நாசாவே பயந்த திட்டத்தை செய்யும் இஸ்ரோ; தமிழர் தலைமையில் ஒரு விண்வெளி மைல்கல்.!

அந்த அளவிற்கு, செம்ம பிஸியான ஒரு டைம் டேபிளை போட்டு பணியாற்றி வருகிறது, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ.!

|

"ஹலோ இஸ்ரோவா.?" என்று கேட்டால் "நான் ரொம்ப பிஸி.. அப்புறம் பேசுறேன்" என்ற பதிலே கிடைக்கும். இந்த பதில் இன்று மட்டும் அல்ல, இந்த ஆண்டின் இறுதி வரை கிடைக்கும். அந்த அளவிற்கு, செம்ம பிஸியான ஒரு டைம் டேபிளை போட்டு பணியாற்றி வருகிறது, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ.!

நாசாவே பயந்த திட்டத்தை செய்யும் இஸ்ரோ; தமிழர் தலைமையில் ஒரு மைல்கல்.!

நேத்து இன்னைக்கா கெத்து.? நம்ம இஸ்ரோ எப்போவுமே கெத்து தான் பா.! வருஷம் முழுக்க ஏகப்பட்ட சாதனைகளை பண்ணுறதும், அதை பாத்து அமெரிக்கா காரன் காண்டு ஆகுறதும், பாகிஸ்தான் காரன் கடுப்பு ஆகுறதும் வழக்கமான ஒன்று தானே.? புதுசா ஏதாச்சும் மேட்டர் இருந்தா சொல்லு.! என்று கேட்டால் - இருக்கு, ஒரு பிரெஷ் ஆன மேட்டர் இருக்கு.!

ரீயூசபிள் லான்ச் சிஸ்டம்.!

ரீயூசபிள் லான்ச் சிஸ்டம்.!

அந்த மேட்டரை புரிந்துகொள்ள, முதலில் ரீயூசபிள் லான்ச் சிஸ்டம் (ஆர்எல்எஸ்) என்றால் என்ன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ரீயூசபிள் லான்ச் சிஸ்டம் என்பது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரம் அல்ல, ஒரு மறுபயன்பாட்டு வெளியீட்டு முறை ஆகும். எளிமையாக கூறவேண்டும் எனில் மீண்டும் பயன்படுத்தப்படக்கூடிய ராக்கெட் ஆகும். நிச்சயமாக இது ஒரு விண்வெளி வெளியீட்டு முறையாகும்.

இது ரிஸ்க் இல்லையா.?

இது ரிஸ்க் இல்லையா.?

ஒரு முறை குடிச்ச டீ கிளாஸையே உடைக்கிற துபாய்காரங்க உலவும் உலகத்துல, ஒரு முறை யூஸ் பண்ண ராக்கெட்டை மீண்டும் யூஸ் பண்ணுறதா.? இது ரிஸ்க் இல்லையா.? என்ற கேள்வி எழுகிறது அல்லவா.? ரீயூசபிள் ராக்கெட் வளர்ச்சி என்பது, வட கொரியா நடத்தும் அணு ஆயுத சோதனை போன்றெதொரு, உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் மற்றும் அண்டை நாடுகளை அச்சமூட்டும் ஒரு "பப்ளிக் ஸ்டண்ட்" அல்ல. இதுவொரு அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சியாகும்.

14 ஆண்டுகள் கழித்து.!

14 ஆண்டுகள் கழித்து.!

கற்பனைக்கு எட்டாத அளவில், செலவுகள் மிச்சமாகும். அதனை கொண்டு இன்னொரு செயற்கைகோளே உருவாக்கலாம் என்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அதுமட்டுமின்றி இந்த ரீயூசபிள் லான்ச் சிஸ்டத்தில், விண்வெளி மாசு குறைப்பு உட்பட பல வகையான நன்மைகள் உண்டு. இவ்வாறான நன்மைகளை வழங்கும் ஒரு ரீயூசபிள் ராக்கெட்டை உருவாக்குவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. தனியார் விண்வெளி ஆராய்ச்சி மையமான எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ், அதன் முதல் ரீயூசபிள் ராக்கெட்டை உருவாக்க 14 ஆண்டுகள் எடுத்து கொண்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

நாசா செய்து பார்க்க தயங்கும் ரீயூசபிள் ராக்கெட்.!

