இஸ்ரோவின் கனவில் ஒரு லாரி மண்ணை அள்ளிக்கொட்டிய இஸ்ரேல்; கொடுமை!
எல்லாம் திட்டமிட்டபடி சென்றால், இஸ்ரேல் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க விண்வெளி சாதனை ஒன்றை உருவாக்கும்.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவும் ஒரு மறைமுகமான "நீயா? நானா" போட்டியில் ஈடுபட்டு கொண்டு இருக்கும் நிலைப்பாட்டில், சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமானது, நிலவும் இருண்ட பகுதியில் (நிலவின் முதுகு என்றும் அழைக்கப்படும் பகுதியில்) அதன் மூன் லேண்டரை தரை இறக்கி "சத்தம் போடாமல்" ஒரு சாதனையை செய்தது.

அதன் பின்னர் தான் இஸ்ரோவின் "ககன்யான்" திட்டம் சூடு பிடித்தது என்பதும் அதன் தலைவர் கே. சிவன் தாமதம் ஆனதிற்கான விளக்கங்களை அறிக்கைகளாய் வெளியிட்டதும் வேறு விடயம். இந்நிலைப்பாட்டில் இஸ்ரேல் ஒரு "விண்வெளி மைல்கல்லை" பதிக்க போவது போல் தெரிகிறது. இந்த "மைல்கல்" ஆனது தேசிய விண்வெளி ஆராய்ச்சி மையங்களுக்கு மட்டுமின்றி எலான் மஸ்கின் தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸிற்கு கூட பேரிடியாய் அமைந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அது என்ன மைல்கல்? அதன் பின்னணி என்ன?

முதல் நாடு என்கிற சாதனையை இஸ்ரேல் நிகழ்த்த உள்ளது!
எல்லாம் திட்டமிட்டபடி சென்றால், இஸ்ரேல் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க விண்வெளி சாதனை ஒன்றை உருவாக்கும். ஆம், ஒரு தனியார் நிறுவனத்தினால் உருவாக்கம் பெற்ற ஒரு மூன் லேண்டரை (செயற்கை கோள்), அண்ட் மூன் லேண்டரை ஒரு தனியார் நிறுவனத்தின் ராக்கெட்டின் முதுகில் ஏற்றி, அந்த ராக்கெட்டை ஒரு தனியார் ஏவுகணை தளத்தில் இருந்து செலுத்தும் முதல் நாடு என்கிற சாதனையை இஸ்ரேல் நிகழ்த்த உள்ளது. இது விண்வெளியின் வரலாற்றின் ஸ்பேஸ்பிளைட் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இஸ்ரேலின் பெயரை மேலே கொண்டு செல்ல உள்ளது!
ஏனெனில் வழக்கமாக மூன் லேண்டர் அல்லது ஏதேனும் ஒரு செயற்கை கோள், ராக்கெட் மற்றும் ஏவுதளம் ஆகிய அனைத்தயும் ஒரு நாட்டின் விண்வெளி மையமே உருவாக்கும். அல்லது இஸ்ரோவை அல்லது ஸ்பேஸ்எக்ஸை போல் இதர விண்வெளி நிறுவனங்களின் செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த உதவி செய்யும், ஆனால் இந்த வழக்கில், ஒவ்வொன்றும் தனிப்பட்ட தனியார் நிறுவனங்களின் கீழ் உருவாக்கம் பெற்று அது இஸ்ரேலின் பெயரை மேலே கொண்டு செல்ல உள்ளது. அதனால் தான் இந்த விடயம் செய்தி தலைப்பாகி உள்ளது.

ஒரு புதிய சரித்திரம் உருவாக்கம் பெறும்!
புளோரிடாவில் இருந்து தொடங்கப்பட உள்ள இந்த திட்டம் ஆனது முழுமையாக தனியார்மயமாக்கப்பட்ட ஒரு நிலவு பயண திட்டம் ஆகும். இந்த திட்டம் 'பெரீஷீட்' என்கிற பெயரை சுமந்து உள்ளது ஹெப்ரூ மொழியின் படி - ஆதியாகமம் அல்லது தொடக்கம் என்று பொருள். எல்லாம் திட்டமிட்ட படி, சரியாக நடக்கும் பட்சத்தில் இஸ்ரேலின் மூன் லேண்டர் ஆனது வருகிற ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி அன்று சந்திரனின் மேற்பரப்பில் பாதுகாப்பாக தரை இறங்கும். மேற்கூறியபடி, அன்று ஒரு புதிய சரித்திரம் உருவாக்கம் பெறும்.

சோகமும், மகிழ்ச்சியும்!
உண்மையில் இந்த பீரெய்ஷீட் திட்டம் ஆனது, கடந்த 2010ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கூகுள் லுனார் எக்ஸ்பிரீஸ் போட்டியின் கீழ் உருவான சிந்தனை ஆகும் என்பதும், அந்த நேரத்தில், 30 மில்லியன் டாலர்கள் என்கிற சன்மானத்தை பெறுவதற்காக மூன் லேண்டிங் திட்டம் ஒன்றை தனியார் குழுக்கள் உருவாக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. சோகமான விடயம் என்னவென்றால் அந்த போட்டியில் யாருமே வெல்லவில்லை, மகிழ்ச்சியான விடயம் என்னவென்றால் அந்த போட்டியின் விளைவாக பீரெய்ஷீட் திட்டம் ஆனது நிலவை அடையும் என்கிற அளவில் போதுமான நம்பிக்கை இஸ்ரேலுக்கு பிறந்தது.

என்னென்ன கொண்டு செல்கிறது?
அதனை தொடர்ந்து ஸ்பேஸ்இல் மற்றும் இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை இணைந்து பணியாற்றுவதற்காக ஒன்றுசேர்ந்து செயல்பட்டன. பீரெய்ஷீட் திட்டமானது, கேமராக்களை எடுத்து செல்கிறது, உடன் ஒரு காந்த அளவி மற்றும் டைம் காப்ஸ்யூல் ஆகியவற்றை கொண்டு செல்கிறது.

பல்பு வாங்கிய இஸ்ரோ, ஏன்?
இதுவரை, ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டும் தான் சந்திரனில் தரை இறங்கியிருக்கின்றன. நான்காவது நாடு என்கிற இலக்கை அடைய இந்தியா தீவிரமாக செயல்பட்டு வரும் நிலைப்பாட்டில் அந்த இலக்கை இஸ்ரேல் அடைந்து விடும் என்பது போல் தெரிகிறது. அதற்கு இன்னொரு காரணம் - இஸ்ரேல் விண்கலத்தின் செலவீனம் ஆகும். வெறும் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கலில் உருவாகி உள்ள மிகவும் எடை குறைவான விண்கலமாகும். ஆகமொத்தம் தனியார் நிறுவனங்கள் எல்லாம் ஒன்று கூடி "கெத்து" காட்டி, இந்தியாவின் இஸ்ரோவை "வெத்து" ஆக்கி விட்டன!


Click it and Unblock the Notifications