பதறும் பாகிஸ்தான்; Silent Mode-ல் சீனா; அப்படி என்ன தான் செய்தது இந்தியா.?

பீதி கொள்ளும் அளவிற்கு அப்படி என்ன தான் இருக்கிறது.? என்ன நடக்க போகிறது.?

|

ஒருபக்கம் உலக நாடுகளின் கவனத்தையும், "இவனுங்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு கம்மியான செலவுல இதெல்லாம் சாத்தியம் ஆகிறது" என்கிற வயிற்று எரிச்சலையும், பொறாமையையும் ஒருசேர சம்பாதிக்கும், இஸ்ரோவின் சந்திராயன் 2 திட்டம் வருகிற அக்டோபர் மாதம் நிகழவுள்ளது.

சுமார் 800 கோடி ரூபாய் மதிப்புள்ள சந்திரயான் - 2 திட்டமானது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் ஒரு கனவு திட்டம் என்றே கூறலாம். இந்த திட்டத்தோடு சேர்த்து, அண்டை நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தானும் கனவில் கூட நினைக்காத இரண்டு திட்டங்களையும் இஸ்ரோ சாத்தியமாக்க உள்ளது. இரண்டு நாடுகளின் தூக்கமும் கெடப்போகிறது.

பீதி கொள்ளும் அளவிற்கு அப்படி என்ன தான் இருக்கிறது.?

பீதி கொள்ளும் அளவிற்கு அப்படி என்ன தான் இருக்கிறது.?

அதற்கு காரணம் நிச்சயமாக சந்திராயன் 2 அல்ல. சீன மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் பதறுவதற்கு காரணம் இஸ்ரோவின் ரிசாட்-2ஏ (Risat-2A) மற்றும் ஜிசாட் 7ஏ (Gsat-7A) செயற்கைகோள்கள் தான். பீதி கொள்ளும் அளவிற்கு அப்படி என்ன தான் இருக்கிறது.? என்ன நடக்க போகிறது.? என்பதை விரிவாக காண்போம்.

நில மற்றும் கடல் எல்லைகளை பாதுகாக்கும்.!

நில மற்றும் கடல் எல்லைகளை பாதுகாக்கும்.!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ,ஸ் சந்திராயன் 2-வை மட்டுமின்றி வரும் மாதங்களில் பல முக்கியமான செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்துகிறது. அந்த செயற்கைக்கோள்களில் சில போர்த் திறன் வாய்ந்த செயற்கைகோள்களை அடக்கம். அம்மாதிரியான ஸ்ட்ரேஜிக் சாட்டிலைட்ஸ் ஆனது, விரோத அண்டை நாடுகளின் மீத ஒரு கண் வைத்திருக்கவும், நமது நாட்டின் நில மற்றும் கடல் எல்லைகளை பாதுகாக்கவும், இந்திய இராணுவத்திற்கு உதவுகிறது.

Nuclear Weapons : எந்தெந்த நாடுகளிடம் எத்தனை அணுவாயுதங்கள் உள்ளன.? இந்தியாவின் நிலை என்ன.?
பாதுகாப்பு நோக்கத்திற்கான பிரத்யேக செயற்கைக்கோள்.!

பாதுகாப்பு நோக்கத்திற்கான பிரத்யேக செயற்கைக்கோள்.!

அப்படியான, போர்த்திறன் வாய்ந்த செயற்கைகோளில் ஒன்று தான் வருகிற செப்டம்பர் மாதம் விண்ணில் செலுத்தப்படவுள்ள ரிசாட் 2ஏ. இது இந்திய விமானப்படையினருக்கு (IAF) உதவும் ஒரு மேம்பட்ட ரிமோட் சென்சிங் செயற்கைக்கோள் ஆகும். மற்றொன்று இந்த ஆண்டின் இறுதியில் விண்ணில் செலுத்தப்படவுள்ள, இந்திய நாட்டின் பாதுகாப்பு நோக்கத்திற்கான பிரத்யேக செயற்கைக்கோள் ஆன ஜிசாட்-7ஏ. இந்த இரண்டும் தான் சீனா மற்றும் பாகிஸ்தானின் வயிற்றில் புளியை கரைந்துள்ளது.

உலகளாவிய செயல்பாடுகளையும் அதிகரிக்கும்.!

உலகளாவிய செயல்பாடுகளையும் அதிகரிக்கும்.!

