இதான்டா இஸ்ரோ.. இதான்டா சாதனை..!!

Written By:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி துறையானது அனுதினமும் ஒவ்வொரு புதிய மைல்கல்லை விண்வெளியில் பதித்துக் கொண்டே தான் இருக்கிறது என்பதும், உலக நாடுகள் இஸ்ரோவுடன் இணைந்து செயல்பட வரிசைக் கட்டி நிற்பதும் நாம் அறிந்த ஒன்றே..!

அதற்கு சமீபத்தில் சொந்த ஜிபிஎஸ் நிறுவி அசாத்திய இஸ்ரோ அதனை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் முயன்று பார்க்காத ரீயுசபில் ராக்கெட்தனை (மீண்டும் பயன்படுத்தக்கூடிய விண்கலம்) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி பரிசோதனை செய்து சாதித்தது. வெற்றிகள் குவித்த அதே உற்சாகத்துடன் அடுத்த மைல்கல்லை குறி வைத்து விட்டது இந்தியாவின் இஸ்ரோ..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
உலக சாதனை :

#1

அடுத்த மாதம் (ஜூன்) விண்வெளி சரித்திரத்தில் உலக சாதனை ஒன்றை படைக்க உள்ளது இஸ்ரோ.அதாவது, ஒரே ஏவுதலில் மொத்தம் 22 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இருக்கிறது..!

வரைபட செயற்கைக்கோள் :

#2

அந்த 22 செயற்கைகோள்களில் ஒரு வரைபட செயற்கைக்கோள் (cartographic series satellite) ஒன்றும் அடக்கம் என்று இஸ்ரோவின் தலைவர் கிரண் குமார் தெரிவித்துள்ளார்.

மூன்று :

#3

அதுமட்டுமின்றி செலுத்தப்படும் 22 செயற்கைகோள்களில் மூன்று இந்தியாவிற்கானது, மீதமுள்ளவைகள் வணிக உடன்பாட்டின் கீழ் வரும் பிற உலக நாடுகளின் செயற்கைகோள் ஆகும்.

பட்டியல் :

#4

இந்த ஏவுதலில் இடம்பெறும் செயற்கைகோள்களுக்கு உரிமையான பிற உலக நாடுகளின் பட்டியல் : அமெரிக்கா, கனடா, இந்தோனேஷியா மற்றும் ஜெர்மனி..!

பவர்ஹார்ஸ் :

#5

இந்த ஏவுதலுக்கு இஸ்ரோவின் பவர்ஹார்ஸ் (Powerhorse) ஆன போலார் ராக்கெட் பி.எஸ்.எல்.வி சி34 பயன்படுத்தப்படும் என்று விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குனர் கே.சிவா தகவல் அளித்துள்ளார்.

2008 :

#6

இதற்கு முன்பு 2008-ஆம் ஆண்டில் இஸ்ரோ, ஒரே ஏவுதலில் மொத்தம் 10 செயற்கைகோள்களை தான் விண்வெளியின் சுற்றுப்பாதைக்குள் செலுத்தியுள்ளது.

ரேடார் சென்சார் :

#7

பி.எஸ்.எல்.வி செலுத்தப்பட்ட உடனே பிரதிபலிப்பு அளவிடும் நுண்ணலை ரேடார் சென்சார் ஆன ஸ்கட்டரோமீட்டர் (Scatterometer) செலுத்தப்பட இருக்கிறது.

வெப்பநிலை :

#8

அதனை தொடர்ந்து இணை சுற்று செயற்கைக்கோள்களின் செங்குத்து வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் சுயவிவரங்களை வழங்கும் இன்சாட் 3 டிஆர் (INSAT 3DR) செலுத்தப்பட இருக்கிறது.

 காலடி :

#9

மறுபயன்பாட்டு ராக்கெட் வளர்ச்சியில் காலடி எடுத்து வைத்துள்ளதால் விண்வெளி ஆய்வுகளுக்காக செய்யப்படும் செலவு பெருமளவு குறையும் ஆகையால் மேலும் பல விண்வெளி மைல்கல்களை அசாதாரணமாக இஸ்ரோ எட்டவிருகிறது என்பதில் சந்தேகமே இல்லை.

வெற்றிகரமான சோதனை :

#10

முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வெற்றிகரமான வெளியீட்டு வாகன சோதனை பற்றி மேலும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

மேலும் படிக்க :

#11

சாத்தியமா..? இந்த பிரபலங்கள் எல்லாம் டைம் டிராவலர்களா.!??


ஹிட்லரின் நாஸி : கதவுகளுக்கு பின் நடந்த அருவருப்பான சோதனைகள்..!


என்னடா இது புது குழப்பம்..!? பூமிக்கு வந்த 'சத்திய' சோதனை..?!

தமிழ் கிஸ்பாட் :

#12

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
ISRO to launch 22 satellites in one mission next month. Read more about this in Tamil GizBOt.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot