நல்லதே நடக்கும்! 13 ஆண்டுகளுக்கு பிறகு ISRO செய்யப்போகும் காரியம்! கொஞ்சம் மிஸ் ஆனாலும் மானம் போயிடும்!

|

13 ஆண்டுகளுக்கு பிறகு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ (ISRO) ஒரு முக்கியமான விண்வெளி மிஷனை (Space Mission) தன் கையில் எடுத்துள்ளது!

அது என்ன மிஷன்? மானம், மரியாதை என்று பேசும் அளவிற்கு அதில் அப்படி என்ன முக்கியத்துவம் உள்ளது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

வருகிற நவம்பர் 26 ஆம் தேதியன்று!

வருகிற நவம்பர் 26 ஆம் தேதியன்று!

வருகிற சனிக்கிழமை அதாவது வருகிற நவம்பர் 26 ஆம் தேதியன்று - ஒன்றல்ல, இரண்டல்ல - நம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, ஒரே நேரத்தில் மொத்தம் 9 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த உள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படவுள்ள அந்த 9 செயற்கைகோள்களில் 2 செயற்கைகோள்கள் ஆனது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது!

அதில் ஒன்று - 13 ஆண்டுகளுக்கு பிறகு செலுத்தப்படும் இஸ்ரோவின் "ஒரு தொடர்ச்சியான" செயற்கைகோள் ஆகும்; இரண்டாவது இஸ்ரோவின் மானம் மரியாதையை உள்ளடக்கிய அண்டை நாட்டின் ஒரு செயற்கைகோள் ஆகும்!

ஜஸ்ட் மிஸ்.. பூமிக்கு மேலே விழுந்த ஓட்டை.. உள்ளே புகுந்த விசித்திரமான ஒளி.. நவ.3 இரவு நடந்தது என்ன?ஜஸ்ட் மிஸ்.. பூமிக்கு மேலே விழுந்த ஓட்டை.. உள்ளே புகுந்த விசித்திரமான ஒளி.. நவ.3 இரவு நடந்தது என்ன?

முதலில் 1999.. பின்னர் 2009.. இப்போது 2022!

முதலில் 1999.. பின்னர் 2009.. இப்போது 2022!

13 ஆண்டுகளுக்கு பிறகு செலுத்தப்படும் ஒரு செயற்கைகோள் என்று நாங்கள் இங்கே குறிப்பிடுவது - இஸ்ரோவின் ஓஷன்சாட்-3 (Oceansat-3) என்கிற செயற்கைகோளே ஆகும்.

ஓஷன்சாட்-3 என்பது ஒரு புவி கண்காணிப்பு செயற்கைகோள் (Earth Observation Satellite) ஆகும். ஓஷன்சாட்-3 என்கிற பெயரின் வழியாகவே இது இஸ்ரோவின் மூன்றாவது புவி கண்காணிப்பு செயற்கைகோள் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருக்கலாம்.

முதல் ஓஷன்சாட் சாட்டிலைட் ஆனது கடந்த 1999 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது; பின்னர் ஓஷன்சாட்-2 ஆனது கடந்த 2009 ஆம் ஆண்டு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து 13 ஆண்டுகள் கழித்து ஓஷன்சாட்-3 ஆனது விண்ணில் செலுத்தப்பட உள்ளது!

மானமும் முக்கியம்.. மரியாதையும் முக்கியம்!

மானமும் முக்கியம்.. மரியாதையும் முக்கியம்!

முன்னரே குறிப்பிட்டபடி, Oceansat-3 சாட்டிலைட் உடன் மேலும் 8 செயற்கைகோள்கள் அனுப்பப்பட உள்ளன. அதில் ஒன்று - இந்தியாவும் பூட்டானும் இணைந்து உருவாக்கிய 30 சென்டிமீட்டர் அளவிலான ஒரு நானோ சாட்டிலைட்டும் அடங்கும்!

இது பூட்டானின் சாட்டிலைட் ஆக இருந்தாலும் கூட.. சொன்னபடி விண்ணில் செலுத்தப்பட்டு, சொன்ன இடத்தில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்படாவிட்டால் அது இஸ்ரோவின் ஒரு தோல்வியாகவும் பதிவு செய்யப்படும் என்பதால், இதுவும் ஒரு முக்கியமான விண்வெளி மிஷன் ஆக கருதப்படுகிறது!

அதுமட்டுமின்றி - இஸ்ரோவின் மூலம், இந்த ஒரு ஆண்டில் மட்டுமே சன் சின்க்ரோனஸ் ஆர்பிட்டில் (Sun Synchronous Orbit) ஏவப்பட உள்ள ஐந்தாவது செயற்கைகோளும் இதுவாகும்!

கல் நெஞ்ச காரங்க.. கருணையே காட்டாத 7 கம்பெனிகள்.. கொத்து கொத்தாக பணி நீக்கம்.. இருப்பதிலேயே யார் மோசம்?கல் நெஞ்ச காரங்க.. கருணையே காட்டாத 7 கம்பெனிகள்.. கொத்து கொத்தாக பணி நீக்கம்.. இருப்பதிலேயே யார் மோசம்?

நல்லதே நடக்கும்!

நல்லதே நடக்கும்!

