Subscribe to Gizbot

நிலவு திட்டமிட்டு கட்டப்பட்டதென்று நிரூபிக்கும் 7 ஆதாரங்கள்.!

Written By:

பிரபஞ்சத்தை படைத்தது இறைவன் தான் என்றால் அவன் படைத்ததிலேயே மிகவும் அழகானது - நிலவு தான். தமிழ் வகுப்பில் கடைசி மார்க் எடுத்தவனை கூட கவிதைகள் எழுதிவைக்கும், பூமிக்கே சொந்தமான நிலவை ரசிக்காத ஜீவராசிகளே கிடையாது எனலாம்.

நிலவு திட்டமிட்டு கட்டப்பட்டதென்று நிரூபிக்கும் 7 ஆதாரங்கள்.!

அழகும் - கவிதைகளும் ஒருபக்கமிருக்க, மறுபக்கம் பூமி கிரகத்தின் நிலவானது முற்றிலும் வேறுபட்ட ஒரு விண்வெளி பொருள் என்றும், அதனுள் பல புதிரக்ளும் மர்மங்களும் இருகின்றன என்றும் நம்பப்படுகிறது. அதில் மிகவும் அசாத்தியமான, நம்பவே முடியாத ஆதாரங்களை கொண்ட ஒரு சதியாலோசனை கோட்பாடு தான் - நிலவு மிகவும் சாத்தியமான முறையில் திட்டமிட்டு கட்டப்பட்டதென்று பரிந்துரைக்கும் 7 ஆதாரங்கள்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சதியாலோசனை கோட்பாடு

சதியாலோசனை கோட்பாடு

அதாவது, பூமி கிரகத்தின் நிலவானது தூசி மற்றும் பாறைகளை கொண்டு 3 மைல் தடிமனான வெளி அடுக்கு கொண்ட ஒரு விண்வெளி பொருளாக திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டது என்றும், மேலும் நிலவிற்குள் சுமார் 20 மைல் சுற்றளவில் திடமான ஷெல் அமைப்பு உள்ளது என்றும், அந்த ஷெல் மிகவும் எதிர்ப்புத்திறன் நிறைந்த பொருட்களான - டைட்டானியம், யுரேனியம் 236, மைக்கா, நெருப்பியம் 237 போன்ற கூறுகளால் உருவாக்கப்பட்டுள்ளது என்கிறது அந்த . உடன் அதற்கான சாத்தியமான ஆதாரங்களும் முன்வைக்கப்படுகின்றன.

நிலவு - கிடையாது என்பதை நிரூபிப்பது மிகவும் எளிமை

நிலவு - கிடையாது என்பதை நிரூபிப்பது மிகவும் எளிமை

ஏலியன் மற்றும் யூஎப்ஒ நம்பிக்கையாளர்கள், நிலவு என்பது மனிதர்களையும் பூமி கிரகத்தையும் கண்காணிக்கும் ஒரு ஏலியன் தளம் (Gaint Base) என்றும் நம்புகின்றனர். அதனை மறைமுகமாக ஆதரிக்கும் வண்ணம் "நிலவின் இருப்பை விட, நிலவு என்ற ஒன்று கிடையாது என்பதை நிரூபிப்பது தான் மிகவும் எளிமையானது" என்கிறார் நாசா விஞ்ஞானியான ராபின் பிரட். இப்படியான நிலவை சுற்றிய மர்மங்களுக்கும், குழப்பங்களுக்கும் அடித்தளமாய் இருப்பது - நிலவு திட்டமிட்டு 'கட்டப்பட்டது' என்பதை நிரூபிக்கும் 7 ஆதாரங்கள் தான். அவைகள் என்னென்ன.?

ஆதாரம் #07

ஆதாரம் #07

ஆதாரம் #7 :
சந்திரனில், 1969-ஆம் ஆண்டு நவம்பரில் நாசா வேண்டுமென்றே ஒரு அசாத்தியமான ஆய்வை நிகழ்த்தியது. அதாவது, ஒரு டன் அளவிலான வெடிபொருள் ஏற்படுத்தும் தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில், தனது லூனார் மாடூலை (lunar module) நிலவின் மேல் மோத செய்தது. அந்த மோதலின் விளைவாக அதிர்ச்சி அலைகளை உருவாக்கி, நிலவில் என்ன நேர்கிறது என்பதை ஆராய்ந்து பார்க்க, இந்த மோதலை நாசா நிகழ்த்தியது.

