதை இஸ்ரோ தலைவரான எஸ் சோம்நாத் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் ராமர் பாலம் உட்பட வேறு சில முக்கிய தொல்பொருள் தளங்களை (Archeological Sites) இஸ்ரோ அடையாளம் காண உள்ளது. அவைகளில் ராமர் பாலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இதன் பின்னால் இருப்பது வெறும் மர்மம் மட்டுமல்ல; பல்லாயிர காணக்காண மக்களின் நம்பிக்கையும் கூட!

ராமர் பாலத்தின் உண்மை பின்னணியை கண்டுபிடிக்க இஸ்ரோ என்ன செய்ய போகிறது? இந்தியா டுடேவிற்கு பிரத்தியேகமாக பேட்டியளித்த இஸ்ரோவின் தலைவரான எஸ்.சோமநாத், ஹை-ரெசல்யூஷன் படங்கள் (High resolution imagery) மற்றும் செயற்கைக்கோள் படங்கள் (Satellite images) மூலம் புராண நதியான சரஸ்வதியின் (Mythological river Saraswati) வறண்ட கால்வாயை கண்டுபிடிக்க முடிந்தது.

இதே போல ஆடம்ஸ் பிரிட்ஜ் (Adam's Bridge) என்று அழைக்கப்படும் ராமர் பாலத்தை செயற்கைக்கோள் படங்கள் வழியாக தெளிவாக பார்க்க முடியும். ஆனால் அந்த ராமர் பாலம் மனிதர்களால் உருவாக்கப்பட்டதா அல்லது இயற்கையாகவே உருவானதா? என்கிற கேள்விக்கான துல்லியமான பதில் இல்லை.

அந்த உண்மையை கண்டுபிடிக்க இந்திய தொல்பொருள் ஆய்வு மற்றும் பிற துறைகளில் உள்ள வல்லுநர்ககளின் உதவி தேவைப்படுகிறது என்று எஸ்.சோமநாத் கூறியுள்ளார். ஆகமொத்தம் இஸ்ரோவின் விஞ்ஞானிகள் பல துறைகளை சேர்ந்த வல்லுனர்களுடன் இணைந்து ராமர் பாலத்தின் உண்மை பின்னணியை கண்டுபிடிக்க உள்ளனர் தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது.

உண்மையை கண்டுபிடித்தாலும் இஸ்ரோ அதை அப்படியே வெளியே சொல்லுமா? பண்டைய இந்திய சமஸ்கிருத காவியமான ராமாயணத்தின்படி, ராமர் பாலமானது, அயோத்தியை அரசாண்ட ராமனும், அவரது படைவீர்களாலும் கட்டப்பட்டது. எனவே இந்து மதத்தினர் மத்தியில் இது பெரும் வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.

எனவே இது தொடர்பாக இஸ்ரோ நடத்தவுள்ள புதிய ஆராய்ச்சிகளில், ராமர் பாலமானது செயற்கையாக உருவானது என்கிற உண்மை வெளிப்பட்டால், எந்த சிக்கலும் இல்லை. ஒருவேளை இது மனிதர்களால் கட்டமைக்கப்படவில்லை, இயற்கையாகவேத்தான் உருவாகி உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டால் அது பலரின் நம்பிக்கையை காயப்படுத்தும் என்பதில் சந்தேகமே வேண்டாம்!

More from GizBot

Best Mobiles in India

English summary
ISRO Scientists To Join with Historical Researchers To Find Ram Setu Bridge is Man Made Or Natural
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X