அடுத்த வருடம் நிலவை நோக்கி பயணம் செய்ய தயாராகிறது சந்திராயன் 3.! ஆனால் இது இருக்காது.!

|

ஜூலை 22, 2019 அன்று மதியம் 2:43 மணிக்கு சந்திரயான் -2 -ஐ ஏற்றிச்சென்ற ராக்கெட் செலுத்தப்பட்டது. அதன்பின் பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான சராசரி தூரம் 3,84, 000 கி.மீ. விக்ரம் லேண்டர் செப்டம்பர் 7 ஆம் தேதி பயணத்தின் 48 வது நாளில் சந்திரனில் தரையிறங்க திட்டமிட்டது. ஆனால் அது கடினமாக தரையிறக்கமாக இருந்தது. சந்திராயன் 2-இன் சுற்றுப்பாதையில் இருந்து செப்டம்பர் 2-ம் தேதி பிரிந்த விக்ரம் லேண்டர், செப்டம்பர் 7-ம் தேதி சந்திர மேற்பரப்பில் இறங்கும்போது இஸ்ரோ மிஷன் கட்டுப்பாட்டுமையத்துடனான தொடர்பை இழந்தது.

சந்திரயான் 2-ன்

குறிப்பாக அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு அடுத்தப்படியாக இந்தியா,நிலவில் தரையிறங்கிய நான்கவது நாடக இருந்திருக்கும். சந்திரயான் 2-ன் லூனர் ஆர்பிட்டர் தற்சமயம் அதிக தெளிவுத்திறன் கொண்ட படங்களை எடுத்து நிலவைச் சுற்றி வருகிறது.

 நிலவிற்கான இந்தியாவின்

இந்நிலையில் நிலவிற்கான இந்தியாவின் பணித்திட்டமான சந்திராயன் 3 2021 ஆண்டில் துவங்கப்படும் என்று விண்வெளித் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் அவர்கள் கடந்தத செப்டம்பர் 6-ம் தேதி தெரிவித்தார்.

WhatsApp பயனர்களே உஷார்! வாட்ஸ்அப்பை செயலிழக்கச் செய்யும் டெக்ஸ்ட் பாம்!WhatsApp பயனர்களே உஷார்! வாட்ஸ்அப்பை செயலிழக்கச் செய்யும் டெக்ஸ்ட் பாம்!

அவர் குறிப்பிட்டது என்னவென்றால்

மேலும் அவர் குறிப்பிட்டது என்னவென்றால் சந்திரயான 3 ஆனது சந்திரயான 2-இலிருந்து சற்று வித்தயாசமாக இருக்கும் என்று கூறினார். மேலும் அதில் ஆர்பிட்டர் இருக்காது, ஆனாலும் ஒரு லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவை இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோடி விதித்த

இந்த 2020-ஆம் ஆண்டில் சந்திராயான்-3 ஐ செலுத்த இஸ்ரோ திட்டமிட்டது,ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் அதைத் தொடர்ந்து வைரஸ் பரவலைத் தடுக்க பிரதமர் நரேந்திர மோடி விதித்த லாக்டௌன் காரணமாக இந்த திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை.

மீண்டு(ம்) வருகிறதா பப்ஜி: சீன நிறுவத்துடன் இனி உறவு இல்லை- அதிரடி காட்டும் பப்ஜி நிறுவனம்!மீண்டு(ம்) வருகிறதா பப்ஜி: சீன நிறுவத்துடன் இனி உறவு இல்லை- அதிரடி காட்டும் பப்ஜி நிறுவனம்!

ந்திராயன் 1 நிலவின்

ஆனாலும் 2018-ம் ஆண்டில் துவங்கப்பட்ட சந்திரனுக்கான இஸ்ரோவின் முதல் பணித்திட்டமான சந்திராயன் 1 நிலவின் துவருங்களில் துருப்பிடித்திருக்கலாம் என்பதைக் காட்டும் படங்களை அனுப்பியுள்ளது. அதாவது இந்த கண்டுபிடிப்பின் முக்கிய கருத்து என்னவென்றால் சந்திரனின் மேற்பரப்பில் இரும்புச்சத்து நிறைந்த பாறைகள் இருப்பதாக ஏற்கனவே அறியப்பட்டாலும் நீர் மற்றும் ஆக்ஸிஜன் இருப்பதை பற்றி இதுவரை அறிந்ததில்லை.

பாப் அப் கேமரா அம்சத்தோடு அறிமுகம்: ஹூவாய் ஒய்9ஏ சிறப்பம்சங்கள்!பாப் அப் கேமரா அம்சத்தோடு அறிமுகம்: ஹூவாய் ஒய்9ஏ சிறப்பம்சங்கள்!

ஆக்சிஜனின் தொடர்பு இருக்க வேண்டும்

இருந்தபோதிலும் துருவை உருவாக்க இரும்புடன் நீர் மற்றும் ஆக்சிஜனின் தொடர்பு இருக்க வேண்டும் என்பதால் நிலவிலிருந்து சந்திராயன்-1 அனுப்பியுள்ள படங்கள் முகுந்த முக்கியத்துவத்தை பெறுகின்றன.

அமெரிக்காவின் தேசிய ஏரோநாட்டிக்ஸ்

மேலும் அமெரிக்காவின் தேசிய ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷனின் விஞ்ஞானிகள். இதில் பூமியின் வளிமண்டலம் அளிக்கும் ஒரு உதவியும் காரணமாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளனர். அதாவது பூமியின் வளிமண்டலம் நிலவையும் பாதுகாக்கக்கூடும் என்பது அவர்களது கருத்து. பின்பு இவ்வாறு சந்திராயன் 1-ன் நிலவை பற்றிய தரவுகள் ஆனது நிலவின் துருவங்களில் தண்ணீர் இருக்கக்கூடும் என்பதை குறிப்பிடுகின்றன.

Most Read Articles
Best Mobiles in India

English summary
ISRO Is Ready To Launch Chandrayaan-3 Without Orbiter In Early Next Year: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X