விண்வெளியில் நேருக்கு நேர் வந்த இஸ்ரோ- ரஷ்ய செயற்கைகோள்கள்- மோதும் தூரத்தில் வந்ததால் பதற்றம்!

|

இஸ்ரோ மற்றும் ரஷ்யாவின் இரண்டு செயற்கைகோள்கள் விண்ணில் மோதுவதை போல் மிக அருகாமையில் வந்ததால் விஞ்ஞானிகளிடையே பதற்றம் ஏற்பட்டது.

இஸ்ரோ- ரஷ்யா செயற்கைக் கோள்கள்

இஸ்ரோ- ரஷ்யா செயற்கைக் கோள்கள்

பல்வேறு நோக்கங்களுக்காக விண்ணில் அனுப்பப்படும் செயற்கைக்கோள்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுற்றுப்பாதையில் இருக்கும் செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவது வழக்கம். இந்த நிலையில் இஸ்ரோ- ரஷ்யா செயற்கைக் கோள்கள் விண்ணில் மோதுவதைப் போல் மிக அருகருகே வந்ததால் விஞ்ஞானிகளிடையே பதற்றம் ஏற்பட்டது.

ரஷ்ய விண்வெளி ஏஜென்சி

ரஷ்ய விண்வெளி ஏஜென்சி

இதுகுறித்த தகவலை ரஷ்ய விண்வெளி ஏஜென்சி வெளியிட்டுள்ளது. இந்திய செயற்கைக்கோளான கார்ட்டோசாட் 2 எஃப் சுமார் 700 கிலோ எடை கொண்டது. இந்த செயற்கைக் கோள் ரஸ்யாவின் கானோபஸ் வி விண்கலத்துக்கு மிக அருகில் வந்தது. இரண்டு செயற்கைக்கோள்களுக்கும் இடையிலான இடைவெளி சுமார் 224 மீட்டராக இருந்தது.

1 கிலோமீட்டர் தூரத்தில் இருக்க வேண்டும்

1 கிலோமீட்டர் தூரத்தில் இருக்க வேண்டும்

இந்த நேரத்தின் கணக்கீட்டின்படி இந்திய செயற்கைக்கோள் 1 கிலோமீட்டர் தூரத்தில் இருந்திருக்க வேண்டும். அதேநேரத்தில் ரஷ்ய செயற்கைகோள் 500 மீட்டர் இடைவெளியில் இருந்திருக்க வேண்டும். ஆனால் கணிப்பு தவறாகிவிட்டதாக கூறப்படுகிறது.

ஜெயிச்சா ரூ.2.5 லட்சம் பரிசு: ஜியோகேம்ஸ் க்ளாஷ் ராயல் போட்டி- பங்கேற்கும் வழிமுறைகள்!

700 கிலோ எடையுள்ள கார்டோசாட் 2 எஃப் செயற்கைகோள்

700 கிலோ எடையுள்ள கார்டோசாட் 2 எஃப் செயற்கைகோள்

செயற்கைக்கோள்களுக்கு இடையேயான தூரம் என்பது குறைந்தபட்சம் 1 கிலோமீட்டர் இருக்க வேண்டும். ஆனால் 700 கிலோ எடையுள்ள இந்தியாவின் கார்டோசாட் 2 எஃப் செயற்கைகோள் ஆபத்தான முறையில் ரஷ்யாவின் கனோபஸ்-வி விண்கலத்துக்கு அருகில் வந்ததாக ரஷ்யா விண்வெளி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகர்த்துவதற்கான நடவடிக்கை

நகர்த்துவதற்கான நடவடிக்கை

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் இஸ்ரோ தலைவர் சிவன் கருத்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதில், இஸ்ரோவின் செயற்கைகோள் நான்கு நாட்களாக கண்காணித்து வருவதாகவும் அதை நகர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

பல்வேறு காரணங்களுக்காக செயற்கைகோள் பயன்பாடு

பல்வேறு காரணங்களுக்காக செயற்கைகோள் பயன்பாடு

விண்வெளியில் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. ஒவ்வொரு செயற்கைக்கோளும் பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. விண்வெளி ஏஜென்சிகள் ஒவ்வொரு 3 முதல் 4 வாரங்களுக்கு செயற்கைக்கோள் இயக்கத்தை கண்காணித்து வருகிறார்கள்.

File Images

Source: zeenews.com

Most Read Articles
Best Mobiles in India

English summary
ISRO and Russian Satellites Dangerously Approached in Space

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X