120 ஆண்டு இளமையோடு சாகாமல் உயிர் வாழ ஆசையா? 'சாகா வரத்திற்கான' விடையை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்..

|

மனிதர்களின் நீண்ட நாள் கனவு, நிறைவேறாத மிகப் பெரிய ஆசை என்று பல நூறு ஆண்டுகளாக மனிதன் தேடி ஆராய்ந்து திரிந்த நிறைவேறாத ஆசைக்கான கதவு தற்பொழுது திறந்துள்ளது. இளமையோடு சாகாமல் இருப்பதற்கான வரத்தைத் தேடி மனித இனம் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகிறது. இந்த ஆராய்ச்சிக்கான விடையாய் தற்பொழுது இஸ்ரேலில் உள்ள விஞ்ஞானிகள் சாகா வரத்திற்கான முதல் படியை எட்டியுள்ளனர். இந்த முதல் படியே மனிதனை 120 ஆண்டுகள் வரை உயிர் வாழ வைக்கும் சாத்தியத்தைக் கொண்டுள்ளது.

சாகா வரத்திற்கான முதல் படியை விஞ்ஞானிகள் எப்படி அடைந்தார்கள்?

சாகா வரத்திற்கான முதல் படியை விஞ்ஞானிகள் எப்படி அடைந்தார்கள்?

இஸ்ரேலில் உள்ள விஞ்ஞானிகள் 250 எலிகள் மீது வெற்றிகரமாக ஒரு நம்ப முடியாத பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர். இந்த பரிசோதனை மூலம் 250 எலிகளின் ஆயுட்காலம் கிட்டத்தட்ட 23 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். இந்த அசாதாரணமான சோதனையின் மூலம் மனிதர்களின் ஆயுட்காலத்தையும் இளமையையும் அதிகரிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் பெரிதும் நம்புகின்றனர். விஞ்ஞானிகள் இந்த நம்பமுடியாத சாகா வரத்திற்கான முதல் படியை எப்படி அடைந்தார்கள் என்று தெரியுமா?

உடல் பலவீனம் மற்றும் இளமையைப் பாதுகாத்து மேம்படுத்த முடியும்

உடல் பலவீனம் மற்றும் இளமையைப் பாதுகாத்து மேம்படுத்த முடியும்

விஞ்ஞானிகளின் சோதனை, SIRT6 என்ற புரதத்தை அதிகரிப்பதன் மூலம் துவங்கியது. இது முதலில் உயிர் உள்ள உடலில் நிகழும் வயதைக் குறைக்கத் தொடங்குகிறது. அதாவது உடலின் இளைமையைத் தக்கவைக்கிறது. "இந்த கண்டுபிடிப்புகள் SIRT6 மூலம் வயதான காலத்தில் ஏற்பட்டும் ஹோமியோஸ்டாசிஸை (homeostasis) பலவீனப்படுத்துவதைத் தாமதப்படுத்துகிறது. அதேபோல், வயதான காலத்தில் ஏற்படும் உடல் பலவீனம் மற்றும் இளமையைப் பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் இது பெரிதும் உதவுகிறது என்பதை ஆராய்ச்சியின் முடிவுகள் நிரூபித்துள்ளது.

மனிதர்களை பிரமிக்கவைக்கும் 10 கடல் உயிரினங்கள்: இதில் எது உங்களை உண்மையில் மிரள வைத்தது என்று கூறுங்கள்?மனிதர்களை பிரமிக்கவைக்கும் 10 கடல் உயிரினங்கள்: இதில் எது உங்களை உண்மையில் மிரள வைத்தது என்று கூறுங்கள்?

SIRT6 அதிகரிப்பதனால் ஏற்பட்ட நம்ப முடியாத மாற்றங்கள் என்ன-என்ன?

SIRT6 அதிகரிப்பதனால் ஏற்பட்ட நம்ப முடியாத மாற்றங்கள் என்ன-என்ன?

