10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ! எதில்?

வருகிற 2022 ஆம் ஆண்டில் நிகழ உள்ள இந்த மைல்கல் திட்டத்தில் பங்கு கொள்ள போகிறவர்கள் யார் - யார்?

|

ககன்யன் - இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் பெருங்கனவு அல்லது விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப போகும் இந்தியாவின் திட்டம் என்றும் கூறலாம். வருகிற 2022 ஆம் ஆண்டில் நிகழ உள்ள இந்த மைல்கல் திட்டத்தில் பங்கு கொள்ள போகிறவர்கள் யார் - யார்? இறுதியில் தேர்வு செய்யப்பட்டு விண்வெளிக்குள் நுழைய போகும் நபர்கள் யார்? என்கிற தேடலில் இஸ்ரோ தீயாக வேலை செய்கிறது.

10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ! எதில்?

ஆம், அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள ​இஸ்ரோ, இந்திய விமானப்படை வீரர்களுக்குள்ளான தேர்வு மற்றும் பயிற்சியை நிகழ்த்தி வருகிறது. இந்த திட்டம் ஆனது வரும் 2022 ஆம் ஆண்டில், ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி நிலையத்திலிருந்து துவங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று - நிலை ராக்கெட்

மூன்று - நிலை ராக்கெட்

இந்த திட்டத்தின் கீழ், மூன்று பேர் கொண்ட ஒரு குழுவானது விண்வெளிக்குள் சென்று, குறைந்தபட்சம் ஒரு வாரமாவது தங்க உள்ளனர். பின்னர் சில ஆரய்ச்சிகளை முடித்த கையேடு பூமிக்கு திரும்புகின்றனர். இந்த திட்டத்தில் இந்தியாவின் ஜி எஸ் எல் வி எம் கே 3 மூன்று - நிலை ராக்கெட்டை பயன்படுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது. மேலும் இது இஸ்ரோவின் தனித்த விண்வெளி அரிசியாக இருக்காது பிற தேசிய நிறுவனங்களுக்கிடையிலான ஒரு கூட்டு முயற்சியாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் முதல் மனித விண்வெளி திட்டத்தின் பயிற்சி பெறுபவர்களுக்கு, இந்திய விமான படை உதவ உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கே.சிவன்

கே.சிவன்

இஸ்ரோவின் தலைவர், கே.சிவன் அவர்களின் கருத்தின்படி, குழு தேர்வு மற்றும் பயிற்சிக்கான அனைத்து அடிப்படைத் தகுதிகளும், தேவைகளும் முடிந்து விட்டது. அது இந்திய விமான படையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விமானப்படை இப்போது தேர்வு மற்றும் பயிற்சி சார்ந்த பணியில் முழுமையாக ஈடுபட்டு உள்ளது. இந்த விமானப் படை பயிற்சியின் முதல் இரண்டு கட்டங்கள் ஆனது பெங்களூரில் உள்ள ஏரோஸ்பேஸ் மெடிக்கல் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தில் நடக்க உள்ளது மற்றும் இறுதி பயிற்சிகளானது வெளிநாட்டிலில் நடக்க உள்ளது.

இஸ்ரோ

இஸ்ரோ

இஸ்ரோ ஆனது, குறைந்தபட்சம் 10 வேட்பாளர்களையாவது பயிற்றுவிக்க வேண்டும் என்று விரும்புகிறது, இதில் மூன்று பேர் விண்வெளிப் பயணத்திற்கு தேர்வு செய்யப்படுவார்கள். இந்த திட்டம் குறித்து கடந்த ஆண்டு, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளிடம் இருந்து வெளியான அறிக்கைகள் வெளியாகி இருந்தன. அதில் பிரஞ்சு விண்வெளி நிறுவனம் ஆனது விண்வெளி ஆய்வாளர் சுகாதார கண்காணிப்பு, உயிர் ஆதரவு, கதிர்வீச்சு பாதுகாப்பு, விண்வெளி குப்பைகள் பாதுகாப்பு மற்றும் எதிர்கால விண்வெளி பயிற்சியளிக்க தனிப்பட்ட சுகாதார அமைப்புகள் போன்ற துறைகளில் தங்கள் நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ள உள்ளதாக அறிவித்து இருந்தது.

