கிறிஸ்துவ கூடாரம் முதல் சந்திராயன் 2 வரை! இஸ்ரோ பற்றிய முழு வரலாறு என்னனு தெரிஞ்சுக்கோங்க!

|

ரூ.978 கோடி செலவில் உருவாக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. நிலவு பற்றி ஆய்வு செய்வதற்காக, பூமியின் சுற்று வட்டப் பாதையில் வெற்றிகரமாக சந்திராயன் 2 நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

கிறிஸ்துவ கூடாரம் முதல் சந்திராயன் 2 வரை! இஸ்ரோ பற்றிய முழு வரலாறு!

நிலவுக்கு வெற்றிகரமாக சந்திராயன் 2 விண்கலத்தை அனுப்பியுள்ள இஸ்ரோ முதல் முதலில் உருவானது ஒரு கூடாரத்தில் தான் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். இஸ்ரோவின் முழு விபரங்கள் மற்றும் வரலாறுகள் இதோ உங்களுக்காக.

கிறிஸ்துவ கூடாரத்தில் உருவான தும்பா ஏவுதளம்

கிறிஸ்துவ கூடாரத்தில் உருவான தும்பா ஏவுதளம்

 • 1962: கேரள மாநிலத்தில் அணு ஆற்றல் துறை மூலம் விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்திய தேசிய குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தும்பா பூமத்திய விண்வெளிக்கலன் ஏவுதளம் (TERLS) அமைப்பதற்காக நிறுவப்பட்டது.
 • 1963: நவம்பர் மாதம் 21ஆம் நாள் TERLSல் இருந்து முதல் விண்கலம் செலுத்தப்பட்டது.
 • 1965:விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் (Space Science and Technology Centre) கேரள மாநிலம் தும்பாவில் நிறுவப்பட்டது.
 • 1968: சோதனை செயற்கைக்கோள் தொடர்பு பூமி நிலையம் (Experimental Satellite Communication Earth Station) அகமதாபாத்தில் அமைக்கப்பட்டது.
 • விண்வெளித்துறைக்கு கீழ் இஸ்ரோ

  விண்வெளித்துறைக்கு கீழ் இஸ்ரோ

  • 1969: அணு ஆற்றல் துறையின் கீழ் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) தொடங்கப்பட்டது (ஆகஸ்ட் 15, 1969).
  • 1971: சதீஷ் தவான் விண்வெளி மையம் (முன்னர் SHAR மையம்) ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உருவாக்கப்பட்டது.
  • 1972: விண்வெளி துறை (DOS) நிறுவப்பட்டு இஸ்ரோ அதன் கீழ் கொண்டுவரப்பட்டது. பெங்களூரில் இஸ்ரோ செயற்கைகோள் மையம் கொண்டுவரப்பட்டது. மேலும் அகமதாபாத்தில் விண்வெளி பயன்பாட்டு மையம் ஒன்று நிறுவப்பட்டது.
  • 1975: அமெரிக்க செயற்கைக்கோளை பயன்படுத்தி செயற்கைக்கோள் வழிமுறை தொலைக்காட்சி பரிசோதனை (Satellite Instructional Television Experiment) செய்யப்பட்டது (1975-1976).

  இணையத்தில் வைரலாகும் புகைப்படம்: தந்தத்திற்காக தலை வெட்டப்பட்ட யானை.!

  இந்தியாவின் முதல் செயற்கைக்கோள்

  இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் "ஆர்யபட்டா"

  • 1976: இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் "ஆர்யபட்டா" விண்ணில் ஏப்ரல் 19, 1975ல் செலுத்தப்பட்டது.
  • 1977: பிராங்கோ-ஜெர்மன் சிம்பொனி செயற்கைக்கோளைப் பயன்படுத்தி செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு பரிசோதனை திட்டம் செயல்படுத்தப்பட்டது (1977-79).
  • 1979: பூமி கண்காணிப்பு சோதனை செயற்கைக்கோள் "பாஸ்கரன் 1" விண்ணில் புறப்பட்டது. செயற்கைக்கோள் வெளியீட்டு வாகனத்தின் (SLV-3) முதல் சோதனை ஓட்டம். இந்த ஏவுகலம் ரோகினி என்ற செயற்கைக்கோளை சுமந்து சென்றது. ஆனால் செயற்கைக்கோள் சுற்றுப்பாதையில் சரியாக சேர்க்கப்படவில்லை.
  • 1980: செயற்கைக்கோள் வெளியீட்டு வாகனம் SLV-3யின் இரண்டாம் சோதனை ஓட்டம். இம்முறை செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் சேர்க்கும் பணி வெற்றிகரமாக முடிந்தது.
  • தகவல் தொடர்பு செயற்கைக்கோள்

   தகவல் தொடர்பு செயற்கைக்கோள் "ஆப்பிள்"

   • 1981: SLV-3யின் முதல் மேம்பாட்டு ஏவுதல் மூலம் ரோகினி சுற்றுப்பாதையில் சேர்க்கப்பட்டது. சோதனை புவி-நிலையான தகவல் தொடர்பு செயற்கைக்கோள் "ஆப்பிள்" ஏவப்பட்டது. மற்றும் பாஸ்கரன் 2யை சுமந்து செல்லும் USSR விண்வெளிகலமும் தொடங்கியது.
   • 1982: அமெரிக்க விண்கலம் மூலம் இன்சாட் -1A தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஏவப்பட்டது.
   • 1983: SLV-3யின் இரண்டாவது வளர்ச்சி விமானம் ரோகிணி செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் சேர்த்தது. இன்சாட்-1B செயற்கைக்கோள் ஏவப்பட்டு இன்சாட் அமைப்பு இயக்கப்பட்டது.
   • 1984: இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா ரஷ்ய விண்வெளி நிலையம் சல்யூட்-7ல் எட்டு நாட்கள் தங்கி இருந்தார். அவர் சோயுஸ் T-11 என்ற விண்கலத்தில் விண்ணில் பறந்து சென்றார்.
   • தொடர்ச்சியான வெற்றி

    தொடர்ச்சியான வெற்றி

    • 1987: SROSS-1யை சுமந்து செல்லும் ஆக்மென்டேட் SLV (ASLV)யின் முதல் மேம்பாட்டு ஏவுதல் நிகழ்த்தப்பட்டது. ஆனால் பணி வெற்றியடையவில்லை.
    • 1988: இந்தியாவின் தொலையுணர்வு (IRS) செயற்கைகோள் IRS-1A ரஷ்யாவின் விண்வெளிகலத்தின் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. SROSS-1யை சுமந்து செல்லும் ASLVயின் இரண்டாம் மேம்பாட்டு ஏவுதல் நிகழ்த்தப்பட்டது. ஆனால் இம்முறையும் பணி வெற்றியடையவில்லை.
    • 1990முதல்: PSLVக்களின் காலம் மற்றும் அந்நிய செலாவணி வருவாய்
    • 1990களில் PSLV தொடர்ச்சியாக வெற்றிகளை தந்தது. மேலும் இந்த விண்வெளிகலம் மற்ற நாடுகளின் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி பல அந்நிய செலவாணிகளை நமக்கு அள்ளி கொடுத்தது.

    நெட்பிக்ஸ் சந்தாவுடன் 500ஜிபி டேட்டா வழங்கும் ஏசிடி பிராட்பேண்ட்.!

    3 ஆம் மற்றும் 4 ஆம் தலைமுறை வெற்றி

    3 ஆம் மற்றும் 4 ஆம் தலைமுறை வெற்றி

    • 1991: இரண்டாம் செயல்பாட்டு தொலையுணர்வு செயற்கைகோள் IRS-1B ஏவப்பட்டது.
    • 1992: முதல் முறையாக SROSS-Cயை சுமந்து செல்லும் ஆக்மென்டேட் SLV (ASLV) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. உள்நாட்டில் கட்டமைக்கப்பட்ட இரண்டாம் தலைமுறை இன்சாட் தொடர்ச்சியின் முதல் செயற்கைகோள் இன்சாட்-2A ஏவப்பட்டது. இதை தொடர்ந்து 3 மற்றும் 4அம் தலைமுறையும் வெற்றியடைந்தது.
    • 1993: IRS-1Eயை சுமந்து செல்லும் துருவ செயற்கைக்கோள் ஏவுதல் வாகனம் (PSLV)யின் முதல் மேம்பாட்டு ஏவுதல் தோல்வியடைந்தது.
    • 1994: SROSS-C2யை சுமந்து சென்ற ASLVயின் நான்காம் மேம்பாட்டு ஏவுதல் வெற்றியடைந்தது. PSLVயும் வெற்றிகரமாக IRS-P2யை சுற்றுப்பாதையில் சேர்த்தது.
    • கொரியா மற்றும் ஜெர்மனி செயற்கைகோள்களை சுமந்து சென்ற இஸ்ரோ

     கொரியா மற்றும் ஜெர்மனி செயற்கைகோள்களை சுமந்து சென்ற இஸ்ரோ

     • 1996: IRS-P3யை சுமந்து செல்லும் PSLVயின் மூன்றாம் மேம்பாட்டு ஏவுதல்.
     • 1997: IRS-1Dயை சுமந்து செல்லும் PSLVயின் முதல் மேம்பாட்டு ஏவுதல்.
     • 1999: இஸ்ரோவின் செயற்கைகோள் ஓசன்சாட்டுடன் சேர்ந்து PSLV கொரியா மற்றும் ஜெர்மனி போன்ற அந்நிய நாடுகளின் செயற்கைகோள்களை சுமந்து சென்றது.
     • 2000முதல்: கனரக வெண்வெளித்கலங்கள் மற்றும் வேற்று கிரகங்களை நோக்கி முன்னேற்றம்.
     • கல்பனா-1 வெற்றிகரமாக செலுத்தப்பட்டது

      கல்பனா-1 வெற்றிகரமாக செலுத்தப்பட்டது

      • 2001: GSAT-1 செயற்கைக்கோளை ஏந்தி கொண்டு கனரக இணைநிலை செயற்கோள் ஏவுதல் வாகனம் (GSLV) வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இந்தியாவின் தொழில்நுட்ப பரிசோதனை செயற்கைக்கோளுடன் சேர்த்து பெல்ஜியம் மற்றும் ஜெர்மனி நாடுகளின் செயற்கைகோள்களையும் சுமந்துகொண்டு PSLV விண்ணில் சென்றது.
      • 2002: கல்பனா-1யை சுமந்த PSLV விண்ணில் ஏவப்பட்டது.
      • 2003: GSLVயில் GSAT-2 மற்றும் PSLVயில் ரிசோர்ஸ்சாட்-1 வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
      • 2004: Edusatயை சுமந்து கொண்டு GSLVயின் முதல் செயல்பாட்டு பயணம்.

      64 மெகா பிக்சல் கேமராவுடன் களமிறங்கும் ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்!

      சந்திரயான்-1

      சந்திரயான்-1

      • 2005: ஸ்ரீஹரிகோட்டாவில் இரண்டாம் ஏவுதளம் நிறுவப்பட்டது. கார்டோசாட்-1 மற்றும் Hamsat செயற்கைகோள்கள் PSLV மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
      • 2006: இன்சாட்-4Cயை சுமந்து கொண்டு GSLVயின் இரண்டாம் செயல்பாட்டு பயணம். இந்தியாவின் முதல் தொடர்பு செயற்கைக்கோளை கொண்டு சென்ற இந்த பயணம் தோல்வியடைந்தது.
      • 2007: விண்வெளி கேப்சுல் மீட்பு சோதனைக்காக கார்டோசாட்-2 சேர்ந்து இரு அந்நிய செயற்கைக்கோள்களையும் சுமந்து சென்றது மட்டுமின்றி, கேப்சுலே மீட்பு பணியும் வெற்றிகரமாக முடிந்தது. மேலும் PSLVயில் இத்தாலியின் AGILE செயற்கைகோள் மற்றும் GSLVயில் இன்சாட்-4CRம் விண்ணில் செலுத்தப்பட்டது.
      • 2008: இஸ்ரயேலின் Tecsar செயற்கைகோள் PSLV மூலம் செலுத்தப்பட்டது. 2 இந்திய மற்றும் 8 அந்நிய செயற்கைகோள்கள் என மொத்தம் 10 செயற்கைகோள்கள் ஒரே PSLV மூலம் விண்ணில் ஏவப்பட்டது. இந்தியாவின் முதல் சந்திர பயணமான சந்திரயான்-1யை சுமந்து கொண்டு PSLV விண்ணில் பயணித்தது. மேலும் சந்திரயான்-2ற்கான அனுமதியை இந்திய அரசு வழங்கியது.
      • ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள்

       ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள்

       • 2009: ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் (RISAT-2) மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் அனுசாட் (முதல் இந்திய பல்கலைக்கழகத்தின் செயற்கைகோள்) PSLV மூலம் செலுத்தப்பட்டது. இந்தியாவின் ஓசன்சாட்டுடன் சேர்த்து 7 செயற்கைகோள்களை PSLV சுமந்து சென்றது.
       • 2010: இரண்டு GSLV பயணம் தோல்வியடைந்தது. Cartosat-2B, STUDSAT மற்றும் 3 சிறிய அந்நிய செயற்கைகோள்களை PSLV விண்ணில் சேர்த்தது.
       • 2011: Resourcesat-2 மற்றும் 2 சிறிய செயற்கைகோள்களை PSLV சுமந்து சென்றது. PSLV மூலம் GSAT-12 விண்ணில் செலுத்தப்பட்டது. மேலும் மேகா டிராபிக்சுடன் 3 சிறிய செயற்கைகோள்களை PSLV விண்வெளிக்கு கொண்டு சென்றது.
       • 2012: PSLV மூலம் Risat-1 மற்றும் SPOT ஏவப்பட்டது.
       • IRNSS-1A செவ்வாய் ஆர்பிட்டர்

        IRNSS-1A செவ்வாய் ஆர்பிட்டர்

        • 2013: Saral satellite, IRNSS-1A (வழிசெலுத்துதல் செயற்கைக்கோள்) மற்றும் செவ்வாய் ஆர்பிட்டர் ஆகியவை PSLV மூலம் விண்வெளியை அடைந்தது.
        • 2014: GSAT-14யை சுமந்து கொண்டு GSLV செலுத்தப்பட்டது, IRNSS-1B மற்றும் IRNSS-IC, SPOT 7 மற்றும் GSLV-MkIIIயின் குழு தொகுதி வளிமண்டல மறுநுழைவு பரிசோதனை (CARE) நிகழ்த்தப்பட்டது.
        • 2015: UKன் IRNSS-1D, DMC3 செயற்கைகோள்களுடன், GSAT-6, Astrosat, GSAT-15 அரெயின் விண்வெளிகலன், சிங்கப்பூரின் TeLEOS ஆகியவை விண்ணில் செலுத்தப்பட்டது.
        • 2016: IRNSS-1E, IRNSS-1F, IRNSS-1G, மீண்டும் பயன்படுத்தக்கூடிய வாகன-தொழில்நுட்ப டெமோன்ஸ்ட்ரேடர், கார்டோசாட்-2 சீரிஸ், ஸ்க்ராம்ஜெட் என்ஜின் தொழில்நுட்ப டெமோன்ஸ்ட்ரேடர் மற்றும் INSAT-3DR ஆகியவை GSLV மூலமும் SCATSAT-1, Resourcesat-2A and GSAT-18 ஆகியவை அரெயின் விண்வெளிகலன் மூலமும் செலுத்தப்பட்டது.

        மலிவு விலையான ரூ.7000த்தில் கலக்கும் ஜேவிசி ஹெச் டிவி டிவிகள்.!

         சந்திரயான் 2 வெற்றி

        சந்திரயான் 2 வெற்றி

        • 2017: கார்டோசாட்-2 சீரிஸ், GSAT-9 by GSLV, GSAT-19 ஆகியவை GSLV-Mk III மூலமும் கார்டோசாட், GSAT-17 ஆகியவை அரெயின் விண்வெளிகலன் மூலமும் செலுத்தப்பட்டது. IRNSS-1H தொடங்கப்பட்டு தோல்வியடைந்தது.
        • 2018: கார்டோசாட், GSAT-6A ஆகியவை GSLV மூலமும், IRNSS-1L, மனித விண்வெளி பயணத்திற்கான க்ரூ எஸ்கேப் சிஸ்டத்தின் விமான சோதனை, NovaSAR, UK, GSAT-29 ஆகியவை GSLV-Mk III மூலமும் HysIS, GSAT-11 ஆகியவை அரெயின் மூலமும் "GSAT-7A" GSLV மூலமும் ஏவப்பட்டது. லித்தியம் அயன் பேட்டரி தொழில்நுட்பத்தை மாற்ற இஸ்ரோ முடிவுசெய்துள்ளது.
        • 2019: அரெயின் மூலம் "Microsat-R, GSAT-3", EMISAT மற்றும் RISAT-2B, மேலும் இரண்டாவது சந்திர பயணம் சந்திரயான் 2 ஆகியவை நிகழ்த்தப்பட்டது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
ISRO History From Church To Chandrayaan-2 moons mission : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X