நாசா செய்து பார்க்க தயங்கும் ரீயூசபிள் ராக்கெட்.!

நாசாவினால் கூட முடியாத (அல்லது செய்து பார்க்க தயங்கும்) ரீயூசபிள் ராக்கெட்டை, எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் செய்து முடித்தது, உலக விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனை ஆகும். அந்த திருப்புமுனையானது இந்திய விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றிலும் நிகழ்வுள்ளது. ஆம், சந்திரயான் -2 என்கிற மிக முக்கியமான விண்வெளி திட்டத்தை, வருகிற அக்டோபரில் முடித்த கையோடு, அடுத்த மாபெரும் திட்டமாக ரீயூசபிள் லான்ச் வெயிக்கல் டெக்னாலஜி டெமான்ஸ்டேட்டர் (re-usable launch vehicle technology demonstrator - RLV-TD) சோதனையை நிகழ்த்த, இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

Nuclear Weapons : எந்தெந்த நாடுகளிடம் எத்தனை அணுவாயுதங்கள் உள்ளன.? இந்தியாவின் நிலை என்ன.?
லேண்டிங் கியர் மற்றும் லோ சப்சோனிக்.!

லேண்டிங் கியர் மற்றும் லோ சப்சோனிக்.!

இதில் சுவாரசியமான விஷயம் என்னவெனில், ரீயூசபிள் ராக்கெட் சார்ந்த சில வேலைகளை, இஸ்ரோ சத்தமில்லாமல் முடித்து விட்டது. அதாவது லேண்டிங் கியர் மற்றும் லோ சப்சோனிக் உடனான விண்ட் டெனல் (Wind tunnel) ஆனது ஐஐடி கான்பூரில் சோதனை செய்யப்பட்டு விட்டது. அடுத்த கட்ட சோதனையில், வடிவமைப்பு மற்றும் வளர்ச்சி சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சுமந்து செல்லும் செயற்கைகோளை சுற்றுப்பாதைக்குள் விடுவித்துவிட்டு மீண்டு வரும் பரிசோதனைகள் நிகழ்த்தப்பட உள்ளது.

கே.சிவனும் உறுதிப்படுத்தி உள்ளார்.!

கே.சிவனும் உறுதிப்படுத்தி உள்ளார்.!

"நேவிகேஷனல் சாதனங்களின் உதவியுடன் ஆட்டோனமஸ் லேண்டிங்கை நிகழ்த்தப்போகும் இந்த ரீயூசபிள் பரிசோதனைக்கான லேண்டிங் ரன்வே தளம் அடையாளம் காணப்பட்டுள்ளது. நேவிகேஷனல் சாதனங்கள் மற்றும் அது தொடர்புடைய அமைப்புகள் நிறுவும் பணிகள் நடைபெற்று வருகிறது" என்று இந்த ரீயூசபிள் திட்டத்தின் கீழ் பணியாற்றும் விஞ்ஞானிகள் கருத்து கூறியுள்ளனர். இதை இஸ்ரோவின் தலைவர் ஆன கே.சிவனும் உறுதிப்படுத்தி உள்ளார். கூறப்படும் "ரீயூசபிள் ராக்கெட் பரிசோதனைகள் ஆனது பலகட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளது. ஆனால் இது, அடுத்த ஆண்டு தான் நிகழும். இந்த ஆண்டு, இஸ்ரோவின் முழு கவனமும் பல்வேறு வகையான விண்வெளி திட்டங்களில் மட்டுமே இருக்கும்" என்று கே.சிவன் கூறியுள்ளார்.

Best Mobiles in India

English summary
Isro plans orbital re-entry test for re-usable vehicle. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X