ஜிஎஸ்எல்வி மார்க்2 ராக்கெட் மூலம் விண்வெளிக்குள் நுழைக்கப்படவுள்ள ஜிசாட்-7ஏ ஆனது, இந்திய விமான படையின் பல்வேறு தரை வழியிலான ரேடார் நிலையங்கள், ஏர்பேஸ் மற்றும் AWACS விமானங்களை இணைக்க உதவும். இது இந்திய விமான படையின் போர் திறன்களை அதிகரிப்பதோடு சேர்த்து, அதன் உலகளாவிய செயல்பாடுகளையும் அதிகரிக்கும்.

கடற்படைக்காக பிரத்தியேகமாக விண்ணில் செலுத்தப்பட்டது.!

கடற்படைக்காக பிரத்தியேகமாக விண்ணில் செலுத்தப்பட்டது.!

இதே போன்ற செயல்பாடுகளை உள்ளடக்கிய ருக்மிணி அல்லது ஜிசாட்-7 என்று அழைக்கப்படும் செயற்கைக்கோள் ஆனது, கடந்த செப்டம்பர் 29, 2013 அன்று, கடற்படைக்காக பிரத்தியேகமாக விண்ணில் செலுத்தப்பட்டது இங்கு குறிப்பிடத்தத்தக்கது. அது 2,000 கடல் மைல் அளவிலான 'தடம்' மற்றும் இந்திய போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் கடல்வழி விமானங்களுக்கு நிகழ் நேர உள்ளீடுகளை வழங்கி வருகிறது.

வான் மார்க்கமாகவும் கண்காணிப்புகளை நிகழ்த்தும்.!

வான் மார்க்கமாகவும் கண்காணிப்புகளை நிகழ்த்தும்.!

கடற்படைக்கு சொந்தமான "வானத்தில் இருக்கும் கண்" என்று அழைக்கப்படும் ருக்மிணி ஆனது, இந்திய பெருங்கடலில் சீனப் போர்க்கப்பல்களின் நடவடிக்கையையும் கண்காணித்து வருகிறது. இந்நிலைப்பாட்டில், இந்திய விமான படைக்காக பிரத்தேயேகமாக விண்ணில் செலுத்தப்படவுள்ள ஜிசாட்-7ஏ ஆனது வான் மார்க்கமாகவும் கண்காணிப்புகளை நிகழ்த்தும் என்பதால், சீனாவிற்கும், அதன் பதட்டமான நடவடிக்கைகளுக்கும் நெருக்கடி ஏற்படும்.

கண்காணிப்பு திறன்களை உயர்த்தும்.!

கண்காணிப்பு திறன்களை உயர்த்தும்.!

மறுகையில் உள்ள ரிசாட்- 2ஏ செயற்கைக்கோளை பொறுத்தவரை, அது ஒரு பிஎஸ்எல்வி ராக்கெட்டின் முதுகில் ஏறிக்கொண்டு விண்வெளிக்குள் நுழையவுள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் ஏவப்படவுள்ள ரிசாட் -2ஏ ஆனது, நாட்டின் கண்காணிப்பு திறன்களை உயர்த்தும் நோக்கம் கொண்ட ஒரு அட்வான்ஸ்டு ரிமோட் சென்சிங் சாட்டிலைட் (advanced remote sensing satellite) ஆகும்

மேற்பரப்பு மற்றும் வானிலை நிலைமை.!

மேற்பரப்பு மற்றும் வானிலை நிலைமை.!

ரிசாட் 2ஏ ஆனது, ஒரு அதிநவீன சின்தெடிக் அப்பெர்ஷர் ரேடார் ஒன்றை சுமந்து செல்லும் என்பதும், அது பூமியின் மேற்பரப்பு மற்றும் வானிலை நிலைமைகளை கண்காணிக்கும் திறன் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. ரிசாட் சாட்டிலைட் வரிசையின் மூன்றாவது செயற்கைக்கோள் ஆன ரிசாட் 2ஏ ஆனது பெரும்பாலும் பொதுமக்களின் நலன் என்கிற நோக்கத்தின் கீழே பணியாற்றும். அதாவது நில சார்ந்த மேப்பிங்கிற்காக பயன்படுத்தப்படும், அதில் கடல் மேற்பரப்பு சார்ந்த பகுப்பாய்வு பணிகள் கணிசமானதாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
To Keep An Eye On Chinese & Pakistan Army's Activities, ISRO To Launch Military Satellites Soon. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X