ஒரே நேரத்தில் 104 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்திய அனுபவம் / பெருமை கொண்ட இஸ்ரோவிற்கு வெறும் 9 சாட்டிலைட்களை விண்ணில் செலுத்துவதில் - பெரும்பாலும் - எந்த சிக்கலும் இருக்க போவதில்லை!

ஆனால் இங்கே கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால் - அந்த 30 சென்டிமீட்டர் கனசதுர செயற்கைக்கோள் ஆனது பூட்டான் பொறியாளர்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதே ஆகும்!

மேலும் அது பூட்டானிற்கு "மேலே மிதந்தபடி" பூமியின் மேற்பரப்பை படம்பிடிக்க உள்ளது. வெறும் 15 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள் ஆனது ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முதல் மூன்று முறையாவது பூட்டானின் மேற்பரப்பை 'கவர்' செய்யும் என்றும் கூறப்படுகிறது.

இது எல்லாத்துக்கும் காரணம் நம்ம பிரதமர் மோடி போட்ட கையெழுத்து தான்!

இது எல்லாத்துக்கும் காரணம் நம்ம பிரதமர் மோடி போட்ட கையெழுத்து தான்!

இந்நேரம்.. "நாம் ஏன் பூட்டானின் செயற்கைகோளை அனுப்ப வேண்டும்?" என்கிற கேள்வி உங்களுக்குள் எழுந்து இருக்கலாம். அதற்கு காரணம் வேறு யாரும் இல்லை - நம் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி தான்!

கடந்த 2019 ஆம் ஆண்டு நம் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, பூட்டானின் தலைநகர் ஆன திம்புவிற்கு சென்றிருந்த போது, செயற்கைக்கோளின் கூட்டு மேம்பாட்டிற்கான ஒப்பந்தம் (Joint development of the satellite) ஒன்றில் கையெழுத்திட்டார்.

அதனொரு பகுதியாகவே பூட்டானின் செயற்கைகோளை, இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது!

பங்கம் செய்த சிங்கத்தின் பிள்ளை.. Airtel யூசர்களே மனச கல் ஆக்கிக்கோங்க.. இல்ல Jio-க்கு மாறிடுங்க!பங்கம் செய்த சிங்கத்தின் பிள்ளை.. Airtel யூசர்களே மனச கல் ஆக்கிக்கோங்க.. இல்ல Jio-க்கு மாறிடுங்க!

இதெல்லாம் சரி... ஓஷன்சாட்-3 க்கு என்ன வேலை?

இதெல்லாம் சரி... ஓஷன்சாட்-3 க்கு என்ன வேலை?

பொதுவாகவே, இஸ்ரோவின் ஓஷன்சாட் சீரிஸ் செயற்கைகோள்கள் ஆனது பூமியை கண்காணிக்கவும் நீர்நிலைகளை கண்காணிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.

அதே போன்ற நோக்கத்திற்காகத்தான் ஓஷன்சாட்-3 செயற்கைகோளும் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி, முதல் ஓசன்சாட் ஆனது 1999 ஆம் ஆண்டு பூமிக்கு மேலே 720 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போலார் சன் சின்க்ரோனஸ் (Polar Sun Synchronous) சுற்றுப்பாதையில் ஏவப்பட்டது.

ஆகஸ்ட் 8, 2010-ல் கதை முடிந்தது!

ஆகஸ்ட் 8, 2010-ல் கதை முடிந்தது!

ஓஷன்சாட்-1 செயற்கைக்கோள் ஆனது கடல்சார் ஆய்வுகளுக்கான ஓஷன் கலர் மானிட்டர் (OCM) மற்றும் மல்டி-ஃப்ரீக்வென்சி ஸ்கேனிங் மைக்ரோவேவ் ரேடியோமீட்டர் (MSMR) ஆகியவற்றைக் கொண்டு சென்றது. இது கடந்த ஆகஸ்ட் 8, 2010 வரை மொத்தம் 11 ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டது.

அடுத்ததாக 2009 ஆம் ஆண்டில், PSLV-C14 மிஷனின் ஒரு பகுதியாக ஓசன்சாட்-2 விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த மிஷனில் மேலும் மூன்று பேலோடுகள் இருந்தன. அது ஓசிஎம் எனப்படும் ஓஷன் கலர் மானிட்டர் (Ocean Colour Monitor), எஸ்சிஏடி (SCAT) எனப்படும் Ku-band Pencil Beam Scatterometer மற்றும் இத்தாலிய விண்வெளி ஏஜென்சியால் உருவாக்கப்பட்ட வளிமண்டலத்திற்கான ரேடியோ ஒக்குல்டேஷன் சவுண்டர் (Radio Occultation Sounder for Atmosphere - ROSA) ஆகும்!

வருகிற நவம்பர் 26 ஆம் தேதியன்று விண்ணில் செலுத்தப்பட உள்ள மூன்றாவது ஓசன்சாட் சாட்டிலைட் உடன் என்னென்ன கருவிகள் அனுப்பப்பட உள்ளது என்பது பற்றிய கூடுதல் விவரங்கள் அது ஏவப்படுவதற்கு முந்தைய நாட்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

Photo Feature: ISRO, Wikipedia, NASA

Best Mobiles in India

English summary
ISRO launching its next oceansat sattelite after 13 years along with Bhutan satellite on Nov 26th

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X