Home
Scitech

இஸ்ரேல் கனவில் ஒரு லாரி மண்ணை அள்ளிக்கொட்டிய பேரேஷீட் ; நிலவின் மேற்பரப்பில் மோதி விபத்து.!

பேரேஷீட் விண்கலம் மூலம் நிலவின் மேற்பரப்பை அடைந்த நான்காவது நாடு என்னும் பெருமையை அடைவதற்கு இஸ்ரேல் திட்டமிட்டிருந்தது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவும் ஒரு மறைமுகமான "நீயா? நானா" போட்டியில் ஈடுபட்டு கொண்டு இருக்கும் நிலைப்பாட்டில், சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமானது, நிலவும் இருண்ட பகுதியில் (நிலவின் முதுகு என்றும் அழைக்கப்படும் பகுதியில்) அதன் மூன் லேண்டரை தரை இறக்கி "சத்தம் போடாமல்" ஒரு சாதனையை செய்தது.

இஸ்ரேல் கனவில் ஒரு லாரி மண்ணை அள்ளிக்கொட்டிய பேரேஷீட் .!

அதன் பின்னர் தான் இஸ்ரோவின் "ககன்யான்" திட்டம் சூடு பிடித்தது என்பதும் அதன் தலைவர் கே. சிவன் தாமதம் ஆனதிற்கான விளக்கங்களை அறிக்கைகளாய் வெளியிட்டதும் வேறு விடயம். இந்நிலைப்பாட்டில் இஸ்ரேல் ஒரு "விண்வெளி
மைல்கல்லை" பதிக்க திட்டமிட்டது.

'பேரேஷீட்'

'பேரேஷீட்'

அது என்னவென்றால் நிலவின் பரப்பில் தரையிறங்கி புகைப்படங்களை எடுப்பது மட்டுமின்றி, பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட 'பேரேஷீட்' என்னும் விண்கலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுப்பப்பட்டது. ஆனால் அந்த விண்கலம் நிலவின் பரப்பை தொடுவதற்கு முன்னதாக ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினைகளின் காரணமாக நிலவின் மேற்பரப்பில் மோதி விபத்துக்குள்ளானதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. தரையிறங்க திட்டமிட்ட இடத்தில் விழுந்து சிதறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா, அமெரிக்கா

ரஷ்யா, அமெரிக்கா

இதற்கு முன்பு ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் அரசுத்துறைகளின் கட்டுப்பாட்டிலுள்ள விண்வெளி ஆராய்சி நிலையங்களின் விண்கலன்களே நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளன. பேரேஷீட் விண்கலம் மூலம் நிலவின் மேற்பரப்பை அடைந்த நான்காவது நாடு என்னும் பெருமையை அடைவதற்கு இஸ்ரேல் திட்டமிட்டிருந்தது.

2 ஆண்டுகளில் நிலவில் விண்கலத்தை இறக்குவோம்

2 ஆண்டுகளில் நிலவில் விண்கலத்தை இறக்குவோம்

இந்நிலையில் இஸ்ரேலின் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. முதல் முயற்சியில் தோல்வியை சந்தித்தாலும், மீண்டும் மீண்டும் முயற்சி செய்வோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகூ தெரிவித்தார். மேலும் அவர் அடுத்த 2 ஆண்டுகளில் நிலவில் விண்கலத்தை இறக்குவோம் என்று உறுதிபட தெரிவித்தார்.

சந்திராயன் 2

சந்திராயன் 2

மேலும் சந்திராயன் 2- விண்கலத்தை விரைவில் இந்தியா நிலவுக்கு அனுப்ப உள்ள நிலையில், நிலவில் வெற்றிகரமாக விண்கலத்தை இறக்கிய நாடுகளின் பட்டியலில் 4-வது இடம் கிடைக்கும் வாய்ப்பு இந்தியாவுக்கு அதிகம் உள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Israeli-spacecraft-crashes-in-attempt-to-reach-moon: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X