Home
Scitech

மங்கள்யான் கொடுத்த ஷாக்கை மறக்காத நாசாவிற்கு இஸ்ரோவின் அடுத்த ஷாக்.!

"இந்த நேரத்தில் இஸ்ரோ ஒரு கனமான பேலோட் (3,250 கிலோ) கொண்டுள்ளதால் ஜிஎஸ்எல்வி எம்கே 2 தான் சரியான தேர்வாகும்"

இந்திய விண்வெளி ஆய்வு மையமான - இஸ்ரோ, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இரு சந்திர கிரக விண்வெளி திட்டங்களை நிகழ்த்தவுள்ளது. இந்த விண்வெளி திட்டங்கள் மூலம் நிலவின் மேற்பரப்பின், மேலும் சாத்தியமுள்ள கூறுகள் ஆராய திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி திட்டமான சந்திரயான் -2 நிகழ்வதை உலகம் விரைவில் பார்க்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சந்திரயான் -2 திட்டத்துடன் சேர்த்து ஐ.ஐ.டி.-தில்லி விண்வெளி ஆர்வலர்கள் குழுவான 'டீம் இண்டஸ்' அணியின் திட்டமொன்றும் நிகழ்த்தப்படவுள்ளது

மங்கள்யான் கொடுத்த ஷாக்கை மறக்காத நாசாவிற்கு இஸ்ரோவின் அடுத்த ஷாக்.!

அவைகள் என்னென்ன திட்டங்கள்.? இந்த ஆய்வுகளின் பிரதான நோக்கமென்ன.? பின்புலங்கள் என்ன.? என்பது சார்ந்த விரிவான தகவல்கள் இதோ.!

உலகளாவிய போட்டி

உலகளாவிய போட்டி

சந்திரயான் 2 திட்டமானது 2018-ஆம் ஆண்டிற்கான இஸ்ரோவின் பெரிய விண்வெளி பணியாகும். மறுபுறத்தில், நிகழும் டீம் இண்டஸ் குழுவின் திட்டமானது கூகுள் அறிவித்துள்ள கூகிள் லுனார் எக்ஸ்ப்ரைஸ் என்ற உலகளாவிய போட்டியின் ஒரு பகுதியாகும்.

30 மில்லியன் டாலர்கள்

30 மில்லியன் டாலர்கள்

ஐஐடி-டெல்லி முன்னாள் மாணவர் நாராயண் தலைமையிலான டீம் இண்டஸ் ஆனது இன்போசிஸ் இணை நிறுவனர் மற்றும் முன்னாள் யூஐடிஏஐ (UIDAI) தலைவர் நந்தன் நீலகேனி மற்றும் இஸ்ரோவின் முன்னாள் விண்வெளி ஆய்வாளர்கள் போன்ற பல முதலீட்டாளர்களை கவர்ந்துள்ளது. போட்டியின் ஒரு பகுதியாக, இந்த அணி 30 மில்லியன் டாலர்கள் பரிசை வெல்லலாம்.

தூரத்தை கடக்க வேண்டும்

தூரத்தை கடக்க வேண்டும்

கூகுள் நிறுவனத்தின் லூனார்எக்ஸ்ப்ரைஸ் (LunarXPRIZE) போட்டியில் பங்கேற்கும் குழுக்கள் நிலவின் மேற்பரப்பில் 500 மீட்டர் தூரத்தை கடக்க வேண்டும் மற்றும் பூமியின் உயர் வரையறை படங்களை அனுப்ப வேண்டும்.

பிஎஸ்எல்வி.? ஜிஎஸ்எல்வி.?

பிஎஸ்எல்வி.? ஜிஎஸ்எல்வி.?

குறிப்பாக, இந்த இரண்டு நிலவு பயணங்களும் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக உள்ளன. மேலும் பல்வேறு கருவிகளை பயன்படுத்துகின்றன என்று கிரண் குமார், இஸ்ரோ தலைவர், விளக்கமளித்தார். டீம் இண்டஸ் ஆனது அதன் திட்டத்திற்கு பிஎஸ்எல்வி-ஐ பயன்படுத்தும் மறுபக்கம் சந்திரயான் 2 ஆனது ஜிஎஸ்எல்வி எம்.கே. 2 வழியாக ஏவப்படுகிறது.

சரியான தேர்வாகும்

சரியான தேர்வாகும்

"2008-ஆம் ஆண்டு நிகழ்த்தபட்ட சந்திரயான் -1 திட்டத்தை போலல்லாமல், சந்திராயன் 2 திட்டத்திற்கு பிஎஸ்எல்வி ராக்கெட் பயன்படுத்தப்படாது. இந்த நேரத்தில் இஸ்ரோ ஒரு கனமான பேலோட் (3,250 கிலோ) கொண்டுள்ளதால் ஜிஎஸ்எல்வி எம்கே 2 தான் சரியான தேர்வாகும்" என்று விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் மையத்தின் இயக்குனர் டாக்டர் கே. சிவன் விளக்கமளித்துள்ளார்.

லேண்டர் மற்றும் ரோவர்

லேண்டர் மற்றும் ரோவர்

முழுக்க முழுக்க உள்நாட்டில் கட்டமைக்கப்பட்ட லேண்டர் மற்றும் ரோவர் ( Lander and Rover) கொண்ட சந்திராயன் - 2 ஆனது நிலவிற்கு சென்று மாதிரிகளை சேமித்து பூமிக்கு கொண்டுவரும் சாதனங்களையும் கொண்டுள்ளது. பூமி கிரகத்தின் 'சோல் சாட்டிலைட்'என்று அழைக்கப்படும் நிலவில் நீர் ஆதாரங்கள் இருப்பதற்க்கான ஆய்வில் சந்திராயன் 1 முக்கிய பங்கு வகித்தது.

ஆதித்யா எல்1

ஆதித்யா எல்1

இந்த இரண்டு நிலவு சார்ந்த திட்டங்கள் மட்டுமன்றி இந்தியா விண்வெளி ஆராச்சியின் முதல் சூரிய பயணம் ஒன்றும் அரங்கேற இருக்கிறது. சுமார் 378.58 கோடி ரூபாய் செலவில் உருவாகும் ஆதித்யா எல்1 ஆனது 2019-ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

லெக்ராஞ்சியப் புள்ளி

லெக்ராஞ்சியப் புள்ளி

சூரியனை நோக்கி பயணப்படும் ஆதித்யா எல்1 ஆனது, பூமியில் இருந்து சுமார் 1.5 மில்லியன் கி.மீ தொலைவில் உள்ள லெக்ராஞ்சியப் புள்ளியில் (Lagrangian point) செலுத்தப்பட்டு சூரியனை ஆராய இருக்கிறது.

மொத்தம் 7 வகையான ஏழு தரவு

மொத்தம் 7 வகையான ஏழு தரவு

மேலும் ஆதித்யா எல் 1 ஆனது சூரியனை வெளிப்புறக் அடுக்குகளை கண்காணிக்கும் வகையிலான அதிநவீன கொரோன்கிராப் (Coronagraph) தொலைநோக்கி உட்பட மொத்தம் 7 வகையான ஏழு தரவு சேகரிக்கும் கருவிகளை மந்து செல்ல இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
India to witness launch of two moon missions by early 2018. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X