Home
Scitech

"வாய் பேசிய" நாடுகள் இப்போது வரிசையில்.! இஸ்ரோ என்றால் சும்மாவா?

கடந்த இரு தசாப்தங்களில் (அதாவது இருபது ஆண்டுகளில்) இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் விண்வெளித் திட்டங்கள் மற்றும் முன்னேற்றங்கள் அங்றது போதுமான எல்லைகளை தொட்டு உள்ளது என்பதில் எந்த சந்தேகமும

கடந்த இரு தசாப்தங்களில் (அதாவது இருபது ஆண்டுகளில்) இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் விண்வெளித் திட்டங்கள் மற்றும் முன்னேற்றங்கள் அங்றது போதுமான எல்லைகளை தொட்டு உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இஸ்ரோ நூற்றுக்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை விண்ணுக்குள் செலுத்தி உள்ளது.

விண்வெளி சாதனை

விண்வெளி சாதனை

இஸ்ரோவின் எல்லா விண்வெளி சாதனைகளுக்கும் ஒரு மகுடமாக, மிகவும் மலிவான செலவில் (அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா ஆனது தன் கனவில் கூட கண்டிராத ஒரு செலவில்) மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் (மாம்) என்று அழைக்கப்படும் மங்கள்யான் விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைத்தோம்.

இஸ்ரோவின் வாசலில் பல நாடுகள்

இஸ்ரோவின் வாசலில் பல நாடுகள்

அந்த வெற்றி நாளில் இருந்து இஸ்ரோவிற்கு கிடைக்கும் மரியாதையே வேறு. சைக்கிள் கேரியரிலும், மாட்டு வண்டியிலும் பாகங்களை வைத்து கொண்டு போய் ராக்கெட் விட்ட கூட்டம் என்று நம்மை கேலி செய்த ஸ்பேஸ் எலைட் நாடுகள் நம்மை புகழ மற்றும் பாராட்ட தொடங்கினர். இஸ்ரோவின் விண்வெளி ஏவல்கள் அனைத்தும் மிகவும் வெற்றிகரமாக இருக்கும் காரணத்தினால் தங்கள் நாட்டு செயற்கைகோளை விண்ணுக்குள் செலுத்த வேண்டி இஸ்ரோவின் வாசலில் பல நாடுகள் (அமெரிக்க உட்பட) காத்து கிடக்கின்றன.

நானோ சாட்டிலைட்

நானோ சாட்டிலைட்

குறிப்பாக மிகவும் சிறிய அளவிலான செயற்கைகோள்களான நானோ சாட்டிலைட்களை விண்ணுக்குள் செலுத்துவதில்,இந்தியாவை அடித்துக்கொள்ள ஆளே இல்லை என்றே கூறலாம். அதன் அடுத்த கட்டமாக, நானோ சாட்டிலைட்டைகளை திறம்பட எப்படி செய்வது என்பதை பற்றிய பாடங்களை இஸ்ரோ நடத்த உள்ளது. இந்த "வகுப்பில்" கலந்து கொள்ள போவது ஒரு நாடல்ல, இரண்டு நாடுகள் அல்ல, மொத்தம் 45 நாடுகள் ஆகும்.

 45 நாடுகளுக்கு இந்தியா பயிற்றுவிக்க உள்ளது

45 நாடுகளுக்கு இந்தியா பயிற்றுவிக்க உள்ளது

ஆம் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் (இஸ்ரோ) வெளியிட்டுள்ள புதிய தகவல்களின்படி, நானோ-செயற்கைக்கோள்களை உற்பத்தி செய்வது எப்படி என்பதை மொத்தம் 45 நாடுகளுக்கு இந்தியா பயிற்றுவிக்க உள்ளது.

யுனிஸ்பேஸ் நானோசாட்டிலைட் அசெம்பிளி அண்ட் டிரெய்னிங் (UNNATI)

யுனிஸ்பேஸ் நானோசாட்டிலைட் அசெம்பிளி அண்ட் டிரெய்னிங் (UNNATI)

இந்த தகவலை இஸ்ரோ தலைவர் கே சிவன் மற்றும் விண்வெளி மந்திரியான ஜிதென்ந்தரா சிங் ஆகியோரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. யுனிஸ்பேஸ் நானோசாட்டிலைட் அசெம்பிளி அண்ட் டிரெய்னிங் (UNNATI) எனும் தலைப்பில் இந்தத் திட்டம் நிகழ உள்ளது. "இத்திட்டம், இந்தியா அதன் அறிவையும் நிபுணத்துவத்தையும் பகிர்ந்து கொள்ள உதவுகிறது, மற்ற நாடுகளுக்கு அது பயன் தரும்," என கே சிவன் ஒரு வார பத்திரிகையில் கூறியது இங்கே குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை பற்றிய எந்தவொரு கருத்தையும் அவர் அறிவிக்கவில்லை.

முதல் கட்ட வகுப்பு

முதல் கட்ட வகுப்பு

இந்த திட்டத்தின் கீழ் நடக்கும் "வகுப்புகளில்" முதல் கட்டமாக பங்குகொள்ள போகும் "மாணவர்களை" பொறுத்தமட்டில் - அல்ஜீரியா, அர்ஜென்டினா, அஜர்பைஜான், பூட்டான், பிரேசில், சிலி, எகிப்து, இந்தோனேசியா, கஜகஸ்தான், மலேசியா, மெக்ஸிகோ, மங்கோலியா, மொராக்கோ, மியான்மார், ஓமன், பனாமா மற்றும் போர்ச்சுகல் உள்ளிட்ட 17 நாடுகளில் இருந்து 30 பங்கேற்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர். ஏனைய 28 நாடுகளை சேர்ந்த மீதமுள்ள 60 பங்கேற்பாளர்களுக்கான இரண்டாம் கட்டமாக வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

மாணவர்களுக்கு பயிற்சி

மாணவர்களுக்கு பயிற்சி

இந்த திட்டமானது கடந்த 1968 ஆம் ஆண்டில் நடந்த விண்வெளி ஆராய்ச்சி மற்றும் சமாதான பயன்பாட்டிற்கான முதல் ஐ.நா. மாநாட்டின் 50 வது ஆண்டு நிறைவை நினைவு கூரும் ஒரு பகுதியாகும். இந்த பயிற்சி ஆனது பெங்களூரில் உள்ள யூ ஆர் ராவ் சேட்டிலைட் மையத்தில் (URSC ) சுமார் 8 வாரங்கள் என்கிற கால வரையறைக்குள் நடக்க உள்ளது என்பதும், இந்த திட்டத்தில் பங்கேற்கும் "மாணவர்களுக்கு" கோட்பாட்டு வடிவமைப்பு, கட்டமைப்பு, கணினி நெட்வொர்க்கிங் மற்றும் சோதனைக்கான பயிற்சி ஆகிய வழங்கப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
ISRO Is So Good At Launching Nano-Satellites, We Will Now Teach 45 Countries On How To Do It : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X