இஸ்ரோவை உலகறிய செய்த 4 பச்சை தமிழர்கள்.! பாகிஸ்தான், சீனாவுக்கு ஆப்பு.!

|

இந்தியாவில் இஸ்ரோ என்னும் பெரிய யானைனைக்கு இவர்கள் தமிழ் பால் மற்றும் தொழில்நுட்ப அறிவூட்டி உலககை அறிய செய்துள்ளனர். இவர்கள் நான்பேரும் நான்முக சிங்கமாக செயல்பட்டு இந்தியாவை உலக அளவில் நிலை நிறுத்தியுள்ளனர்.

இஸ்ரோவை உலகறிய செய்த 4 பச்சை தமிழர்கள்! பாகிஸ்தான்,சீனாவுக்கு ஆப்பு.!

இதனால் தமிழகத்திற்கே பெருமை சேர்த்துள்ளனர். இன்று இவர்களால் இஸ்ரோ உலகளவில் தன்னாட்சி பெற்றும் வர்த்தக மையமாக விளங்குகின்றது.

சுதந்திரத்திற்கு பிறகு:

சுதந்திரத்திற்கு பிறகு:

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, பாகிஸ்தானை விடவும் அறிவியல் வளர்ச்சியில் வேகமாக முன்னேறி வருகின்றது. மேலும், இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி மையம் அடைந்துள்ள வளர்ச்சியை கண்டு பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் வாயை பிளக்க வைத்துள்ளது.

இன்று சந்திராயன், மங்கள்யான் வரை இஸ்ரோவின் சத்தம் வெளிநாடுகளுக்கு இந்தியாவின் பெயரை தூக்கி வந்த 4 பச்சை தமிழர்களைத்தான் நாம் பார்க்க இருக்கின்றோம்.

ஏ.பி.ஜே. அப்துல்கலாம்:

ஏ.பி.ஜே. அப்துல்கலாம்:

முன்னாள் குடியரசு தலைவர் விஞ்ஞானி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ராணுவம், விண்வெளி, விமானம் உள்ளிட்ட ஆராய்ச்சி துறைகளில் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டவர். ஏவுகணை உருவாக்கம் கண்டுப்பிடிப்புகளில் இவரை உச்சத்துக்கு கொண்டு சென்றது.

சுமார் 40 ஆண்டுகால ஆராய்ச்சி பணிகளில் பல ஏவுகணைகளை உருவாக்கியுள்ளார். அதில் செயற்கைகோள்களை அனுப்பி பல சோதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

கல்வி படிப்பு-பணி:

கல்வி படிப்பு-பணி:

ராமேஸ்வரம் தொடக்கப் பள்ளியில் தனது பள்ளிக் கல்வியை தொடங்கினார். திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பாடத்தில் 1954-ல் பட்டம் பெற்றார். சென்னையில் உள்ள மெட்ராஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் (MIT) விண்வெளி அறிவியல் பாடத்தை தேர்ந்தெடுத்து, 1960-ம் பட்டம் பெற்றார்.

பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) விமான அபிவிருத்தி பிரிவில் முதன்மை விஞ்ஞானியாக சேர்ந்தார். அங்கு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்துக்காக வடிவமைத்துக் கொடுத்தார்.

பிரபல விண்வெளி விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் கீழ் இயங்கி வந்த குழுவில் (INCOSPAR) ஒரு அங்கமாகவும் அப்துல் கலாம் இருந்தார்.

ரோஹினி செயற்கைகோள்:

ரோஹினி செயற்கைகோள்:

1980-ல் எஸ். எல். வி-III ஏவுகணை 'ரோஹினி' என்ற செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் கலாம் சேர்ந்தது போன்றவை மிகப்பெரிய சாதனையாகக் கருதப்பட்டது. எஸ். எல். வி. திட்டத்தில் வேலை செய்ய ஆரம்பித்தப் பிறகுதான் தன்னையே கண்டுபிடித்ததாகக் கூறுவார்.

கலாம் 1965-ல் பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் விண்கலத் திட்டத்தில் தனித்துப் பணியாற்றினார். 1969-ல், அரசாங்கத்தின் அனுமதிப் பெற்று மேலும் பல பொறியாளர்களை அந்தத் திட்டத்தில் சேர்த்துக் கொண்டார்.

வெளிநாடுகளுக்கு பயணம்:

வெளிநாடுகளுக்கு பயணம்:

1963-64 இல், அவர் நாசாவின் லாங்க்லியின் ஆராய்ச்சி மையம், கிரீன்ஃபீல்டில் உள்ள கோடார்ட் விண்வெளி மையம், மேரிலாண்ட் மற்றும் விர்ஜீனியா கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள வால்லோப்ஸ் விமான தளம் ஆகிய இடங்களுக்கு சென்று வந்தார்.

1970க்கும் 1990க்கும் இடையில் உருவாக்கப்பட்டு ஏவப்பட்ட போலார் எஸ்.எல்.வி. மற்றும் எஸ்.எல்.வி.3 ஆகிய ஏவுகணை திட்ட முயற்சிகள் வெற்றிகரமாக அமைந்தன.

ரோகிணி வெற்றி:

ரோகிணி வெற்றி:

தேசத்தின் முதல் அணு ஆயுத சோதனையான பொக்ரான் அணுகுண்டு திட்டத்தைக் காண்பதற்காக முனைய எறிகணை ஆய்வகத்தின் (TBRL) பிரதிநிதியாக அழைக்கப்பட்டார்.

1970-ல், எஸ். எல். வி ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோஹிணி - 1 விண்வெளியில் ஏவப்பட்டது இஸ்ரோவின் சாதனையாக இருக்கின்றது.

சிவதாணுப்பிள்ளை:

சிவதாணுப்பிள்ளை:

1947 ஜூலை 15 இல் தமிழ்நாட்டிலுள்ள நாகர்கோவிலில் பிறந்தார் . இவர் டிவிடி உயர்நிலைப்பள்ளி, நாகர்கோவிலில் பள்ளியை முடித்திருக்கிறார். மின் பொறியியல் இளநிலை இருந்து தியாகராஜர் பொறியியல் கல்லூரியல் படித்தார்.

1991ல் ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில், பின்னர் 1996ம் ஆண்டில் சாவித்ரிபாய் ஃபூலே புனே பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பிஎச்டி படித்தார்.

1SRO மற்றும் DRDO:

1SRO மற்றும் DRDO:

சிவதாணுப்பிள்ளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சேவை பணியாற்றினார். மேலும், இஸ்ரோ மற்றும் டி.ஆர்.டி.ஓ. மற்றும் பணியாற்றியுள்ளார் விக்ரம் சாராபாய் , சதீஷ் தவான் மற்றும் ஏபிஜே அப்துல் கலாம் ஆகிய விண்வெளி மையத்திலும் பணியாற்றினார்.

 பிஎஸ்எல்வி-க்கு முக்கிய பங்கு:

பிஎஸ்எல்வி-க்கு முக்கிய பங்கு:

சிவாதாணுப்பிள்ளை 1986 ல் டி.ஆர்.டி.ஓவில் இணைந்தார். மேலும் APG கலாம் தலைமையில் IGMDP இன் திட்ட இயக்குநராக இருந்தார் . எஸ்.எல்.வி. III வெற்றிகரமான வளர்ச்சிக்காக ஒரு முக்கிய குழு உறுப்பினராகவும், ISRO க்கான PSLV கட்டமைப்பின் பரிணாம வளர்ச்சிக்காகவும் அவரின் செயல்பாடு அமைந்தது. இஸ்ரோவில் பெரும் வளர்ச்சிக்கு இவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.

பிரமோஸ் ஏவுகணை தந்தை:

பிரமோஸ் ஏவுகணை தந்தை:

சிவதாணுப்பிள்ளை பிரமோஸ் ஏவுகணையின் தந்தை என அழைக்கப்படுகின்றார். இந்தியா-ரஷ்யா கூட்டு உடன்படிக்கையில் தயாரிக்கப்பட்டாலும், அதிகவேக பிரமோஸ் ஏவுகணையை உருவாக்கினார்.

பிரமோஸை சந்தைபடுத்தினார். ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த கேரள ஹைடெக் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தை பிரமோஸ் ஏர்பேஸ் நிறுவனம் வாங்கியது. இந்த நிறுவனத்திற்கு தலைமை நிர்வாகியாகவும் செயல்பாட்டார்.

கே.சிவன்:

கே.சிவன்:

கே. சிவன் இஸ்ரோவுக்கு தலைவராக இருக்கின்றார். விக்ரம் சாராபாய் விண்வெளி நிறுவனத்தின் இயக்குநராக 2015ம் ஜூன்1 முதல் இருந்து வருகின்றார். பி.எஸ்.எல்.வி திட்டத்தில் முக்கிய பணியாற்றினார்.

கடந்த 33 ஆண்டுகளாக இந்தியாவிலிருந்து ஏவப்பட்ட செயற்கைக் கோள்களில் சிவனின் பங்களிப்பு இருந்தது. ராக்கெட் அமைப்பு தொடர்பாக சித்தாரா என்னும் பெயரில் மென்பொருளை உருவாக்கினார்.

