SpaceX- மாடலில் தனியார் நிறுவனமாக மாறும் Tesla ?

விதிமுறைகளின்படி தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்ய அதிகப்பட்சமாக 2000 முதலீட்டாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

|

SpaceX- நிறுவனத்தை முன் மாதிரியாக வைத்து தெஸ்லா எலக்ட்ரிக் கார் கம்பெனியை தனியார் வசப்படுத்த இருப்பதாக, தெஸ்லாவின் தலைமைச் செயல் அதிகாரி எலன் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்நிறுவனம் எதிர்பார்த்த அளவு இலாபகரமாக இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் எலன் மஸ்க் தெரிவித்துள்ள கருத்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அதற்கான பதில்களை இங்குக் காணபோம்.

SpaceX- மாடலில் தனியார் நிறுவனமாக மாறும்  Tesla ?

எலன் மஸ்க் கூறியதன் பொருள் என்ன?
தெஸ்லா நிறுவனத்தை வால் ஸ்டிரீட்டின்( அமெரிக்காவின் பங்கு வர்த்தக மையம்) சீராய்விலிருந்து பாதுகாக்கவும், இலாபகரமான காலாண்டு முடிவினைப் பெறுவதற்காகவும் அதன் நிர்வாகத்தைத் தனியார்மயப்படுத்த வேண்டியுள்ளது. SpaceX நிறுவனத்தைத் திறம்பட நிர்வகிப்பதற்கு அது தனியார் நிர்வாகத்தில் இருப்பதுதான் காரணம். அதற்காக தெஸ்லா நிறுவனம் நீண்ட காலத்திற்கு தனியார் நிறுவனமாக இருக்கும் என்று கூறமுடியாது. தெஸ்லா நிறுவனம் மெதுவாக வளர்ச்சியடையத் தொடங்கியதும் அது மீண்டும் பொதுச் சந்தைக்கும் பொது நிர்வாகத்திற்கும் திரும்பிவிடும், என்று எலன் மஸ்க் கூறுகிறார்.
SpaceX- மாடலில் தனியார் நிறுவனமாக மாறும்  Tesla ?

SpaceX என்பது என்ன?
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைத் தலைமை இடமாகக் கொண்டு 2003 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது SpaceX நிறுவனம். ஃபால்கான் 9 ரக ராக்கெட்டுகளை (Falcon 9 rockets)மறு பயன்பாட்டுக்கு உட்படுத்தியதன் மூலம் விண் வெளித் திட்டங்களில் செலவைக் குறைக்க உதவியதன் வழியாக இந்நிறுவனம் புகழ்ப்பெற்றது. இது வரை 50 ஃபால்கான் ராக்கெட்டுகளை இந்நிறுவனம் வெற்றிகரமாக ஏவியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் உலகின் மிகச் சக்தி வாய்ந்த ஃபால்கன் ஹெவி ராக்கெட்டை இந்நிறுவனம் வானில் ஏவியது.
SpaceX- மாடலில் தனியார் நிறுவனமாக மாறும்  Tesla ?

SpaceX நிறுவனம் யாருக்குச் சொந்தமானது?
SpaceX நிறுவனத்தின் 54 சதவிகித பங்குகள் மஸ்க் அறக்கட்டளையின் (Musk trust) வசம் உள்ளது. பிற பங்குதாரர்கள் அதிகப்பட்சமாக 10 சதவிகிதத்திற்கு உட்பட்ட பங்குகளை மட்டுமே தங்களிடம் வைத்துள்ளனர். ஆல்பாபெட் கூகுள் நிறுவனம் 2015 ஜனவரி மாதம் 900 மில்லியன் டாலர்களை (6,200 கோடி ரூபாய்) இந் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது. தனிநபர் முதலீட்டாளர்கள் மற்றும் கூட்டிணைவு நிறுவனம் சார்ந்த முதலீட்டாளர்கள் பலரும் இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். இந்நிறுவனத்தின் மதிப்பு ஏறக்குறைய 25 பில்லியன் டாலர்கள் ஆகும்.

