ஜிசாட் 11- பிரான்ஸில் இருந்து ஏவக்காரணம் என்ன?
வெற்றிகரமாக பல்வேறு செயற்கைகோள்களையும், ராக்கெட்களையும் இஸ்ரோ ( இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்) சார்பில் ஏவப்பட்டது. இதைத்தொடர்ந்து உள்நாட்டு தொழில் நுட்பத்திலேயே விண்வெளி உபகரணங்களும், தளவாட பொருட்க
இந்தியாவில் இருந்து ஏராளமான செயற்கைகோள்கள் வெற்றிகரமாக விண்வெளிக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
மேலும், வெளிநாடுகளை சேர்ந்த செயற்கைகோள்களையும் வெற்றிகரமாகவே இந்தியாவில் இருந்து விண்வெளிக்கு ஏவபட்டு வருகிறது. இந்தியாவின் விண்வெளிக்கு அனுப்பும் தொழில் நுட்பம் கண்டு பல்வேறு நாடுகளும் இந்தியாவை முக்கிய நாடாக கருதி வருகின்றன.

இந்நிலையில், ஏன் ஜிசாட் 11 செயற்கைகோளை இந்தியாவில் இருந்து ஏவாமல், பிரான்ஸ் நாட்டில் இருந்து ஏவக்காரணமென்ன என பொது மக்களுக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இதன் விபரத்தை இனி காணலாம்.

இஸ்ரோ:
வெற்றிகரமாக பல்வேறு செயற்கைகோள்களையும், ராக்கெட்களையும் இஸ்ரோ ( இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்) சார்பில் ஏவப்பட்டது. இதைத்தொடர்ந்து உள்நாட்டு தொழில் நுட்பத்திலேயே விண்வெளி உபகரணங்களும், தளவாட பொருட்களும் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்திய விண்வெளி சந்தை:
இந்திய விண்வெளித்துறை என்பது குறைந்த செலவில் ராக்கெட்கள், விண்வெளி தளவாட பொருட்கள் தயாரிக்கப்பட்டு உள்நாட்டிலேயே செலுத்தப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரையில், குறைந்த செலவில் செயற்கைகோளும் தளவாட பொருட்களும் கிடைப்பதால், வெளிநாடு மற்றும் தனியார் நிறுவனங்களின் செயற்கைகோள்களும் இந்தியாவை விண்வெளி சந்தையாக பார்க்கின்றன.

லாப நோக்கமான இஸ்ரோ:
இந்தியாவில் குறைந்த செலவில் ராக்கெட், செயற்கைகோள் மற்றும் தளவாட பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனால், வெளிநாடுகளை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் செயற்கைகோள்கள் மற்றும் இந்தியாவில் இருந்து ஏவப்படும் செயற்கை கோள்களையும் ஒருங்கிணைத்து ஓரே நேரத்தில் லாப நோக்கோடு ஏவப்படுகிறது. இதிலும் வெற்றி கண்டுள்ளதால், இந்தியா விண்வெளித்துறை வணிக மயமாக்கப்பட்டுள்ளது என்றே கூறலாம்.

ஜிசாட் 11 செயற்கை கோள்:
இணையதள சேவை வேகத்தை அதிகரிக்க உதவும் ஜிசாட் 11 செயற்கை கோளை நவம்பர் 30ம் தேதி விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. கடந்த மார்ச் மாத இறுதியில் ஏவப்பட்ட ஜிசாட் 6ஏ செயற்கைகோள் சில தினங்களிலே கட்டுப்பாட்டு யைமத்துடன் தொடர்பை இழந்தது. இதன் காரணமாக ஜிசாட் 11 செயற்கை கோள் ஏவப்படும் நாள் தள்ளிப்போனது.

இந்தியாவில் ஜிசாட் 11:
ஜிசாட் செயற்கைகோள் 5 ஆயிரத்து 700 கிலோ எடை கொண்டது. இதனால் இந்தியாவில் உள்ள ராக்கெட் ஏவுதளங்களில் இருந்து செயற்கை கோளை விண்ணிற்கு செலுத்த முடியாது. இந்தியாவில் இருந்து ஏவ முடியாத ஓரே காணத்தால், திட்டமிட்டபடி வரும் நம்பர் 30ம் தேதி விண்வெளிக்கு செலுத்தியாக வேண்டும்.

பிரான்ஸில் இருந்து அனுப்படுகிறது:
இந்த காரணத்தாலே பிரான்ஸ் நாட்டின் கையானவில் உள்ள ஐரோப்பியன் விண்வெளி மையத்தில் இருந்து ஏவ திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் உள்ள இணைதள சேவையை மேம்படுத்த நோக்கில் வரும் நவம்பர் 30ம் தேதி ஜிசாட் 11 விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications