Just In
- 1 day ago
கேப் விடாமல் தூள் கிளப்பும் ரெட்மி: மொத்த பேரின் கவனத்தையும் ஈர்க்கும் டர்போ ஸ்மார்ட்போன்!
- 1 day ago
பட்ஜெட் விலையில் 5G போனை களமிறக்கும் Samsung: என்னென்ன அம்சங்கள்?
- 1 day ago
இந்திய அரசு போட்ட புது உத்தரவு.! செய்யவே மாட்டோம்னு சொன்ன Jio, Airtel, Vi.! என்னாச்சு தெரியுமா?
- 1 day ago
பெரிய மனுஷன்பா! Google-ல் குற்றம் கண்டுபிடித்த 2 இந்தியர்கள்.. ரூ.18 லட்சத்தை அள்ளிக்கொடுத்த சுந்தர் பிச்சை!
Don't Miss
- News
"முதல்வர் வேட்பாளர்".. ஈரோடு கிழக்கால் ஏற்பட்ட ட்விஸ்ட்.. அலர்ட்டான அண்ணாமலை.. இதுதான் சங்கதியா?
- Sports
"ஒரே ஒரு குறைதான்.. சரி செய்தால் நம்.1 பவுலர் ஆகலாம்".. உம்ரானுக்கு முகமது ஷமி முக்கிய அட்வைஸ்!
- Automobiles
கார்களுக்கு பதிலா இந்த ஆட்டோக்களையே வாங்கிடலாம் போல... விலையோ கம்மி, வசதியோ மிக அதிகம்!
- Lifestyle
Today Rasi Palan 23 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் நீண்ட நாள் பண பிரச்சனை நீங்கிடும்...
- Finance
Budget 2023:பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் 5 முக்கிய அறிவிப்புகள்..!
- Movies
Bigg Boss Tamil 6: பிக் பாஸ் டைட்டில் வின்னர் அசீமுக்கு 50 லட்சத்துடன்.. சொகுசு காரும் பரிசு!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
சனி கிரகத்தில் உயிர் அடையாளமா? NASA-வை ஷாக் ஆக்கிய சிறிய தடயம்.! அடுத்த பிளான் ரெடி.!
இந்த பிரபஞ்சத்தில் எங்கோ ஒரு மூலையில் வேற்றுகிரகவாசிகள் (Alien life) இருக்கிறார்களா? இந்த பிரபஞ்சத்தில் நாம் தனியாகத் தான் இருக்கிறோமா? அல்லது வேறு ஏதேனும் உயிர்கள் (life on other planets) நமக்கு தெரியாமல் வாழ்ந்து வருகிறதா? என்ற கேள்வி விஞ்ஞானிகள் மத்தியில் பல காலமாக எழுந்து வருகிறது. இதற்கான விடையை அறிந்துகொள்ள விஞ்ஞானிகளின் சமூகம் அதிக வளங்களை ஆராய்ந்து, ஆராய்ச்சி செய்யத் தள்ளியுள்ளது. இதில் NASA-விற்கு பெரும் பங்குண்டு.!

நம்முடைய சூரிய குடும்பத்திலேயே வேற்று கிரகவாசிகள் அல்லது ஏலியன் உயிர்கள் இருக்கிறதா?
உயிர் அடையாளங்கள் உடன் பூமியை ஒத்த கிரகங்களைத் தேடும் தொலைதூர விண்மீன் திரள்களில் விஞ்ஞானிகள் தடயங்களை தேடி வருகிறார்கள்.
நம்முடைய சூரிய குடும்பத்தில் (solar system) இருக்கும் மற்ற கிரகங்களில் (solar system planets) உயிர்கள் இருக்குமா? என்று பார்த்தபோது; அதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
ஆனால், இப்போது ஒரு புதிய கருத்து அனைத்தையும் தலைகீழாக மாற்றியுள்ளது.!

கிரங்களில் உயிர் அடையாளம் இல்லை..! ஆனால், நிலவில் இருக்கலாம்.!
காரணம், நம்முடைய சூரியக் குடும்பத்தில் இருக்கும் கிரகங்களில் உயிர்கள் இருப்பதற்கான அடையாளங்கள் இல்லை என்றாலும் கூட, இந்த கிரகங்களைச் சுற்றி வரும் சில நிலவுகளில் இதற்கான வாய்ப்புகள் இருப்பதாக NASA கண்டுபிடித்துள்ளது.
முன்பு நாம் நினைத்ததை விட, இப்போது நமது பூமிக்கு மிக நெருக்கமாக இருக்கும் ஒரு நிலவில் இந்த அடையாளங்களை நாம் காண வாய்ப்புள்ளது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

சனி கிரகத்தின் 83 நிலவுகளில் உள்ள ஒரு நிலவு நாசாவுக்கு கொடுத்த ஷாக்.!
நாசாவின் இந்த நம்பிக்கைக்குக் காரணம், சனிக் கோளின் 83 நிலவுகளில் (Saturn's 83 moons) ஒன்றான என்செலடஸ் (Enceladus) ஆகும்.
வேற்றுகிரகவாசிகளை இந்த நிலவு தன்னுள் வைத்திருப்பதாக நம்பப்படுகிறது. மிக விரைவில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அதன் சாத்தியக்கூறுகளை ஆராயும் பணியைத் தொடங்கும் என்று அறிவித்துள்ளது.
ஆனால் சுவாரஸ்யமாக, இந்த புதிய ஆராய்ச்சியை மேற்கொள்ள நாசா சனியின் சந்திரனில் காலடி எடுத்து வைக்க வேண்டிய அவசியமில்லை.!

இந்த Enceladus நிலவில் ஏலியன் உயிர்களைத் தேடுகிறதா நாசா?
அது உயிருக்கு இடமளிக்கிறதா இல்லையா என்பதை Enceladus நிலவில் கால் பதிக்காமல் ஆராய நாசா முடிவு செய்துள்ளது.
அது எப்படி என்று இப்போது பார்க்கலாம். என்செலடஸில் வேற்று உயிர்கள் அல்லது ஏலியன் உயிர்களைத் (alien life) தேடுகிறதா நாசா? ஏன்.. என்ன காரணம்? என்செலடஸில் நாசா அப்படி என்ன அடையாளங்களைக் கண்டது.
என்செலடஸ் பூமியில் இருந்து 800 மில்லியன் மைல் தொலைவில் அமைந்துள்ளது.

பூமியை விட சிறிய நிலவில் உயிர்கள் வாழக்கூடிய சூழலா?
அது 82 மற்ற நிலவுகளுடன் சனியைச் சுற்றி வருகிறது. இந்த நிலவு நமது பூமி கிரகத்தை (Earth) விட 25 மடங்கு சிறியது, இருப்பினும் எப்படியோ, அது உயிர்களை நிலைநிறுத்துவதற்கான அனைத்து சரியான சூழ்நிலைகளையும் கொண்டுள்ளது என்று நாசா (NASA) கூறியுள்ளது.
இங்குத் திரவ தண்ணீர் இருக்கும் காரணத்தினாலேயே இங்கு ஏலியன் உயிர்கள் இருக்கும் என்று பெரிதும் நம்பப்படுகிறது. இந்த நிலவில் கீசர் (geyser) போன்ற நீர் புளூம்களை நாசா கண்டறிந்துள்ளது.

இந்த நிலவுக்கு அடியில் ராட்சச கடல் இருக்கிறதா?
இந்த கீசர்கள் ப்ளூம்ஸ் நீர் மற்றும் வாயு இரண்டையும் கொண்டுள்ளது. நீர் அதன் கடல்களில் இருந்து வருகிறது என்பது ஒரு வலுவான நம்பிக்கையாக இருக்கிறது.
நாசா பல ஆண்டுகளாக என்செலடஸை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால், இந்த நிலவின் சிக்கலான தன்மை மற்றும் நிதி தான் நாசாவின் ஆராய்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டது.
ஆனால், இப்போது நாசா இந்த சிக்கல்களை தரைமட்டமாக்க புதிய ஐடியாவை கையில் எடுத்துள்ளது.

இங்கு நுண்ணுயிர் வாழ்வு இருக்கிறதா? இல்லையா?
நிலவின் தரை மட்டத்திலிருந்தும், சுற்றுப்பாதையிலிருந்தும் நிலவை ஆய்வு செய்வது, அங்கு நுண்ணுயிர் வாழ்வு இருக்கிறதா இல்லையா என்பது பற்றிய ஒரு விரிவான படத்தை நாசா உருவாக்க திட்டமிடுகிறது.
2050-க்குள் இது நடக்கலாம் என்று கூறப்படுகிறது. சனி நிலவில் இறங்குவதைத் தவிர்க்கும் போது, எப்படி உயிர் அடையாளங்களைக் கண்காணிக்க முடியும் என்பதற்கு ஒரு புதுமையான முறையை நாசா மேற்கொள்ளவிருக்கிறது.

இது சாதாரணமில்லை.. ஆர்பிட்டருக்கு ரெஸ்ட் இருக்காது.!
என்செலடஸின் கடலில் உயிர்கள் இருந்தால், அங்கு நாம் தரையிறங்கவோ அல்லது துளையிடவோ தேவையில்லை என்றும், அதன் இருப்புக்கான அறிகுறிகளை ப்ளூம் பொருட்களில் இருந்து எடுக்க முடியும் என்று நாசா ஆராய்ச்சி காட்டுகிறது.
ஆனால், அத்தகைய பணிக்கு ஏராளமான கடல்சார் பொருட்களைச் சேகரிக்க ஒரு ஆர்பிட்டர் பலமுறை அந்த நிலவு வழியாகப் பறக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.

உயிர்கள் இருப்பதை எப்படி கண்டுபிடிக்கப்போகிறது நாசா?
எனவே, செயல்முறையை இன்னும் எளிதாக்க, என்செலடஸில் உயிர்கள் இருப்பதை நிரூபிக்கத் தேவையான அளவு கரிமப் பொருட்களைக் கண்டுபிடிப்பதற்குப் பதிலாக, உயிர்கள் இல்லாமல் இருக்கக்கூடிய அதிகபட்ச கரிமப் பொருளைக் கண்டறியப் பரிந்துரைக்கின்றனர்.
காசினி விண்கலம் (Cassini spacecraft), இந்த சந்திரனில் உள்ள கீசர் தண்ணீரைத் மீத்தேன் வாயு உடன் கக்குகிறது என்று சுட்டிக்காட்டியுள்ளது.

சனி கிரகத்தில் ஏலியன் உயிர் இருப்பதை நாசா நிரூபிக்குமா?
இது பொதுவாகப் பூமியில் உள்ள பாக்டீரியா மற்றும் பிற நுண்ணுயிரிகளிலிருந்து வரும் வாயுவைக் குறிக்கிறது. இந்த வாயுவை வைத்து சனி கிரகத்தின் நிலவில் உயிர்கள் உள்ளதா? இல்லையா? என்று நாசா கண்டறியத் துடிக்கிறது.
ஒரு வேலை உயிர்கள் அல்லது உயிர்கள் இருந்ததற்கான அடையாளங்கள் இருந்தால், நாசா ஏலியன் இருப்பை மிக விரைவில் நிரூபிக்கும் என்பது இதன் மூலம் தெரிகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470