எல்லாரும் சாமிகிட்ட வேண்டிக்கோங்க! ISRO மட்டும் இதை செஞ்சிட்டா.. இனி நாம தான் கெத்து!

|

இஸ்ரோ அமைப்பு தொடர்ந்து பல புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஆர்எல்வி எனும் விண்கலத்தை ஓடுதளத்தில் தரையிறங்க வைக்கும் சோதனையை இஸ்ரோ அமைப்பு விரைவில் மேற்கொள்ளவுள்ளது.

2016-ம் ஆண்டு..

2016-ம் ஆண்டு..

கடந்த 2016-ம் ஆண்டு மீண்டும் பயன்படுத்தக்கூடிய அர்எல்வி விண்கலத்தை விண்ணில் ஏவி, அதைக் கடலில் இறக்கும் சோதனையை இஸ்ரோ மேற்கொண்டது. இந்நிலையில் ஆர்எல்வி விண்கலத்தை ஓடுதளத்தில் விமானம் போல் தரையிறங்கும் சோதனையை இஸ்ரோ விரைவில்
மேற்கொள்ளவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சக்கரங்கள் உதவியுடன் தரையிறங்கும்

சக்கரங்கள் உதவியுடன் தரையிறங்கும்

மேலும் இந்த பரிசோதனையின் போது ஆர்எல்வி விண்கலம் ஹெலகாட்டர் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு, பின்பு ஓடுதளத்தில் இருந்து 3 அல்லது 5 கி.மீ தூரத்தில் இருந்து விடுவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதன்பின் ஆர்எல்வி விண்கலம் விமானம் போல பறந்து வந்து, விமான தளத்தில் ஓடு பாதையில் சக்கரங்கள் உதவியுடன் தரையிறங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்ளோ டேட்டா வேணுமோ யூஸ் பண்ணிக்கோங்க.. வெறும் ரூ.500-க்கு அறிமுகமான புதிய BSNL பிளான்!எவ்ளோ டேட்டா வேணுமோ யூஸ் பண்ணிக்கோங்க.. வெறும் ரூ.500-க்கு அறிமுகமான புதிய BSNL பிளான்!

சித்ரதுர்கா

சித்ரதுர்கா

அதேபோல் இந்த சோதனை கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள விமான தளத்தில் மேற்கொள்ளப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக இதுபோன்ற பரிசோதனையை இஸ்ரோ மேற்கொள்வது இதுவே முதல்முறை.

யாரு சொன்னா.. ரூ.20,000 போட்டா தான் நல்ல TV வாங்க முடியும்னு? ரூ.10,000 போதும்! இதோ சாட்சி!யாரு சொன்னா.. ரூ.20,000 போட்டா தான் நல்ல TV வாங்க முடியும்னு? ரூ.10,000 போதும்! இதோ சாட்சி!

பருவநிலை நன்றாக இல்லை

பின்பு இதுதொடர்பாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியது என்னவென்றால், தற்போது பருவநிலை நன்றாக இல்லை. சாதகமான சூழ்நிலை நிலவும்போது, ஆர்எல்வி விண்கலத்தை ஓடுதளத்தில் தரையிறங்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.அதேபோல் இதுபோன்ற புதிய சோதனை கண்டிப்பாகப் பயனுள்ள வகையில் இருக்கும். குறிப்பாக இதன் மூலம் விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்தியா மேலும் வலிமை பெறும் என்றே கூறலாம்.

என்னப்பா சொல்றீங்க? நிஜமாவா! புது Phone வாங்க போனவர்களை அப்படியே நிப்பாட்டும் ஒரு தகவல்!என்னப்பா சொல்றீங்க? நிஜமாவா! புது Phone வாங்க போனவர்களை அப்படியே நிப்பாட்டும் ஒரு தகவல்!

ஆதித்யா எல்-1

ஆதித்யா எல்-1

இதுதவிர இஸ்ரோ அமைப்பு வரும் ஆண்டுகளில் நிலவுக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் விண்கலங்களை அனுப்புவது தொடர்பான திட்டப்பணிகளை வேகமாக மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக வரும் ஆண்டுகளில் சந்திரயான்-3 மற்றும் ஆதித்யா எல்-1 ஆகிய விண்கலங்களை விண்ணில் செலுத்த உள்ளது இஸ்ரோ அமைப்பு.

2 வருஷம் வாராண்டி.. அப்புறம் என்னப்பா? வாங்கிட வேண்டியது தானே! NOKIA G60 விற்பனை ஸ்டார்ட்!2 வருஷம் வாராண்டி.. அப்புறம் என்னப்பா? வாங்கிட வேண்டியது தானே! NOKIA G60 விற்பனை ஸ்டார்ட்!

ஆகாஷ் தத்வா

ஆகாஷ் தத்வா

சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனில் ஆகாஷ் தத்வா எனும் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற அலகாபாத் சார்பு இயற்பியல் ஆய்வகத்தின் இயக்குனர் அனில் பரத்வாஜ், இஸ்ரோவின் வருங்கால திட்டங்கள் குறித்துப் பேசினார்.

50எம்பி ரியர் கேமராவுடன் 5G போனை அறிமுகம் செய்து தெறிக்கவிட்ட இந்திய நிறுவனம்: கம்மி விலை.!50எம்பி ரியர் கேமராவுடன் 5G போனை அறிமுகம் செய்து தெறிக்கவிட்ட இந்திய நிறுவனம்: கம்மி விலை.!

இயக்குனர் அனில் பரத்வாஜ்

இயக்குனர் அனில் பரத்வாஜ்

அலகாபாத் சார்பு இயற்பியல் ஆய்வகத்தின் இயக்குனர் அனில் பரத்வாஜ் கூறியது என்னவென்றால், ஜப்பான் விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைந்து நிலவின் இருண்ட மறுபக்கத்திற்கு இஸ்ரோவின் விண்கலத்தை அனுப்பும் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

Airtel, Jio-வை ஓடவிட்டு மிரட்டிய BSNL திட்டம்.! உடனே ரீசார்ஜ் செய்தால் நீங்க லக்கி.!Airtel, Jio-வை ஓடவிட்டு மிரட்டிய BSNL திட்டம்.! உடனே ரீசார்ஜ் செய்தால் நீங்க லக்கி.!

ரோவர் மற்றும் லேண்டர்

ரோவர் மற்றும் லேண்டர்

அதாவது ஜப்பானில் உருவாக்கப்பட்ட ராக்கெட் மூலம் இஸ்ரோவால் தயாரிக்கப்பட்ட ரோவர் மற்றும் லேண்டர் கருவிகளை நிலவின் தென் துருவத்திற்கு அனுப்பி வைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அனில் பரத்வாஜ் கூறினார். குறிப்பாக சூரிய வெளிச்சம் படாத நிரந்தர இருளைக் கொண்ட நிலவின் மறுபக்கத்தைக் குறித்து ஆய்வு செய்ய இந்த திட்டம் உதவும் என்று கூறியுள்ளார் அவர்.

சந்திராயன்-3

குறிப்பாக இந்த திட்டம் நிறைவேறினால் நிலவு ஆராய்ச்சியில் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கலாம் என்று கூறியுள்ளார் அனில் பரத்வாஜ். மேலும்சந்திரயான்-3 அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Image Credit:isro.gov.in, isro, indianexpress

Best Mobiles in India

English summary
ISRO to conduct first runway landing experiment of reusable launch vehicle: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X