 மருத்துவ சேவைகள்

மருத்துவ சேவைகள்

இருப்பினும், குழுவினருக்கு வெளிநாடுகளில் பயிற்சி அளிப்பது பற்றியா உறுதிப்படுத்தலை கே சிவன் அறிவிக்கவில்லை. இதற்கிடையில், பிப்ரவரி 08 அன்று, இந்துஸ்தான் டைம்ஸில் வெளியான அறிக்கை ஆனது, ஆயுதப்படைப் படை சேவைகள் (AFMS) விரைவில் ஒரு விண்வெளி மருத்துவத்தை உருவாக்க இஸ்ரோவுடன் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கிறது. அதை உறுதி செய்யும் வண்ணம், ஆயுதப்படைகளின் மருத்துவ சேவைகள் பணிப்பாளர் நாயகம் பிபின் பூரி, "இது (ககன்யான்) எங்களுக்கு எல்லாருக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக உள்ளது, எனவே விமான மருத்துவத்தை (aviation medicines) மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பெங்களூரில் உள்ள ஆய்வகத்தில் விரைவில் மேற்கொள்ளப்படும்." என்று கூறி இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 ஏரோஸ்பேஸ் மெடிக்கல் இன்ஸ்டிடியூட்

ஏரோஸ்பேஸ் மெடிக்கல் இன்ஸ்டிடியூட்

வெளியான தகவலின் படி, ஏரோஸ்பேஸ் மெடிக்கல் இன்ஸ்டிடியூட் (Institute of Aerospace Medicine) ஆனது ஆயுதப்படை மருத்துவ சேவைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் கடந்த 1982 ஆம் ஆண்டு நிகழ்ந்த முதல் இந்தோ-சோவியத் மனித விண்வெளி பயணத்திற்க்கான மருத்துவ உதவிகளை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று, இந்த நிறுவனம் ஏரோஸ்பேஸ் மெடிசின் துறைகளில் சிறந்த தீர்வுகளை வழங்கும் ஒரு இந்திய நிறுவனமாக திகழ்கிறது. மேலும், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் விண்வெளி நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்டு, உலகின் முதன்மையான வானூர்தி நிலையமாக ஏரோஸ்பேஸ் மெடிக்கல் இன்ஸ்டிடியூட் மாறியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மனித உருவிலான ரோபோக்கள்

மனித உருவிலான ரோபோக்கள்

நிகழப்போகும் முதல் இந்திய மனித விண்வெளி பயணத்தில் எந்த விதமான மனித உயிர் சேதமும் ஏற்பட்டு விட கூடாது என்பதற்காகவும், அதை முற்றிலும் தவிர்ப்பதற்காகவும், இஸ்ரோ அதன் இறுதி மிஷனுக்கு முன்னர் இரண்டு ஆளில்லாத ஏவுகணை சோதனையை நடத்த உள்ளது, அதில் மனித உருவிலான ரோபோக்கள் பயன்படுத்தப்பட உள்ளது.

சரியாக 2020 ஆம் ஆண்டு ...

சரியாக 2020 ஆம் ஆண்டு ...

சரியாக 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி இஸ்ரோவின் முதல் ஆளில்லாத விண்வெளி ஏவல் சோதனை நடத்தப்பட உள்ளது. இரண்டாவது விண்வெளி ஏவல் ஆனது ஆறு மாத இடைவெளிக்கு பின் தொடங்கப்பட உள்ளது. இறுதி மிஷன் ஆன்டனது டிசம்பர் 2021 ஆம் ஆண்டு நிகழ உள்ளது. இந்த பணி வெற்றிகரமாக முடிந்தால், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பிய நாடுகளின் பிரத்யேக குழுவில் - ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு பின்னால் நான்காவது இடத்தை இந்தியா கைப்பற்றும்.

 சுமார் 10,000 கோடி

சுமார் 10,000 கோடி

இந்த திட்டமானது சுமார் 10,000 கோடி ரூபாய் என்கிற அளவிலான செலவை எட்டும் என்று நம்பப்படுகிறது, இன்று வரை, இஸ்ரோ மனித விண்வெளிப் பயணத்திற்கான முக்கியமான தொழில்நுட்பங்களை வளர்க்க 173 கோடி ரூபாயை செலவழித்துள்ளது.

Best Mobiles in India

English summary
ISRO Gives IAF Full Charge Of Selection And Training Of 10 Crew Members For Gaganyaan Mission : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X