நேச்சர் கம்யூனிகேஷன் இதழில் "SIRT6 ஆல் ஆற்றல் ஹோமியோஸ்டாசிஸை மீட்டெடுப்பது ஆரோக்கியமான ஆயுட்காலத்தை நீட்டிக்கிறது" என்று ஆய்வின் முடிவுகள் வெளிப்படுத்துவதாக வெளியிடப்பட்டுள்ளது. அதிகரித்த SIRT6 புரதம், இந்த விஷயத்தில் எலிகளின் ஆயுட்காலத்தை அதிகரித்தது மட்டுமல்லாமல், சாதாரண எலிகளுடன் ஒப்பிடும்போது இந்த எலிகள் அதிக இளமையோடும், புற்றுநோயால் தாக்குதலுக்கான வாய்ப்பு மிகவும் குறைவாகத் தோற்றமளித்துள்ளது என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

மனிதர்கள் இளமையோடு சுமார் 120 ஆண்டுகள் வரை உயிர்வாழ முடியுமா?

மனிதர்கள் இளமையோடு சுமார் 120 ஆண்டுகள் வரை உயிர்வாழ முடியுமா?

ஆய்வுக் குழுவிற்குத் தலைமை தாங்கிய பார்-இலன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹைம் கோஹன் கூறுகையில், ''பரிசோதனையைத் தொடர்ந்த எலிகளின் ஆயுட்காலம் மாற்றம் மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. எலிகளில் காணப்பட்ட அதே தாவல், மனிதர்களுக்கும் பயன்படுத்தப்பட்டால், சராசரியாக ஒரு மனிதன் சுமார் 120 ஆண்டுகள் வரை உயிர்வாழ முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். என்று அவர் கூறியுள்ளார்.

இதுதான் பூமியின் அதிசயம்: 1.6 பில்லியன் ஆண்டு பழமையான நீர் கண்டுபிடிப்பு.! செவ்வாய் ரகசியங்களை கட்டவிழ்க்குமா?இதுதான் பூமியின் அதிசயம்: 1.6 பில்லியன் ஆண்டு பழமையான நீர் கண்டுபிடிப்பு.! செவ்வாய் ரகசியங்களை கட்டவிழ்க்குமா?

எலிகளில் கண்ட மாற்றங்களை மனிதர்களிடமும் காண முடியுமா?

எலிகளில் கண்ட மாற்றங்களை மனிதர்களிடமும் காண முடியுமா?

"எலிகளில் நாங்கள் கண்ட மாற்றங்கள் மனிதர்களுக்கு மொழிபெயர்க்கக்கூடிய சாத்தியங்களை விஞ்ஞானிகள் நம்புகின்றனர், அப்படி அது நடந்தால் உண்மையில் உற்சாகமாக இருக்கும்" என்று கோஹன் டைம்ஸ் ஆஃப் இஸ்ரேலிடம் கூறினார். அமெரிக்கத் தேசிய சுகாதார நிறுவனங்களைச் சேர்ந்த பேராசிரியர் ரபேல் டி கபோ உள்ளிட்ட சர்வதேச விஞ்ஞானிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு, இந்த நேரத்தில் எலிகளின் ஆயுட்காலம் அதிகரிப்பது எந்தவொரு குறிப்பிட்ட பாலினத்துடனும் மட்டுப்படுத்தப்படவில்லை என்பதைக் காட்டுகிறது.

எந்த பாலினத்தின் ஆயுட்காலம் அதிகமாக இருக்கிறது? ஆணா அல்லது பெண்ணா?

எந்த பாலினத்தின் ஆயுட்காலம் அதிகமாக இருக்கிறது? ஆணா அல்லது பெண்ணா?

