தமிழ்நாட்டின் மீதான பாசத்தை நிரூபித்த கே சிவன்; அதிரடி அறிவிப்பு!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் தலைவர் கே சிவன், தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஆவார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் தலைவர் கே சிவன், தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஆவார். சமீபத்தில் நடந்த நாசாவின் மாணவர் அவுட்ரீச் திட்டத்தில் (NASA’s Student Outreach program) பங்கு கொண்ட அவர் ஒரு விரிவான மாணவர்-நட்பு முயற்சியின் (student-friendly initiatives) அறிவிப்பை வெளியிட்டார்.

அந்த அறிவிப்பின் படி, நாடு முழுவதும் உள்ள விண்வெளி ஆர்வலர்களுக்கு உதவும் நோக்கத்தின் கீழ், அவர்களின் ஆராய்ச்சிகளுக்கு உந்துதல் அளிக்கும் முனைப்பில் கீழ், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான (இஸ்ரோ), அதன் புதிய திட்டங்களின் பட்டியல் ஒன்றை அறிவித்துள்ளது. அந்த பட்டியலில் தமிழ் நாட்டில் உள்ள திருச்சி மற்றும் கன்னியாகுமரியின் பெயர்கள் இடம் பெற்று உள்ளன.

ஆக இந்த இரண்டு மாவட்டங்களில் இஸ்ரோ என்ன நிகழ்த்த உள்ளது?
வெளியான அறிக்கையின் படி, திருச்சியி இன்கூபேஷன் (அடைகாப்பு) மையம் மற்றும் கன்னியாகுமரியில் ஒரு விண்வெளி ஆய்வு மையம் உருவாக்கம் பெற உள்ளது. புது தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோவின் தலைவர் டாக்டர் கே. சிவன், பட்டியலிடப்பட்டு உள்ள திட்டங்கள் ஆனது மாணவ சமூகத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் என்று கூறி உள்ளார்.

ஒவ்வொரு மாதமும் மூன்று மாணவர்கள்!
மேலும் அவர் கூறுகையில், இந்தியாவில் உள்ள மாணவர்கள் பெரும் திறனுடன் இருக்கிறார்கள், அதை நல்ல முறையில் பயன்படுத்துவதற்கு இஸ்ரோ பொறுப்பாளராக இருக்க விரும்புவதாக கூறி, "இளம் விஞ்ஞானிகள்" திட்டத்தை கே சிவன் அறிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் இஸ்ரோ, ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திலிருந்து மூன்று மாணவர்கள் என்கிற விகிதத்தில் தேர்ந்து எடுத்து பயிற்சிகள் மற்றும் பாடங்கள் கொடுக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள், பெரும்பாலும் 8 வது வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களாக இருப்பார்கள் என்றும், அவர்கள் இஸ்ரோவிற்கு கொண்டு செல்லப்படுவார்கள் மற்றும் அவர்களுக்கு விரிவுரைகள் வழங்கப்படும்" என்றும் கே சிவன் கூறினார்.

அவர்கள் எங்கும் செல்ல முடியும்!
மேலும் பயிற்சிக்கு அழைத்து செல்லப்படும் மாணவர்கள், இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானிகள் மற்றும் அணுகல் ஆராய்ச்சி ஆய்வகங்களை தொடர்பு கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும் டாக்டர் சிவன் கூறினார். "அவர்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகத்திற்க்குள் கூட போக முடியும். சிறிய செயற்கைக்கோள் ஒன்றை உருவாக்குவதற்கான நடைமுறை அனுபவத்தை அவர்கள் பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவர்கள் உருவாகும் செயற்கைகோள்கள் நல்லவையாக இருந்தால், அவைகள் பறக்க வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம்." என்றும் கே சிவன் கூறி உள்ளார்.

இலவசமாக செய்து கொடுப்போம்!
மேலும் இந்த திட்டம் ஆனது நாசா மாணவர்களுக்கான நுழைவுத் திட்டத்தை ஒத்ததாக இருக்கும் என்றும், நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களும் இஸ்ரோவுடன் தொடர்பு கொள்ள வேண்டுமென டாக்டர் கே. சிவன் கேட்டுக் கொண்டு உள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக தங்களது சொந்த செயற்கைக்கோள்களைத் தொடங்க விரும்பும் மாணவர்களுக்கு, அது இலவசமாக செய்து கொடுக்கப்படும் என்றும் கே சிவன் உறுதியளித்து உள்ளார்.

அதிகரித்துவரும் பொறுப்பு!
இஸ்ரோவின் ஆராய்ச்சி ஆனது நாடு முழுவதும் பரந்து விரியும் நோக்கத்தை கொண்டுள்ள கே சிவன், பிரதான அமைப்பில் உள்ள மனிதவள மேம்பாடு, ககன்யான் போன்ற அதிகரித்துவரும் பொறுப்புகளை கையாளுவதற்கு போதுமானதாக இல்லை. அதனால் இந்தியாவில் உள்ள சாத்தியமான பகுதிகளில் இஸ்ரோவின் மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாக கே சிவன் கூறி உள்ளார்.

திருச்சி, நாக்பூர், ரூர்கேலா மற்றும் இந்தூர்!
"அதன் கீழ், நாட்டில் மொத்தம் ஆறு அடைகாப்பு மையங்களை அமைக்க திட்டமிடப்பட்டது. வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, வடகிழக்கு மற்றும் மையதத்தில் என ஒவ்வொரு பகுதியிலும் ஒரு அடைகாப்பு மையம் உருவாக்கம் பெற திட்டமிடப்பட்டது. அதில் இரண்டு (என்.ஐ.டி திரிபுரா, என்.ஐ.டி. ஜலந்தர்) தொடங்கப்பட்டுள்ள நிலைப்பாட்டில், மீதமுள்ள நான்கு மையங்கள் ஆனது திருச்சி, நாக்பூர், ரூர்கேலா மற்றும் இந்தூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட உள்ளன.

டாக்டர் கே சிவனின் சொந்த ஊர் ஆன கன்னியாகுமரி!
அத்துடன் நாடு முழுவதும் உள்ள திறமையான இளம் மாணவர்களின் விஞ்ஞான ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்குவதற்காக,நாடு முழுவதும் மொத்தம் ஆறு ஆராய்ச்சி மையங்கள் உருவாக்கம் பெரும் என்றும் கே சிவன் கூறி உள்ளார். அவைகள் நாட்டின் ஒவ்வொரு திசையிலும் அதாவது ஜெய்ப்பூர், குவஹாத்தி பல்கலைக்கழகம், என்.ஐ.டி குருக்ஷேத்ரா, ஐஐடி வாரணாசி, என்.ஐ.டி பாட்னா மற்றும் டாக்டர் கே சிவனின் சொந்த ஊர் ஆன கன்னியாகுமரி ஆகிய இடங்களில் அமைக்கப்பட உள்ளன.


Click it and Unblock the Notifications