பூமியை விட 5 மடங்கு அதிக தண்ணீர் கொண்டுள்ளது வியாழன் கிரகம்: நாசா தவகவல்-வீடியோ.!
வியாழனில் பெரிய அளவில் செந்நிற புள்ளி இருப்பதை விஞ்ஞானிகள் அதிநவீன தொலைநோக்கியை வைத்தும், பின்பு நாசா ஆய்வக பொருட்களை வைத்தும் கண்டுபிடித்துள்ளனர்.
நாசா விண்வெளி ஆய்வு மையம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி கடந்த 1995-ம் ஆண்டு டிசம்பர் 7-ம் தேதி கலிலியோ என்ற விண்கலத்தை வியாழன் கிரகத்தை சோதனை அனுப்பியது நாசா, இந்த விண்கலம் தற்போது பெரிய
சிகப்பு புள்ளி ஒன்றை வியாழன் கிரகத்தில் இருப்பதாக கண்டுபிடித்துள்ளது.
மேலும் துணைக்கோள்கள் பனிக்கட்டியால் நிரம்பி இருப்பதாக தெரிய வந்துள்ளது, குறிப்பாக சூரியனை விட 9 மடங்கு ஆக்சிஜன் வியாழனில் அதிகமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாசா சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்து என்னவென்றால்
வளிமண்டலம் பூமியை விட பல மடங்கு அடர்த்தியாக உள்ளது, எனவே கண்டிப்பாக தண்ணீர் இருக்கும் என்று நாசா விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

வியாழன்
வியாழனில் பெரிய அளவில் செந்நிற புள்ளி உள்ளது என்றும், இது ஆசிய கண்டத்தை விட மிகப் பெரியதாக இருக்கும். குறிப்பாக இது முழுக்க முழுக்க தண்ணீரால் நிரம்பியுள்ளது என்ற நாசா அமைப்பு கூறியுள்ளது.

விஞ்ஞானிகள்
வியாழனில் பெரிய அளவில் செந்நிற புள்ளி இருப்பதை விஞ்ஞானிகள் அதிநவீன தொலைநோக்கியை வைத்தும், பின்பு நாசா
ஆய்வக பொருட்களை வைத்தும் கண்டுபிடித்துள்ளனர். மேலும் இதை சுற்றி பெரிய அளவில் மேகமூட்டம் நிலவுவதாக கூறப்படுகிறது.

கடல்
குறிப்பாக வியாழன் கிரகத்தில் எவ்வளவு தண்ணீர் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது, அதாவது அந்த செந்நி புள்ளியில் மட்டுமே பூமியில் இருக்கும் கடல்களை விட அதிக தண்ணீர் இருக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

5 மடங்கு தண்ணீர்
எனவே பூமியை விட 5 மடங்கு தண்ணீர் இருக்க வாய்ப்பு உள்ளத என நாசா விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது


Click it and Unblock the Notifications