விரைவில் அடுத்த முயற்சி: சந்திரனை ஆராயும் விண்வெளி பயணம் தொடரும் என இஸ்ரோ சிவன் தகவல்

|

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் நிலவின் தென் துருவ பகுதிக்கு இஸ்ரோ, சந்திராயன் 2 என்ற செயற்கைக்கோளை அனுப்பிய நிலையில் அந்த செயற்கைக்கோள் இலக்கை அடையாமல் கடைசி நிமிடத்தில் தோல்வி அடைந்தது.

இஸ்ரோ தலைவர் சிவன்

இஸ்ரோ தலைவர் சிவன்

இருப்பினும் நிலவினை ஆராய மீண்டும் இஸ்ரோ முயற்சித்து வருவதாகவும், நிலவில் மற்றொரு செயற்கைகோளை தரையிறங்க வைக்கும் திட்டத்தில் இஸ்ரோ செயல்பட்டு வருவதாகவும், சந்திரனின் மேற்பரப்பில் இஸ்ரோவின் செயற்கைக்கோள் இறங்கும் முயற்சியில் இஸ்ரோ தொடர்ந்து செயல்படும் என்றும் அதன் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

 டெல்லி ஐ.ஐ.டியின் 50 வது மாநாட்டு விழா

டெல்லி ஐ.ஐ.டியின் 50 வது மாநாட்டு விழா

சமீபத்தில் டெல்லி ஐ.ஐ.டியின் 50 வது மாநாட்டு விழாவில் கலந்து கொண்ட இஸ்ரோ தலைவர் சிவன் அவர்கள் தாங்கள் நிலவிற்கு அனுப்பிய விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதற்கு முன்வரை அனைத்து அமைப்புகளும் சரியாக செயல்பட்டது என்றும், சந்திரனின் மேற்பரப்பில் 300 மீட்டர் வரை சரியாக செயல்பட்ட விக்ரம் லேண்டர் அதன்பின்னர் தான் தோல்வி அடைந்ததாகவும், இருப்பினும் இதில் உள்ள குறைபாடுகளை ஆராய்ந்து மீண்டும் ஒருமுறை முயற்சி செய்தால் அனைத்தும் சரியாக முடியும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கேரளா: 20லட்சம் குடும்பங்களுக்கு இலவச இண்டர்நெட் வசதி.!கேரளா: 20லட்சம் குடும்பங்களுக்கு இலவச இண்டர்நெட் வசதி.!

சந்திராயன் -2

சந்திராயன் -2

சந்திராயன் -2வில் அனுப்ப்பட்டிருந்த விக்ரம் லேண்டர் என்ற விண்கலம் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி சந்திரனின் மேற்பரப்பில் மென்மையாக தரையிறங்க வேண்டும் என்று கருதப்பட்ட நிலையில் திடீரென 300 மீட்டர் தொலைவில் இருந்தபோது விக்ரம் லேண்டருடனான அனைத்து தொடர்புகளையும் இழக்க நேரிட்டது என்றும், இருப்பினும் விக்ரம் லேண்டர் தரையிறங்குவதை முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரு செயல் திட்டத்தை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம் என்றும் சிவன் மேலும் செய்தியாளர்களிடையே தெரிவித்தார்.

திட்டமிட்டபடி தரையிறங்கியிருந்தால்

திட்டமிட்டபடி தரையிறங்கியிருந்தால்

சந்திரயான் -2வின் விக்ரம் லேண்டர் சந்திரனின் மேற்பரப்பில் திட்டமிட்டபடி தரையிறங்கியிருந்தால் நிலவில் ஒரு விண்கலத்தை தரையிறக்கும் நான்காவது நாடாக இந்தியா இருந்திருக்கும் என்றும், சந்திரனின் மேற்பரப்பை ஆராய விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவற்றை இஸ்ரோ வடிவமைத்திருந்தது என்றும் கூறிய சிவன், அனைத்து விஷயங்களும் நாங்கள் திட்டமிட்டபடி நடந்திருந்தால் பிரக்யான் ரோவர் சந்திரனின் தென் துருவப் பகுதியை 14 நாட்கள் ஆய்வு செய்திருக்கும் என்றும் தெரிவித்தார்.

 இஸ்ரோ

இஸ்ரோ

மேலும் இஸ்ரோ மேற்கொள்ளும் மற்றொரு முயற்சியின்போது நாசாவின் எல்.ஆர்.ஓ உடன் இணைந்து விக்ரம் லேண்டரைக் கண்டுபிடிக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும், சந்திர மறுமதிப்பீட்டு ஆர்பிட்டர் இரண்டு ஃப்ளைபைகளை நடத்தியது மற்றும் விக்ரம் லேண்டர் செயல் இழந்திருந்தாலும் சந்திர மேற்பரப்பின் பல படங்களை அனுப்பியது என்றும் இருப்பினும் விக்ரம் லேண்டர் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது துரதிஷ்டமே என்றும் தெரிவித்தார்.

ஆண்ட்ராய்டு போன்களில் மால்வேர் தாக்குதலைத் தடுக்க கூகுள் புதிய முயற்சி! எப்படி என்று தெரியுமா?ஆண்ட்ராய்டு போன்களில் மால்வேர் தாக்குதலைத் தடுக்க கூகுள் புதிய முயற்சி! எப்படி என்று தெரியுமா?

ஆதித்யா எல் -1

ஆதித்யா எல் -1

இஸ்ரோ நேர்மறையான விண்வெளி பயணங்களை மேற்கொள்ள தொடர்ந்து தீவிரமாக முயற்சிக்கும் என்றும், அடுத்த முயற்சியாக ஆதித்யா எல் -1 என்ற விண்கலத்தில் மனிதனை விண்வெளிப் பயணத்தில் அனுப்பும் திட்டமும் உள்ளது என்றும் சிவன் தெரிவித்தார். "சந்திரயான் -2 என்பது எங்களது முடிவு அல்ல என்றும் ஆதித்யா எல் -1 சோலார் மிஷன் மற்றும் மனித விண்வெளிப் பயணம் குறித்த எங்கள் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் வரும் மாதங்களில் ஏராளமான செயற்கைக்கோள்களை ஏவ வேண்டும் என்று ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளன என்றும் சிவன் கூறினார்.

Best Mobiles in India

English summary
ISRO Hasn’t Given Up On Its Moon Ambitions; Second Landing Attempt Soon : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X