Home
Scitech

ஒவ்வொரு 12 நாட்களுக்கும் 2 முறை.. விண்வெளியில் NISAR செய்யப்போகும் வேலை.. வாய்பிளக்கும் உலக நாடுகள்!

இஸ்ரோ (ISRO) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (Indian Space Research Organization) ஆனது ஜூலை 30 ஆம் தேதிக்குள் ஜிஎஸ்எல்வி-எஸ்16 ராக்கெட் (GSLV-S16 Rocket) மூலம் நிசார் (NISAR) செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் டாக்டர் வி. நாராயணா (ISRO Chairman Dr V Narayana) அறிவித்து உள்ளார்.

ஜூலை 30 க்குள் ஜிஎஸ்எல்வி-எஸ்16 ராக்கெட் மூலம் நிசார் என்று சுருக்கமாக அழைக்கப்படும் நாசா-இஸ்ரோ சிந்தெடிக் அபெர்க்ஷர் ரேடார் செயற்கைக்கோளை (NASA-ISRO Synthetic Aperture Radar Satellite) விண்ணில் செலுத்த உள்ளோம் என்று இஸ்ரோ தலைவர் டாக்டர் வி. நாராயணன் கூறியதாக ஏஎன்ஐ (ANI) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கூடவே அவர் ககன்யான் மிஷனுக்கு (Gaganyaan Mission) முன் 3 ஆளில்லா பயணங்களை (Uncrewed missions) மேற்கொள்வோம் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.

விண்வெளியில் NISAR செய்யப்போகும் வேலை!

இஸ்ரோ தலைவரின் கூற்றுப்படி வருகிற டிசம்பரில், ஹுமனாய்ட் மிஷன் (Humanoid mission) ஒன்று நடத்தப்படும், இந்த மிஷனின் போது வ்யோமித்ரா என்கிற ரோபோ (Robot Vyommitra) விண்வெளிக்கு அனுப்பப்படும். இந்த மிஷன் வெற்றியடைந்தால், அடுத்த ஆண்டு இரண்டு ஆளில்லா மிஷன்கள் மேற்கொள்ளப்படும். பின்னர் மார்ச் 2027 இல் அனைத்து சோதனைகளுக்கும் பிறகு ககன்யான் மிஷன் ஏவப்படும்.

நிசார் மிஷனின் நோக்கம் என்ன (What is the Purpose of NISAR Mission)? ஜூலை 30 ஆம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்பட உள்ள நிசார் மிஷனின் மூலம், விஞ்ஞானிகள் பூமியின் மாறிவரும் மேற்பரப்பை (Earth's ever-changing surface) ஆய்வு செய்து பகுப்பாய்வு செய்வதை நோக்கமாக கொண்டுள்ளனர்.

நாசாவின் கூற்றுப்படி, இந்த செயற்கைக்கோள் பூகம்பங்கள், நிலச்சரிவுகள் மற்றும் எரிமலைகள் (Earthquakes, landslides and volcanoes) உள்ளிட்ட நில சிதைவை அளவிடும். இந்த மிஷனின் கீழ் கிடைக்கும் நுண்ணறிவுகளை கொண்டு அறிவியல் மற்றும் பேரிடர் மீட்புக்கான தரவை உருவாக்க உதவும்.

நாசா (NASA) என்று சுருக்கமாக அழைக்கப்படும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (National Aeronautics and Space Administration) கூற்றுப்படி, நிசார் மிஷன் வழியாக பனிப்பாறைகள் மற்றும் பனிக்கட்டிகள் (Glaciers and Ice sheets) எவ்வளவு முன்னேறுகின்றன அல்லது பின்வாங்குகின்றன என்பதை கண்காணிக்க முடியும். மேலும் உலகளாவிய கார்பன் சுழற்சியை (Global carbon cycle,) பற்றிய நுண்ணறிவுகளுக்காக காடுகள் மற்றும் ஈரநிலங்களின் வளர்ச்சி மற்றும் இழப்பையும் கண்காணிக்க முடியும்.

நிசார் சாட்டிலைட் ஆனது ஒவ்வொரு 12 நாட்களுக்கும் இரண்டு முறை பூமி கிரகத்தின், கிட்டத்தட்ட அனைத்து நிலம் மற்றும் பனியால் மூடப்பட்ட மேற்பரப்புகளின் இயக்கத்தை அளவிடும். பிற செயற்கைக்கோள்கள் மற்றும் கருவிகளின் அளவீடுகளுடன் இணைந்து, நிசார் வழியாக கிடைக்கும் தரவுகள் ஆனது பூமியின் மேற்பரப்பு எவ்வாறு கிடைமட்டமாகவும் செங்குத்தாகவும் நகர்கிறது (How Earth's surface moves horizontally and vertically) என்பதற்கான விரிவான படத்தை வழங்கும்.

நிசார் மிஷன் ஆனது மற்ற எர்த் மிஷன்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது? நிசார் மிஷன் ஆனது 2 வகையான ரேடார்களை (2 Types of RADARS) கொண்டுள்ளது, ஒன்று 10-இன்ச் (25-சென்டிமீட்டர்) அலைநீளம் கொண்ட எல்-பேண்ட் அமைப்பை (L-band system with 10-inch wavelength) கொண்டுள்ளது, மற்றொன்று 4-இன்ச் (10-சென்டிமீட்டர்) அலைநீளம் கொண்ட எஸ்-பேண்ட் அமைப்பை (S-band system with a 4-inch wavelength) கொண்டுள்ளது.

ஆக நிசார் மிஷனின் வெற்றிகரமான ஏவப்படும் பட்சத்தில் இதுதான் டூயல் ரேடார் கொண்ட முதல் பூமி-கண்காணிப்பு செயற்கைக்கோளாக (First Earth-observing Satellite with Dual radar) இருக்கும். நிசார் மிஷன் வழியாக கிடைக்கும் தரவுகளை பயன்படுத்தி ஆய்வு செய்யப்படும் முக்கிய பகுதிகள் - சுற்றுச்சூழல் அமைப்புகள், கிரையோஸ்பியர் (Cryosphere) மற்றும் திட பூமி (Solid Earth) ஆகியவையாகும். இது தவிர, மண்-ஈரப்பதம் மற்றும் நீர்வள கண்காணிப்பு (Water Resources) பற்றிய ஆழமான புரிதலுக்கும் நிசார் மிஷனின் தரவுகள் உதவும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
ISRO NASA NISAR Mission Launch By July 30 Purposes How its different from other Earth Missions
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X