இஸ்ரோ உருவாக்கிய அதிநவீன ரேடார்: இதனால் என்ன பலன்? எப்போது விண்ணில் செலுத்தப்படும்?

|

இஸ்ரோ அமைப்பு தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்று தான் கூறவேண்டும். இந்நிலையில் இஸ்ரோ அமைப்பு பூமியின் மேற்பகுதியை மிகவும் படம் பிடிக்கும் திறமை கொண்ட எஸ்.ஏ.ஆர் ரேடார் சாதனத்தை தயாரித்துள்ளது.

அடுத்த ஆண்டு

அடுத்த ஆண்டு

அண்மையில் வெளிவந்த தகவலின்படி, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவுடன் இணைந்து இஸ்ரோ முதல் முறையாக நிசார் என்ற செயற்கைகோளை அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த செயற்கைகோளில் தனித்துவமான எல் பேண்டு மற்றும் எஸ் பேண்டு ரேடார்கள் பொருத்தப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிபிஎஸ் ரிசீரவர் போன்றவற்றை நாசா வழங்கும்

ஜிபிஎஸ் ரிசீரவர் போன்றவற்றை நாசா வழங்கும்

மேலும் இந்த புதிய திட்டத்தில் செயற்கைகோளை விண்ணில் செலுத்துவதற்கான ராக்கெட் மற்றும் எஸ் பேண்டு எஸ்.ஏ.ஆர். ரேடார் போன்றவற்றை இஸ்ரோ வழங்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் அறிவியல் சார்ந்த அனைத்து தகவல்களையும் சேகரிப்பதற்கு எல் பேண்டு எஸ்.ஏ.ஆர்ரேடார் இருப்பிடத்தை அறிய உதவும் ஜிபிஎஸ் ரிசீரவர் போன்றவற்றை நாசா வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெறும் ரூ.299 செலுத்தி புதிய Itel 4ஜி பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை வாங்கலாம்.. எப்படித் தெரியுமா?வெறும் ரூ.299 செலுத்தி புதிய Itel 4ஜி பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை வாங்கலாம்.. எப்படித் தெரியுமா?

இஸ்ரோ தயார் செய்த எஸ்.ஏ.ஆர்

அண்மையில் இஸ்ரோ தயார் செய்த எஸ்.ஏ.ஆர் ரேடாரை அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் நமதுஇஸ்ரோ தலைவர் கே.சிவன் அவர்கள் வீடியோ கான்பரன்ஸ் வழியாக பங்கேற்று கொடியசைத்து ரேடார் சாதனத்தை அமெரிக்காவுக்குஅனுப்பி வைத்தார்.

ரயில் பயணிகளுக்கு இனி 'இந்த' தொல்லையே இல்லை.. எல்லா சிக்கலுக்கும், புகாருக்கும் ஒரே 139 நம்பர் தான்..ரயில் பயணிகளுக்கு இனி 'இந்த' தொல்லையே இல்லை.. எல்லா சிக்கலுக்கும், புகாருக்கும் ஒரே 139 நம்பர் தான்..

நிசார் செயற்கைகோள் விண்ணில்

அதாவது இஸ்ரோ அனுப்பிய இந்த ரேடார் சாதனத்தை நாசா அமைப்பு அதன் ரேடார் சாதனத்துடன் பொருத்தி மீண்டும் இந்தியாவிற்கு அனுப்பும் என்று கூறப்படுகிறது. அதன்பின்பு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் வாயிலாக நிசார் செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்படும்என்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு அசத்தலான சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு சூப்பர் சலுகை: உடனே முந்துங்கள்.!நான்கு அசத்தலான சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு சூப்பர் சலுகை: உடனே முந்துங்கள்.!

நாசா அமைப்பு தகவல்

நாசா அமைப்பு தகவல்

அதேபோல் அண்மையில்செவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக சென்ற பெர்சவரன்ஸ் ரோவர் தனது பயணத்தின் முதல்கட்ட சோதனைஓட்டத்தை நிறைவு செய்துள்ளதாக நாசா அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

பெர்சவரன்ஸ் ரோவர்

பெர்சவரன்ஸ் ரோவர்

பூமியைத் தவிர உயிரினங்கள் வாழ்வதற்கு ஏதுவான அம்சங்கள் உள்ள கிரகங்களை விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாகத் தேடிக்கொண்டு இருக்கின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. செவ்வாய் கிரகம் இந்த ஆராய்ச்சியின் முக்கிய கிரகமாக இருந்து வருகிறது.இதற்காக கடந்த ஆண்டு அனுப்பப்பட்ட பெர்சவரன்ஸ் ரோவர் கடந்த மாதம் வெற்றிகரமாக செவ்வாயில் தரையிறங்கியது. மேலும் செவ்வாய் கிரகத்தின் தரைப்பகுதியில் ஆய்வு செய்து வரும் அந்த ரோவர், அங்கு காணப்படும் மலைகள், குன்றுகள், பாறைகள் எனஅனைத்தையும் மிகவும் தெளிவாக படம்பிடித்து காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

நாசா அமைப்பு ஏற்கனவே அனுப்பிய கியூரியாசிட்டி ரோவரை விட 5 மடங்கு வேகத்தில் பெர்சவரன்ஸ் ரோவர் இயங்குவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பின்பு செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் மேலும் ஆய்வு செய்வதற்கான பாதைகள் குறித்து பரிசீலித்து வருவதாக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

News Source: gadgets.ndtv.com

Most Read Articles
Best Mobiles in India

English summary
ISRO develops radar for Earth observation satellite mission in collaboration with NASA: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X