பணியாளர்களும், சிறு முதலீட்டாளர்களும் இந்நிறுவனப் பங்குகளை வாங்கவோ, விற்கவோ முடியுமா?

SpaceX நிறுவனத்தின் பங்குகளை இந்நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களும், சிறு முதலீட்டாளர்களும் வாங்கலாம். சிறிது காலம் கழித்து அதனை விற்கவும் செய்யலாம். ஆனால் இந்நிறுவனப் பங்குகளை நீண்டகால நோக்கில் வாங்குவதுதான் சிறந்தது. ஆறு மாதத்திற்கு ஒரு முறை, இந் நிறுவனப் பணியாளர்களும், சிறு முதலீட்டாளர்களும் இந்நிறுவனத்தின் பங்குகளை வாங்கவும் விற்கவும் வாய்ப்புத் தரப்படுகிறது.

SpaceX- மாடலில் தனியார் நிறுவனமாக மாறும்  Tesla ?

யார் பங்குகளை வாங்க வேண்டும் யார் விற்க வேண்டும் என்பதை SpaceX நிறுவனமே தீர்மானிப்பதாக இங்கு பணியாற்றும் பணியாளர் ஒருவர் தெரிவிக்கிறார். 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் SpaceX பங்குகள் விற்பனைக்கு வந்ததாகவும் தெரிய வருகிறது.

தெஸ்லா நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளவர்கள் தொடர்ந்து அதனுடைய பங்குகளைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் எனத் தான் விரும்புவதாக எலன் மஸ்க் தெரிவித்துள்ளார். முதலீட்டாளர்களின் பாதுகாப்புக்காக சிறப்பு நிதியம் ஒன்றை ஏற்படுத்த இருப்பதாகவும் இவர் கூறுகிறார். ஏற்கனவே, “நம்பகமான ஸ்பேஸ் எக்ஸ் முதலீடு” (Fidelity's SpaceX investment) என்னும் திட்டம் செயல்பாட்டில் இருப்பதாகவும் கூறுகிறார்.

பிற முதலீட்டாளர்கள், சிறப்புத் திட்ட நிதியம் (special purpose funds) மூலமாகவோ அல்லது சிறப்பு நோக்க வாகனங்கள் மூலமாகவோ (special purpose vehicles) SpaceX நிறுவனத்தில் முதலீடு செய்யலாம்.பொதுவாக, தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களைப் பற்றி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிந்து வைத்திருப்பது இல்லை. பெரும்பாலும், சிறு முதலீட்டாளர்களைக் காட்டிலும் பெரும் தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள்தான் இந்நிறுவனத்தில் முதலீடு செய்கின்றனர்.


விதிமுறைகளின்படி தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்ய அதிகப்பட்சமாக 2000 முதலீட்டாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.நாசா தங்களோடு ஒப்பந்தம் செய்பவர்களை தனியார் அல்லது பொது நிறுவனம் என வேறுபடுத்திப் பார்க்கிறதா?

நாசா தங்களுடைய விண்வெளிப் பணிகளுக்காகத் தனியார் மற்றும் பொது நிறுவனங்களின் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்கிறது. உதாரணமாக, சர்வதேச விண்வெளி நிலையத்திற்குத் தேவையான பொருட்களைக் கொண்டு செல்ல Northrop Grumman நிறுவனம் மற்றும் SpaceX ஆகிய நிறுவனங்களுடன் நாசா ஒப்பந்தம் செய்துள்ளது. வீரர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்ல ராக்கெட் மற்றும் கேப்சூல்களைத் தயாரிக்க Boeing நிறுவனம் மற்றும் SpaceX ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

Best Mobiles in India

English summary
Is SpaceX the Model for a Private Tesla: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X