படிப்பு:

படிப்பு:

சிவனின் சொந்த ஊர் நாகர்கோவிலுக்கு அண்மையில் உள்ள வல்லங்குமாரவிளை என்னும் சிற்றூர் ஆகும். தமிழ் வழியில்[2] பள்ளிக் கல்வியை கற்ற இவர் கணினியில் இளம் அறிவியல் பட்டமும் பின்னர் சென்னையில் உள்ள எம்.ஐ டி.யில் ஏரோநாட்டிகல் பொறியியலும் படித்தார்.

பணியில் சேர்ந்தார்:

பணியில் சேர்ந்தார்:

பெங்களுரில் இந்தியன் அறிவியல் நிறுவனத்தில் முதுஅறிவியல் பட்டம் பெற்றார். 2006 ஆம் ஆண்டில் மும்பை இந்திய தொழில் நுட்பக் கழகத்தில் விண்வெளிப் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார். 1982 ஆம் ஆண்டில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் முதன்முதலாகப் பணியில் சேர்ந்தார்.

பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி, சுகன்யான்:

பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி, சுகன்யான்:

மேலும், பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ஆகிய வகையை சேர்ந்த ராக்கெட் வெற்றி பெறுவதற்கும் முக்கிய பங்கு வகித்துள்ளார். சந்திராயன்-1, மங்கள்யான், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் சுகான்யான் திட்டத்திற்கும் தலைமை தாங்கி பணியாற்றி வருகின்றார்.

இந்தியாவை வெற்றிப்பாதைக்கு எடுத்துச் சென்றுள்ளது.

 மயில்சாமி அண்ணாதுரை:

மயில்சாமி அண்ணாதுரை:

மயில்சாமி அண்ணாதுரை பொள்ளாச்சி கோதவாடியை சேர்ந்தவர். 1958ல் பிறந்தார். தமிழ் வழியில் படித்தாலும், இன்று உலகையே இந்தியாவை திரும்பி பார்க் வைத்துள்ளார். பொறியல் படிப்பை பொள்ளாச்சி மகாலிங்கம் கல்லூரியிலும், முதுகலை படிப்பை பிஎஸ்ஜி கல்லூரியிலும் படித்தார்.

உழைப்பு:

உழைப்பு:

1982ல் இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தில் ஒரு அடிமட்ட அறிவியல் ஆய்வராச் சேர்ந்து, தனது உழைப்பாலும் கண்டுபிடிப்புகளாலும் படிப்படியாக உயர்ந்து இன்று இஸ்ரோவில் ரு முக்கி ஆராய்சியாளராக உள்ளார். 8 இந்திய தேசிய செயற்கைக் கோள்களின் செயல் திட்ட இயக்குனராகச் பணியாற்றியுள்ளார்.

சந்திராயன்-1:

சந்திராயன்-1:

2004ல் சந்திராயன்-1க்கு திட்ட இயக்குனராக பணியாற்றினார். இதன் மூலம் நிலவில் தண்ணீர் இருப்பதை சந்திராயன்-1 கண்டறிந்து உலகதிற்கு முதன் முதலில் கூறியது.

மேலும், சந்திராயன்-2 திட்ட இயக்குநராக பணியாற்றி வருகின்றார்.

மயில்சாமியின் உயர்வு:

மயில்சாமியின் உயர்வு:

இந்தியாவின் முதல் நுண்ணலைத் தொலையுணர் செயற்கைக் கோள் உட்பட அனைத்துத் தொலையுணர் செயற்கைக் கோள்கள், இந்தியாவின் முதல் செவ்வாய்ப் பயணச் செயற்கைக்கோள், இந்தியாவின் இரண்டாவது நிலவுப் பயணம் போன்ற அறிவியல் செயற்கைக் கோள்களுடன் இந்தியக் கல்லூரி மாணவர்களின் செயற்கைக் கோள்கள் எனப் பெரிய செயற்கைக் கோள்ப்பட்டாளத்தின் தலைமைத் திட்ட இயக்குனராக உயர்ந்திருக்கிறார்.

 தமிழர்களால் பெருமை:

தமிழர்களால் பெருமை:

இஸ்ரோவை இந்த இஸ்ரோவை மட்டும் இல்லாமல் இவர்கள் ஒட்டு மொத்த இந்தியாவையும் உலகிற்கு உயர்த்தி காட்டியுள்ளனர். இவர்கள் இந்தியா என்னும் நான்முக சிங்கத்தை இந்த தமிழக நான்முக சிங்கள் தான் உலகிற்கு உயர்த்தி காட்டியுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
isro made popular sivan sivathanupillai abdul kalam mayilsamy annadurai : Read more at this tamil.gizbot.com

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X