தடையற்ற ஹைட்ராலிக் கட்டமைப்பு

தடையற்ற ஹைட்ராலிக் கட்டமைப்பு

மோதலுக்கு பின்பு சற்றும் எதிர்பார்க்காத வண்ணம் ஒரு மாபெரும் (கோவில்) மணியின் மேல் மோதியது போல சப்தத்துடன் சுமார் 30 நிமிடங்களுக்கு நிலவில் அதிர்வொலி ஏற்பட்டுள்ளது. இந்த மோதலின் போது நிலவு அதிர்வொலியை மட்டுமின்றி அதனுள் இயங்கும் பிரம்மாண்டமான தடையற்ற ஹைட்ராலிக் கட்டமைப்புகளையும் சேர்த்தே வெளிப்படுத்தியுள்ளது என்று கூறுகிறது இந்த கோட்பாடு.

ஆதாரம் #06

ஆதாரம் #06

சந்திரனில் கிடைக்கப்பெற்ற சில கூறுகள் (elements) ஆனது, நிலவிற்கு துளியும் தொடர்பில்லாத கூறுகளாக உள்ளது. அதுசார்ந்த சந்தேகத்தை முதலில் கிளப்பியது சோவியத் அறிவியல் அகாடமி தான்.நிலவின் மேல் பகுதி ஏன் மிகவும் தடினமாக இருக்கிறது.? நிலவு, டைட்டானியம் போன்ற கனிமங்கள் கொண்டிருப்பது என்ன? போன்ற பல கேள்விகள் கிளப்பப்பட்டது.

இதெப்படி நிலவில் கிடைக்க பெறுகிறது.?

இதெப்படி நிலவில் கிடைக்க பெறுகிறது.?

அதனை நிரூபிக்கும் வண்ணம் நிலவு பாறைகளில் இதுவரை எங்குமே இயற்கையாக கிடைக்கப்பெறாத பதப்படுத்தப்பட்ட உலோகங்கள் (PROCESSED METALS) ஆன பிராஸ், மைக்கா, யுரேனியம் 236 மற்றும் நெருப்பியம் 237 ஆகியவைகளின் கூறுகள் கண்டுப்பிடிக்கப்பட்டன. யுரேனியம் 236 ஆனது அணுசக்தி மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட யுரேனியத்தில் காணப்படும் கதிரியக்க அணு கழிவாகும். இதெப்படி நிலவில் கிடைக்க பெறுகிறது.? அணு உலை தயாரிப்பு மற்றும் புளுட்டோனியம் தயாரிப்பு ஆகியவைகளின் மூலமாக கிடைக்கும் கதிரியக்க மாழை தான் நெருப்பியம் 237. இதெப்படி நிலவில் கிடைக்கப்பெறுகிறது.? இது போன்ற மிகவும் சிக்கலான கேள்விகள் நிலவு கட்டமைக்கப்பட்ட ஒன்று தான் என்ற சந்தேகத்தை மென்மேலும் உறுதி செய்கின்றன.

ஆதாரம் #5 :

ஆதாரம் #5 :

பிரபஞ்சத்தில் உள்ள பிற கிரக பொருட்கள் மிகவும் திடமான மைய பாகங்களை கொண்டவைகளாகும். ஆனால் பூமியின் நிலவிற்கு திடமான மையப்பகுதி கிடையாது. நிலவின் உட்பகுதியானது வெற்று பகுதியாக அல்லது குறைந்த தீவிரம் (very low-intensity interior) கொண்டதாக இருக்கிறது. இதனை ஆராய்ச்சியாளர்கள், 100 சதவிகிதம் உறுதியாக கூறுகிறர்கள். நிலவின் பெருந்திரள் செறிவானது (concentration of mass) மிகவும் விசித்திரமாக, நிலவின் மேற்பரப்பின் கீழே ஒரு தொடர் புள்ளிகளாய் அமைந்திருப்பதும், அது கட்டமைக்கப்பட்ட ஒன்று என்ற சந்தேகத்தை தூண்டுகிறது.

ஆதாரம் #4

ஆதாரம் #4

நம்பினால் நம்புங்கள் - சந்திரன், பூமியை விட மிகவும் பழைமையானதாகும். ஒரு கிரகத்தை சார்ந்து அதனையே சுற்றி வரும் நிலவுகளை, அந்த குறிப்பிட்ட கிரகத்திற்கு சொந்தமான சாட்டிலைட் என்று கூறப்படும். அப்படியாக பிரபஞ்சத்தில் பல இயற்கையான சாட்டிலைட்கள் உள்ளன.