இருப்பினும், ஆண் மற்றும் பெண் எலிகளிடையே காணப்பட்ட ஆயுட்காலம் சதவீதம் அதிகரித்தது முற்றிலுமாக வேறுபட்டது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். SIRT6 புரதம் அதிகரித்த ஆண் எலிகள் கிட்டத்தட்ட 30 சதவிகிதம் அதிகமாக வாழ்ந்தாலும், ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக இல்லாத எலிகளை விடப் பெண் எலிகள் கிட்டத்தட்ட 15 சதவிகிதம் அதிகமான நாட்கள் உயிர் வாழ முடியும் என்பதை ஆராய்ச்சியின் முடிவுகள் காட்டியுள்ளது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

SBI பயனர்களின் கவனத்திற்கு: பணம் எடுக்கும் முறையில் புதிய மாற்றம்.. ATM சேவைக்கு GST உடன் கட்டணம்..SBI பயனர்களின் கவனத்திற்கு: பணம் எடுக்கும் முறையில் புதிய மாற்றம்.. ATM சேவைக்கு GST உடன் கட்டணம்..

கோஹன் மேற்கொண்ட 2012 பரிசோதனையின் முயற்சி

கோஹன் மேற்கொண்ட 2012 பரிசோதனையின் முயற்சி

கோஹன் மேற்கொண்ட 2012 பரிசோதனையின் முயற்சிக்குப் பின்னர் இந்த புதிய ஆய்வு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். முந்தைய பரிசோதனையில் ஆண் எலிகளிடையே நிகழும் ஆயுட்காலத்தை கோஹன் அதிகரித்துக் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. எலிகளின் ஆயுட்காலத்தை அதிகரித்த முதல் விஞ்ஞானியாக இவர் உருவாக்கினார். இருப்பினும், அந்த சோதனையில் பெண் எலிகளின் ஆயுட்காலம் மீது எந்த தாக்கத்தையும் ஆராய்ச்சி ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மனிதர்களிடமும் இந்த பரிசோதனையை மேற்கொள்ள முடிவு

மனிதர்களிடமும் இந்த பரிசோதனையை மேற்கொள்ள முடிவு

கோஹனின் ஆய்வகம் இப்போது மனிதர்களிடமும் இதேபோன்ற பரிசோதனையை மேற்கொள்ளப் புதுமையான முறைகளைத் தேடுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எலிகள் மரபணு முறைப்படி மாற்றப்பட்டாலும், இதை மனிதர்களுக்கு முறையாய் செய்து முடிக்க சில மருந்துகள் தேவைப்படும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். மனிதர்கள் மீது இப்படியான ஒரு சோதனை நடத்தும் முன்பு, பல கோணங்களில் பலதரப்பட்ட பாதுகாப்பு யோசனைகளை விஞ்ஞானிகள் முன்பே மேற்கொள்ள வேண்டியது கட்டாயம்.

மொபைல்போன் முதல் இருசக்கர வாகனங்கள் வரை: தடுப்பூசி போடவைக்க புதிய முயற்சி.!மொபைல்போன் முதல் இருசக்கர வாகனங்கள் வரை: தடுப்பூசி போடவைக்க புதிய முயற்சி.!

மனிதனை 120 ஆண்டுகள் வாழ அனுமதிக்கும் 'சாகா வரத்திற்கான' முதல் படி

மனிதனை 120 ஆண்டுகள் வாழ அனுமதிக்கும் 'சாகா வரத்திற்கான' முதல் படி

ஆராய்ச்சியின் முடிவுகளை வைத்து விஞ்ஞானிகள் சிறிய மூலக்கூறுகளை உருவாக்கி வருகின்றனர். அவை SIRT6 இன் அளவை அதிகரிக்கக்கூடும், அல்லது இருக்கும் புரதத்தின் அளவை இன்னும் சுறுசுறுப்பாக மாற்றக்கூடும் என்று விஞ்ஞானி கூறுகின்றனர். இப்போதிலிருந்து இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் ஒரு உறுதியான முடிவுகளை விஞ்ஞானிகள் உருவாக்கிவிடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. சாகா வரத்திற்கான முதல் படியே மனிதனை 120 ஆண்டுகள் வாழ அனுமதிக்கும் என்பது உண்மையில் ஆச்சரியம் தான்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Israel Scientists Have Found a Way to Extend Life on 250 mice and it can be replicated on humans too : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X