Home
Scitech

ஐக்கிய அரபு அமீரக வானில் தோன்றிய மர்ம துளை! குழப்பத்தில் மக்கள்..

"இந்த நீர் துளிகள் உறைவதற்கு அல்லது அவற்றை -40° செல்சியஸ்க்கு கீழே குளிர்விக்க ஒரு சிறிய துகள்/கரு தேவைபடுகிறது.

ஏலியன் விண்கலங்கள் மற்றும் வானில் தென்படும் பிற விசித்திரமான பொருட்களை பற்றிய கதைகளுக்கு என்றைக்குமே பஞ்சம் இல்லை. அவற்றில் பெரும்பாலானவை சில மிகவும் புத்திசாலியான புகைப்பட தொகுப்பாளர்களின் (ஃபோட்டோ எடிட்டர்) கைவண்ணமாக தான் இருக்கும். ஆனால் சில நேரங்களில் இயற்கையும் தனது அபரிமிதமான சக்தியை காண்பிக்க முடிவுசெய்துவிடுகிறது.

ஐக்கிய அரபு அமீரக வானில் தோன்றிய மர்ம துளை!  குழப்பத்தில் மக்கள்..

வானியல் மற்றும் விண்கல் ஆய்வாளர் என கூறிக்கொள்ளும் ஐக்கிய அரபு அமீரகத்தின் குடிமகனான இப்ராஹிம் அல் ஜார்வான், வானத்தில் உள்ள துளை ஒன்றின் வீடியோவை வெளியிட்டுள்ளார். அது தோரின் வீடான அஸ்கார்டில் இருந்து வரும் ஒரு நுழைவுவாயில் போல இருக்கிறது இல்லையா? மார்வெல் ரசிகர்களுக்கு இது புரியும் என நம்புகிறேன்!!!.

பெரிய வட்ட வடிவிலான பகுதி

பெரிய வட்ட வடிவிலான பகுதி

அந்த வீடியோவில், அதிகமான காணப்படும் மேக கூட்டத்தில் இருந்து ஒரு பெரிய வட்ட வடிவிலான பகுதி மட்டும் வெளியே வருவதை நம்மால் காணமுடியும். இந்த வீடியோவானது ஓமன் எல்லைக்கு அருகில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

வைரலான வீடியோ

சமூக வலைதளங்களில் வைரலான இந்த வீடியோக்களை பார்த்த பெரும்பாலனோர், இது மிகப்பெரிய ஏலியன் விண்கலன் என்றும், ஏலியன் உலகில் இருந்து பூமிக்கு வர வேற்றுகிரவாசிகள் உருவாக்கிய நுழைவாயில் எனவும் கருத்துதெரிவித்துவருகின்றனர்.

மேக கூட்டத்தில் பனிக்கட்டிகள்

மேக கூட்டத்தில் பனிக்கட்டிகள்

பின்னர் இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள வானிலை ஆய்வு மையம், மேக கூட்டத்தில் பனிக்கட்டிகள் உருவாகும் போது அவை மிகப்பெரியதாக இருந்தால் மேகக்கூட்டத்தில் இருந்து கீழே விழும்போது இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படும் என கூறியுள்ளது." அதீதமாக குளிர்விக்கப்பட்ட நீர்துளிகள் உள்ள மேகங்களில் இவை உருவாகின்றன. 0° செல்சியஸில் தண்ணீர் இருந்தாலும் அது உறைந்த நிலையில் இருக்காது" என வானிலை ஆய்வு மைய இணையத்தளம் விளக்குகிறது.

வெப்பநிலை

வெப்பநிலை

"இந்த நீர் துளிகள் உறைவதற்கு அல்லது அவற்றை -40° செல்சியஸ்க்கு கீழே குளிர்விக்க ஒரு சிறிய துகள்/கரு தேவைபடுகிறது. இந்த வெப்பநிலை மாற்றமானது அதீதமாக குளிர்விக்கப்பட்ட நீர்துளிகள் உறைவதற்கும், மேக அடுக்குகளில் இருந்து இது போன்ற தனித்துவமான வடிவத்தில் கீழே விழுவதற்கும் போதுமானதாக உள்ளது" என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஃபால்ஸ்ட்ரீக்

ஃபால்ஸ்ட்ரீக் என அழைக்கப்படும் இந்த மிகப்பெரிய துளையானது பொதுவாக வட்ட அல்லது நீள்வட்ட வடிவில் மேகங்களில் தோன்றும். மேகங்களில் உள்ள நீரின் வெப்பநிலையானது உறைநிலைக்கு கீழே இருக்கும் போது இத்தகைய துளைகள் உருவாகின்றன.

Best Mobiles in India

English summary
Is That A Portal For Thor? People Left Puzzled After They Spot Mysterious Hole In UAE Sky: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X