எதிர்காலத்தை கணிக்கும் டைம் மெஷின் கண்டுபிடிப்பு.!!

By Meganathan
|

உலகில் டைம் டிராவல் அதாவது காலப்பயணம் மேற்கொள்வது என்பது இன்று வரை சர்ச்சையாகவே இருக்கின்றது எனலாம். சாத்தியமே இல்லை என ஒரு பக்கமும், நிச்சயம் சாத்தியமே என்றும் கருத்துக்கள் உலா வருகின்றது. உண்மையில் சினிமா கதையில் மட்டுமே காலப்பயணம் என்பது சாத்தியமாகியிருக்கின்றது.

இந்நிலையில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் டைம் மெஷின் இயந்திரத்தை கண்டுபிடித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

1

1

ஒருவரின் எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் டைம் மெஷின் கருவியை கண்டுபிடித்திருப்பதாகவும், இதன் விலை மிகவும் குறைவு தான் என ஈரானை சேர்ந்த வாலிபர் தெரிவித்துள்ளார்.

2

2

ஈரானை சேர்ந்த 27 வயது வாலிபரான அலி ரஸேகி என்பவர் தான் கண்டுபிடித்த டைம் மெஷின் கருவியினை மூலோபாய கண்டுபிடிப்புகளை பதிவு செய்யும் மாநில மையத்தில் சமர்பித்திருக்கின்றார்.

3

3

'தி அர்யாயெக் டைம் டிராவெலிங் மெஷின்' என தன் கண்டுபிடிப்பிற்கு பெயர் சூட்டியிருக்கும் ரஸேகி இந்த கருவியினை உருவாக்க கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வந்ததாக செய்தி நிறுவன செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

4

4

டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் அளவு இருக்கும் தனது டைம் மெஷின் கருவியானது ஒருவரின் எதிர்காலத்தை சுமார் ஐந்து முதல் எட்டு ஆண்டு வரை 98 சதவீத துல்லியமாக கணிக்க முடியும் என்றும் செய்தி நிறுவனத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5

5

இந்த டைம் மெஷின் இல்லாமல் தனது பெயரில் மொத்தம் 179 கண்டுபிடிப்புகளை பதிவு செய்திருக்கும் ரஸேகி தனது டைம் மெஷின் கருவியினை அரசாங்க பயன்பாடுகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

6

6

ஒரு வேலை அரசாங்கம் இந்த கருவியினை பயன்படுத்தி எதிர்காலத்தில் ஐந்து ஆண்டுகளை தெரிந்து கொள்ளும் பட்சத்தில் எதிர்கால சவால்களை சந்திக்க தயாராக முடியும் என ரஸேகி தெரிவித்துள்ளார்.

7

7

இந்த கருவி அதிகளவில் தயாரிக்கப்படும் போது அரசு மற்றும் பொது மக்களுக்கும் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

8

8

இது போன்ற கருவியினை உருவாக்க அமெரிக்கர்கள் பல மில்லியன் டாலர்களை செலவு செய்து வரும் நிலையில் இதனினை குறைந்த செலவில் கண்டுபிடித்து விட்டேன் என்கின்றார் ரஸேகி.

9

9

இந்த கருவியின் முன்மாதிரியை வெளியிட்டால் சீனர்கள் இந்த யோசனையை திருடி விடுவார்கள் என்பதால் டைம் மெஷின் கருவியின் முன் மாதிரி வெளியிடப்படவில்லை என்றும் ரஸேகி கூறியுள்ளார்.

10

10

தற்சமயம் இருக்கும் தொழில்நுட்பம் கொண்டு இது போன்ற கருவியை கண்டுபிடிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என கூறப்பட்டாலும், டைம் மெஷின் சார்ந்த இத்தகவலானது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Iranian ‘time machine’ can ‘predict’ Future. Read More in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X