ஒரு கிரகம் உருவாகும் முன்னரே

ஒரு கிரகம் உருவாகும் முன்னரே

அதுபோன்று இதுவரை அறியப்பட்ட நிலவுகளிலேயே, நமது பூமிக்கு சொந்தமான நிலவு போல ஒரு விசித்திரமான நிலவை வேறெங்குமே காண முடியவில்லை. அந்த அளவிற்கு நமது நிலவு மிகவும் விசித்திரமானது. விஞ்ஞானிகளின் கருத்துப்படி நம் நிலவு, பூமியை விட கிட்டத்தட்ட 800,000 ஆண்டுகள் பழைமையானதாகும். ஒரு கிரகம் உருவாகும் முன்னரே அந்த கிரகத்தை சுற்றும் சாட்டிலைட் எப்படி உருவாகி இருக்க முடியும்.? இந்தவொரு அடிப்படையான விடயமும் நிலவின் மீது ஏகப்பட்ட புதிர்களை திணிக்கிறது.

ஆதாரம் #3 :

ஆதாரம் #3 :

இன்றைய தேதி வரை விண்வெளி ஆராய்ச்சியாளர்களை குழப்பும் ஒரு விடயம் - நிலவின் நம்பமுடியாத, துல்லியமான சுற்றுப்பாதை. சூரிய மண்டலத்திலேயே மிகவும் துல்லியமான ஒரு வட்ட கோளப்பாதையில் (perfect circular orbit) உள்ள ஒரே விண்வெளி பொருள் நிலவு தான்.

நிலவின் ஒரு புறம் மட்டும் தான் தென்படுகிறது

நிலவின் ஒரு புறம் மட்டும் தான் தென்படுகிறது

அதாவது, நிலவு ஒரு இயற்கையான விண்ணுலக பொருள் போல் செயல்படவில்லை. அது மட்டுமின்றி சூரிய குடும்பத்தில் காணப்படும் பிற எந்தவொரு நிலவின் பண்புகளோடும் பூமி கிரகத்தின் நிலவு ஒற்றுப்போகவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, பூமியில் எங்கிருந்து நிலவை பார்த்தாலும் நிலவின் ஒரு புறம் மட்டும் தான் தென்படுகிறது. இதுபோன்ற நிலவின் பண்புகள் எல்லாம் சேர்ந்து, நிலவு இயற்கையாக உருவான ஒன்றில்லை என்ற சந்தேகத்தை கிளப்புகின்றன.

ஆதாரம் #2 :

ஆதாரம் #2 :

சில சந்திர பாறைகளில், பூமியில் கிடைக்கும் "டைட்டானியம் நிறைந்த" பாறைகளை காட்டிலும் பத்து மடங்கு அதிக டைட்டானியம் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பூமியில், நாம் சூப்பர்சோனிக் ஜெட் விமானங்கள் , ஆழமான டைவிங் நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் விண்கலம் தயாரிக்க டைட்டானியம் பயன்படுத்துகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியிருக்க நிலவில் இருந்து கொண்டு வரப்பட்ட பாறை மாதிரிகளில் அதிக அளவிலான டைட்டானியம் இருப்பது எப்படி என்பதை ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட முடியவில்லை.

ஆதாரம் #1 :

ஆதாரம் #1 :

நிலவின் துல்லியமான நிலையை ஒரு அதிசயம் என்றே கூறலாம். பூமி கிரகத்தின் செயல்பாடுக்கு ஏற்ற வண்ணம் மிகவும் துல்லியமான நிலையில், நிச்சயமானத்தன்மையான வேகத்தில் நிலவு நிலை கொண்டுள்ளது. நிலவை துல்லியமாக செயல் பட வைப்பது எது என்பது இன்று வரையிலாக நிலவும் ஒரு புதிர் தான். இதுபோன்ற நிலவின் இயற்கைக்கு மாறான சுற்றுப்பாதை மற்றும் ஒழுங்கற்ற தொகுப்பு ஆகியவைகள், நிலவு திட்டமிட்டு 'கட்டப்பட்டது' என்ற நூற்றுக்கணக்கான கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பி கொண்டே தான் இருக்கின்றன. ஆனால் அதற்கு பதில்கள் தான் கிடைத்தப்பாடில்லை.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Irregularities that suggests the moon was actually engineered. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot