Home
Scitech

தம்பி எலான் நாங்களும் செங்குத்தாக நிறுத்துவோம்; இஸ்ரோ கெத்து!

இந்த வளர்ச்சியானது, ரீ-யூசபிள், ரிக்கவரபில் மற்றும் ரீ-ஸ்டார்ட்டபிள் விண்வெளி ஏவல்களின் செலவினத்தை இன்னும் குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவிற்கு, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவுடன் போட்டி போட்டு சலித்து விட்டது போலும். சமீப காலமாக நாசாவிற்கு போட்டியாக திகழும் தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் போட்டி போட்டு வருகிறது இஸ்ரோ.

தம்பி எலான் நாங்களும் செங்குத்தாக நிறுத்துவோம்; இஸ்ரோ கெத்து!

அதற்கு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு தான் ரீயூசபிள் ராக்கெட். முன்னதாக இஸ்ரோவின் மற்றொரு புதிய கண்டுபிடிப்பின் மூலம், உலக தரத்திலான உந்துசக்தி தொழில்நுட்பத்தை அபிவிருத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்து இருந்தார். இந்த வளர்ச்சியானது, ரீ-யூசபிள், ரிக்கவரபில் மற்றும் ரீ-ஸ்டார்ட்டபிள் விண்வெளி ஏவல்களின் செலவினத்தை இன்னும் குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரோ

இஸ்ரோ

இஸ்ரோவின் இந்த புதிய முயற்சியானது, சாத்தியமாகும் பட்சத்தில், இஸ்ரோவின் மறுபயன்பாட்டு உந்து தொழில்நுட்பம் (reusable propulsion technology) ஆனது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ரீ-யூசபிள் ராக்கெட் ஆனஃ, பால்கோன் 9-க்கு மாபெரும் சவாலாக திகழும் என்று கணிக்கப்பட்டு இருந்தது. இப்போது அது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ராக்கெட் பேட்

ராக்கெட் பேட்

அதாவது இஸ்ரோ தற்போது, வின்டர்டு டேக் ஆஃப் மற்றும் வெர்டிகல் லேண்டிங் (VTVL) டெக்னாலஜிஸ் ஆகியவற்றை சோதனை செய்ய திட்டமிட்டு வருகிறதாம். இதை இஸ்ரோவின் டாக்டர் பி.என் சுரேஷ் உறுதி படுத்தி உள்ளார். இந்த சோதனை ஆனது வாகனம் நுகர்வு கால்கள், ரெட்ரோ உந்துதல் மற்றும் சுறுசுறுப்பான பின்கள் போன்ற தொழில்நுட்பங்களை நிரூபிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அதாவது சுருக்கமாக இந்த தொழில்நுட்பங்கள் ஆனது, விண்கலத்தை வெற்றிகாரமாக விண்ணில் செலுத்துவிட்டு பூமிக்கு திரும்பும் ராக்கெட் ஆனது ராக்கெட் பேட் தளத்தில் செங்குத்தாக மற்றும் துல்லியமாக தரை இறங்க உதவும்.

நாவிக்

நாவிக்

இந்த ராக்கெட் ஆனது மற்றொரு அதிநவீன நாவிக் (NAVIC) வழிசெலுத்தல் ரிசீவர் போன்ற பிற உள்நாட்டு தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துகிறது. இந்த தொழில்நுட்பம் ஆனது நியமிக்கப்பட்ட இடத்தில் துல்லியமாக தரையிறக்க உதவுமாம்.

ஸ்பேஸ்எக்ஸ்

ஸ்பேஸ்எக்ஸ்

இது இஸ்ரோ வேலை செய்யும் ஒரே ஒரு மறுபயன்பாட்டு தொழில்நுட்பம் அல்ல என்பதும், கடந்த ஆண்டு, ஆர்எல்வி சோதனை ஒன்றை நடத்தியது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆர்எல்வி ஆனது மற்றொரு சோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும். அந்த சோதனையின் வழியாக அதன் தரையிறங்கும் திறன் சரிபார்க்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. என்னதான் இஸ்ரோவின் பெருமைகளை நாம் பாடினாலும் ஸ்பேஸ்எக்ஸ் ஆனது பல ஆயிரக்கணக்கான கோடிகளை கொட்டும் ஒரு தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் என்பதை நாம் மறந்து விட கூடாது.

பால்கான் 9

பால்கான் 9

இஸ்ரோவுடன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தை நேரடியாக மோதவிட்டு ஒப்பீட்டை நிகழ்த்தினால், சந்தேகத்திற்கு இடமின்றி, ஸ்பேஸ்எக்ஸ் தான் வலிமையானதாக திகழும். குறிப்பாக அதன் பால்கான் 9 மற்றும் பால்கான் ஹெவி ஆகியவற்றின் பேலோடு அளவுகள் இஸ்ரோவின் தற்போதைய திறன்களை விட அதிகம். இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி மார்க் 3 (குண்டு பையன்) ராக்கெட்டின் பேலோடு ஆனது தற்போது தான் 4 டன்களில் இருந்து 6.5 டன்களாக அதிகரிக்கும் பணிகளே தற்போது தான் முடுக்கி விடப்பட்டுள்ளது என்பது வருத்தம்.

விண்வெளி ஏவல்களில் இருந்து பணம் சம்பாதிப்பது மட்டும் தான்

விண்வெளி ஏவல்களில் இருந்து பணம் சம்பாதிப்பது மட்டும் தான்

இஸ்ரோவும் சரி, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமும் சரி, அவைகளுக்கே உரிய திறன்களில் முதன்மை வகிக்கின்றன. ஸ்பேஸ்எக்ஸ்-ன் வேலைக்கும், விண்வெளி ஆராய்ச்சிக்கும், விண்கலம் மற்றும் செயற்கைகோளுக்கும் சம்பந்தமே இல்லை. அதன் பிரதான வேலை, விண்வெளி ஏவல்களில் இருந்து பணம் சம்பாதிப்பது மட்டும் தான். ஆனால் இஸ்ரோ அப்படி இல்லை, ராக்கெட் தயாரிப்பு முதல் விண்வெளி ஆராய்ச்சி வரை எல்லாவற்றையுமே நிகழ்த்த வேண்டும்.

1.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள்

1.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள்

ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஆண்டு பட்ஜெட் உடன் ஒப்பிடும் இஸ்ரோவின் பட்ஜெட் எல்லாம் ஒன்றுமே கிடையாது. எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமானது ஆண்டுக்கு 1.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்கிற மூலதனத்தினை கொண்டிருக்க, மறுகையில் உள்ள இஸ்ரோவானது, வணிக ரீதியாக நடவடிக்கை, ஆராய்ச்சி மற்றும் விஞ்ஞானம் என அனைத்திற்குமே சேர்த்து ஆண்டுதோறும் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவினத்தை மட்டுமே கொண்டுள்ளது என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம். இந்த அளவிலான பட்ஜெட்டை கொண்டே இஸ்ரோ இந்த உயரத்தை எட்டுகிறதே! ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு கிடைக்கும் அளவிலான பட்ஜெட் கிடைத்தால் என்ன என்ன செய்யும் என்பதை நினைத்தாலே உடல் சிலிர்க்கிறது.

Best Mobiles in India

English summary
ISRO Gunning For Elon Musks SpaceXs Falcon 9 Working On Its Own Vertical Landing Reusable Rocket: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X