Home
Scitech

ரூ.1,000 கோடி செலவில் இஸ்ரோ சாதிக்க நினைப்பது இதுதான்! விண்ணில் பாயத் தயாராகிய சந்திராயன் 2!

விண்வெளித் துறையில் இன்னொரு மாபெரும் மைல்கல்லை நிலைநிறுத்த இஸ்ரோ தயாராகிவிட்டது. இந்தியாவின் லட்சிய திட்டமான ரூ.1,000 கோடி நிலவு திட்டத்திற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

ரூ.1,000 கோடி செலவில் இஸ்ரோ சாதிக்க நினைப்பது இதுதான்!

சந்திரனுக்குச் செல்லும் பாகுபலி என்றழைக்கப்படும் 'சந்திராயன் 2' விண்கலத்தின் முதல் புகைப்படத்தை இஸ்ரோ தற்பொழுது வெளியிட்டுள்ளது.

விண்ணில் பாயும் சந்திராயன் 2

விண்ணில் பாயும் சந்திராயன் 2

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின், ரூ.1000 கோடி செலவில் நிலவு திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள சந்திராயன் 2 விண்கலம், வரும் ஜுலை 15 ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது. இந்த விண்கலம் சந்திரனின் தென் துருவப் பகுதிக்கு செல்ல உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த நாடும் சென்றிடாத இடத்திற்கு செல்லும் இஸ்ரோ

எந்த நாடும் சென்றிடாத இடத்திற்கு செல்லும் இஸ்ரோ

உலக நாடுகளில் இதற்கு முன்னர் எந்த நாடும், நிலவின் தென் துருவ பகுதிக்குச் சென்றதில்லை என்பதும், முதல் முறையாக இந்தியா மட்டுமே நிலவின் தென் துருவ பகுதிக்குச் செல்லவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அண்மையில் இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் நிலவு குறித்து ஒரு டுவீட்ம் செய்திருந்தது.

மேம்படுத்தப்பட்ட நிலவு திட்டம்

மேம்படுத்தப்பட்ட நிலவு திட்டம்

சந்திராயன் 1 திட்டத்தைத் தொடர்ந்து, இஸ்ரோ செய்யும் இரண்டாவது நிலவு திட்டம் சந்திராயன் 2 என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரோவின் கூற்றுப்படி சந்திரயான் 2 இன் பணி, சந்திரயான் 1 இன் கண்டுபிடிப்புகளை வளர்க்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரனின் பரிணாம வளர்ச்சி

சந்திரனின் பரிணாம வளர்ச்சி

நிலவுக்குச் செல்லும் சந்திராயன் 2 விண்கலம், நிலவின் மேற்பரப்பில் உள்ள நிலப்பரப்பு ஆய்வுகள் மற்றும் கனிமவியல் பகுப்பாய்வுகள் போன்ற பலகட்ட சோதனைகளை நடத்தவுள்ளது. இதன் மூலம், சந்திரனின் தோற்றம் மற்றும் அதன் பரிணாம வளர்ச்சி பற்றிய புரிதலை நன்கு புரிந்துகொள்ள முடியும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

அதிநவீன ரோவர், லேண்டர், ஆர்பிட்டர்

அதிநவீன ரோவர், லேண்டர், ஆர்பிட்டர்

சந்திரயான் 2 விண்கலத்தில், நிலவை ஆய்வு செய்வதற்காக அதிநவீன ரோவர், லேண்டர் மற்றும் ஆர்பிட்டர் உள்ளிட்ட மூன்று கருவிகள் விண்ணுக்கு அனுப்பவுள்ளது. விண்கலம் சந்திரனில் தரையிறங்கியவுடன், லேண்டர் ஆர்பிட்டரிலிருந்து பிரிந்து செல்லும், பின்னர் விக்ரம் என்று பெயரிடப்பட்ட லேண்டர், செப்டம்பர் 6, 2019 அன்று சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்கும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் ஒரு சந்திர காலம்

நிலவின் ஒரு சந்திர காலம்

நிலவிற்கு அனுப்பப்படும் லேண்டர், நிலவை ஒரு சந்திர காலத்திற்கு நிலவின் மேற்பரப்பைச் சோதனை செய்யும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவின் ஒரு சந்திர காலம் என்பது பூமியின் 14 நாட்களுக்குச் சமம் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் சந்திரனுக்குச் செல்லும் ஆர்பிட்டர் ஒரு வருட காலத்திற்கு அதன் பணியைச் செய்யும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ரூ.1000 கோடி செலவில் புதிய சாதனை

ரூ.1000 கோடி செலவில் புதிய சாதனை

இதுவரை எந்த நாடும் செல்லாத நிலவின் தென் துருவ பகுதிக்குச் சென்றதில்லை என்பதனால், இந்தியா புதிய சாதனைபடைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும், சந்திராயன் 1 இன் பணிகளை மேம்படுத்தி நிலவின் பரிணாம வளர்ச்சியைக் கண்டறிவதற்காகவும் இந்த சந்திராயன் 2 நிலவு திட்டம் ரூ.1000 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுளள்து.

நிலவு பற்றிய புதிய தகவல்கள்

நிலவு பற்றிய புதிய தகவல்கள்

விண்வெளி துறையில் இன்னொரு சாதனை மைல்கலாக இத்திட்டம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. சந்திரனை பற்றி நாம் அறியாத இன்னும் பல புதிய தகவல்களை இந்த திட்டம் வெளிக்கொண்டுவரும் என்றும் நம்பப்படுகிறது.

Best Mobiles in India

English summary
ISRO releases first images of India’s Chandrayaan 2 rocket : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X