இஸ்ரோவுக்கு ரூ.5600 கோடி வருமானம்: அங்கு எப்படி குவியுது பணம்?

இஸ்ரோ தனது வர்த்தக நிறுவனமான ஆண்ட்ரிக்ஸ் கார்பரேஷன் லிமிட் மூலம் மார்ச் 2015 முதல் மார்ச் 2018ம் வரையான 3 ஆண்டுகளில் ரூ.5600 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என மத்திய வானியல் துறை தெரிவித்துள்ளது.

|

இந்திய விண்வெளி ஆய்வு மையம் உள்நாட்டிலேயே ராக்கெட், செயற்கைகோள் தளவாட பொருட்களை தயார் செய்கின்றது. உள்நாட்டு தொழில் நுட்பத்திலேயே செயற்கைகோள்களும் ஏவப்படுகிறது.

இஸ்ரோவுக்கு ரூ.5600 கோடி வருமானம்: அங்கு எப்படி குவியுது பணம்?

இந்திய மட்டும் அல்லாமல் இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், பூட்டான், அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் செயற்கைகோள்களும் இஸ்ரோ மையத்தில் இருந்து விண்ணுக்கு செலுத்தப்படுகிறது. இந்நிலையில், இஸ்ரோ கடந்த கடந்த 3 ஆண்டுகளில் ரூ.5 ஆயிரத்து 600 கோடி வருவாயை ஈட்டியுள்ளது.

இஸ்ரோ சந்தை:

இஸ்ரோ சந்தை:

மலிவான விலையில் தனியார் மற்றும் பல்வேறு நாட்டு செயற்கை கோள்களும் வெற்றிகரமாக இஸ்ரோ செலுத்தி வருகிறது. இதனால் இஸ்ரோ விண்வெளிக்கு என வர்த்த சந்தையாக உருவெடுத்துள்ளது. இந்தியாவின் அசாத்தியமான தொழில்நுட்பத்தை கண்டு ஏராளமான நாடுகளும் இந்தியாவின் விண்வெளித்துறை மீது கவனம் செலுத்தி வருகின்றனர்.

வானியல்துறை தகவல்:

வானியல்துறை தகவல்:

இஸ்ரோ தனது வர்த்தக நிறுவனமான ஆண்ட்ரிக்ஸ் கார்பரேஷன் லிமிட் மூலம் மார்ச் 2015 முதல் மார்ச் 2018ம் வரையான 3 ஆண்டுகளில் ரூ.5600 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என மத்திய வானியல் துறை தெரிவித்துள்ளது.

ரூ.1,872 கோடியை விட அதிகம்:

ரூ.1,872 கோடியை விட அதிகம்:

இதில் கடந்த 2017-18ம் ஆண்டில் ரூ.1932 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த 2016-17ம் ஆண்டு கிடைத்த வருவாயை விட ரூ.1872 கோடியை விட சற்று அதிகம் என்று கூறப்பட்டுள்ளது.

செலவு:

செலவு:

இந்த மூன்று ஆண்டுகளில் இஸ்ரோ ரூ.7209 கோடி செலிவிட்டுள்ளது. விண்வெளிப் பயணம், பூமியை ஆராய்தல், செயற்கைக்கோள், தொலைத் தொடர்பியல், கோள்கள் ஆராய்ச்சி போன்ற பலவற்றிக்கு இந்தத் தொகை செலவாகியுள்ளது.

75% வருவாய் கிடைக்கும் விபரம்:

75% வருவாய் கிடைக்கும் விபரம்:

இஸ்ரோ வெளிநாட்டு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் சேவையின் மூலம் வருவாய் ஈட்டுகிறது. ஆனால் பிறநாட்டு செயற்தைகக் கோள்களை விண்ணில் செலுத்துவதின் மூலம் 10 முதல் 20 சதவீதம் வருவாயை பெறு முடிகிறது. 75% தொலைத் தொடர்பு செயற்கை கோள்சேவைகள் மூலம் கிடைக்கிறது என ஆண்ட்ரிக்ஸ் கார்பரேஷனின் தலைவர் எஸ்.ராகேஷ் கூறுகிறார்.

இஸ்ரோவின் வாடிக்கையாளர்:

இஸ்ரோவின் வாடிக்கையாளர்:

ரிலையன்ஸ், சன் நெட்வொர்க் போன்ற 84 பெரிய வாடிக்கையாளர்கள் உள்ளனர். மாணவர்கள் மற்றுமு; பல்கலைக்கழங்கள் உருவாக்கிய செயற்கைகோள்கள் உட்பட 99 செயற்தை கோள்கள் இஸ்ரோ மூலம் செலுத்தப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Isro earns Rs 5600 crore in three years : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X