Home
Scitech

நிலவின் வருகைக்காக சுற்றுவட்டப்பாதையில் காத்திருக்கும் இஸ்ரேலீ மூன் லேண்டர்!

இதுவரை நிலவில் மென் தரையிறங்கல் (சாப்ட் லேண்டிங்) நிகழ்த்திய அமைப்புகள் அனைத்தும் வல்லரசு அரசாங்கங்களான சோவியத் யூனியன், அமெரிக்கா மற்றும் சீனா.

5-அடி உயரம் (1.5 மீட்டர்) உடைய இந்த பெரேசீட் ஏப்ரல் 1ம் தேதி அதிகாலையில் விண்ணில் செலுத்தப்பட்டு, ஏப்ரல் 4 அன்று சந்திரனின் சுற்றுப்பாதையில் நுழைய திட்டமிட்டு அதற்கேற்றவாறு தனது பயணப்பாதையின்அ போக்கை மாற்றிக் கொண்டுள்ளது.

பெரேசீட் லூனார் லேண்டர் கிட்டத்தட்ட சந்திரனை நெருங்கியுள்ளது.

அனைத்தும் திட்டமிட்டபடி சென்றால், சரியாக ஒரு வாரத்திற்குப் பிறகு ஏப்ரல் 11 ம் தேதி ரோபோடிக் லேண்டர் நிலவின் பரப்பை தொடும். அது மிகப்பெரிய மைல்கல்லாக இருக்கும். இதுவரை நிலவில் மென் தரையிறங்கல் (சாப்ட் லேண்டிங்) நிகழ்த்திய அமைப்புகள் அனைத்தும் வல்லரசு அரசாங்கங்களான சோவியத் யூனியன், அமெரிக்கா மற்றும் சீனா.

பெரேசீட் லேண்டர்

பெரேசீட் லேண்டர்

இதற்கிடையில் பெரேசீட் லேண்டர், இலாப நோக்கமற்ற ஸ்பேஸ்ஐஎல் மற்றும் இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனங்களின் தனிப்பட்ட முயற்சி ஆகும். தனியார் நிதிஉதவியுடன் இயங்கும் குழுக்கள் நிலவில் விண்கலத்தை தரையிறங்குதல் மற்றும் சில அடிப்படை பணிகளைச் செய்வதற்கும் 30 மில்லியன் டாலர் பரிசாக கொடுக்கும் கூகுள் லூனார் எக்ஸ் ப்ரைஸ் போட்டியில் பங்கேற்க உருவாக்கப்பட்டது ஸ்பேஸ்ஐஎல் நிறுவனம்.

 பூமியின் சுற்றுப்பாதையில்..

பூமியின் சுற்றுப்பாதையில்..

வெற்றியாளரே இல்லாமல் கடந்த ஆண்டு இந்த கூகுள் போட்டி முடிவுக்கு வந்தநிலையில், ஸ்பேஸ்ஐஎல் மற்றும் வேறு சில அணிகள் இன்னும் தங்களது மூன் லேண்டர் திட்டத்தில் பணியாற்றிவருகின்றனர்.


ஹீப்ரூ மொழியில் "ஆரம்பத்தில்" என பொருள் கொண்ட இந்த பெரேசீட், பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த பிப்ரவரி 21 ம்தேதி ஸ்பேஸ் எக்ஸ் பால்கான் 9 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. அதன் பின்னர் அந்த விண்கலம் தொடர்ச்சியான சுற்றுப்பாதை-உயர்தல் செயல்பாடுகளை செய்து நிலவிற்கு மிகவும் நெருக்கமாக செல்ல முயன்றுவருகிறது.

ஏப்ரல் 1

ஏப்ரல் 1

ஏப்ரல் 1ம் தேதி காலை 72 வினாடி நீண்ட முயற்சியை தொடர்ந்து சில "இறுதி மாற்றங்கள்" நடைபெற்று நிலவு சுற்றுவட்டப்பாதையை அடைய உதவியது என இத்திட்டக் குழு உறுப்பினர்கள் இன்று காலை தெரிவித்துள்ளனர். வேறு என்னென்ன கூடுதல் மாற்றங்கள் தேவைப்படும் என்பது தெளிவாக இல்லை.

 மதிப்பீடு செய்துவருகின்றன

மதிப்பீடு செய்துவருகின்றன

"இந்த வியாழக்கிழமை சந்திரனின் சுற்றுப்பாதையில் பெரேசீட் நுழைவதற்கு முன்பாக மற்றொரு சீரமைப்பு தேவைப்படுகிறதா என்பதை முடிவு செய்வதற்காக முந்தைய முடிவுகளை மதிப்பீடு செய்துவருகின்றன" என்று திட்ட குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

விஞ்ஞானப் பணிகளை இந்த பெரேசீட் செய்யவுள்ளது

விஞ்ஞானப் பணிகளை இந்த பெரேசீட் செய்யவுள்ளது

பெரேசீட் கடைசியாக பூமியை மார்ச் 31 அன்று 1,056 மைல்கள் (1,700 கிலோமீட்டர்) என்ற தொலைவில் நெருங்கிவந்துள்ளது. மேலும் இந்த லேண்டர் பூமியின் அழகான புகைப்படத்தை சுமார் 9,940 மைல்கள் (16,000 கி.மீ) தொலைவில் இருந்து எடுத்து அனுப்பியுள்ளது. அப்படத்தில் அரேபிய தீபகற்பம் மற்றும் தென்கிழக்கு ஆப்ரிக்க பகுதிகள் படம்பிடிக்கப்பட்டுள்ளன. மேலும் தடிமனான மேகங்கள் இஸ்ரேலை மூடியுள்ளது படம்எடுக்கப்பட்டுள்ளது என இன்றைய அப்டேட்டில் பெரேஷீட் குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.


நிலாவிலும் அதை சுற்றிலும் சில விஞ்ஞானப் பணிகளை இந்த பெரேசீட் செய்யவுள்ளது. உதாரணமாக நிலவின் காந்த புலங்களை அளவிடுவது போன்றவற்றை நாசாவின் லேசர் ரிப்ளெக்டர் மூலம் செய்யவுள்ளது. விண்ணில் செலுத்துதல் உட்பட இந்த பெரெசீட் விண்கலத்தின் மொத்த செலவுகள் 100 மில்லியன் டாலர் ஆகும்.

Best Mobiles in India

English summary
Israeli Moon Lander Tweaks Orbit to Prep for Thursday Lunar Arrival: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X