சர்வதேச விண்வெளி நிலையத்தின் கழிப்பறையால் விண்வெளி வீரர்களுக்கு நிகழவிருந்த ஆபத்து!

|

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இரண்டு கழிப்பறைகளும் வேலை செய்யாமல் செயலிழந்துவிட்டது. இது சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களை பெரிய அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளது. இதற்கான காரணம் என்ன வென்று தெரியுமா?

விண்வெளியில் வாழ்வது என்பதே சவால்

விண்வெளியில் வாழ்வது என்பதே சவால்

விண்வெளியில் வாழ்வது என்பது மனிதர்களுக்கு சவாலாக இருக்கும். அதிலும் விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் வாழ்வது என்பது நிச்சயமாகக் கடினமான சவாலாகும். பூஜ்ஜிய ஈர்ப்பு விசையில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி வாழ்வது, மனித உடலில் ஒரு டன் மாற்றங்களை ஏற்படுத்தும்.

சிக்கலான விஷயம்

சிக்கலான விஷயம்

பூமியில் நாம் செய்யும் அடிப்படை விஷயங்களை, பூஜ்ஜிய ஈர்ப்பு விசையில் செய்வதென்பது மிகவும் சிக்கலானவை மற்றும் கடினமாவையும் கூட, மேலும் அவற்றில் மிகவும் சிக்கலான விஷயம் கழிப்பறைக்குச் செல்வது தான். அந்த சிக்கலான விஷயத்திற்கு கூடுதல் சிக்கல் சேர்க்கும் விதத்தில் கழிவறைகள் செயலிழந்துவிட்டது.

ஜியோவின் ரூ.199-திட்டம்: வரம்பற்ற டேட்டா: வரம்பற்ற குரல் அழைப்பு- வேலிடிட்டி எத்தனை நாள் தெரியுமா?ஜியோவின் ரூ.199-திட்டம்: வரம்பற்ற டேட்டா: வரம்பற்ற குரல் அழைப்பு- வேலிடிட்டி எத்தனை நாள் தெரியுமா?

இரண்டு கழிப்பறைகள் மட்டுமே உள்ள ஐ.எஸ்.எஸ்

இரண்டு கழிப்பறைகள் மட்டுமே உள்ள ஐ.எஸ்.எஸ்

ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் அனுப்பிய அப்டேட்டின் படி, ஐ.எஸ்.எஸ்ஸில் உள்ள கழிப்பறைகள் கணிசமான காலத்திற்குச் செயல்படவில்லை. சர்வதேச விண்வெளி நிலையத்தில் ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட இரண்டு கழிப்பறைகள் மட்டுமே உள்ளன. ஒன்று அமெரிக்கப் பிரிவிலும், மற்றொன்று ரஷ்யப் பிரிவிலும் வைக்கப்பட்டுள்ளது.

ரோஸ்கோஸ்மோஸ் அனுப்பிய அப்டேட்

ரோஸ்கோஸ்மோஸ் அனுப்பிய அப்டேட்

இருப்பினும் அமெரிக்கப்பிரிவில் உள்ள கழிவறை முன்பே பயன்பாட்டிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தது. ஆகையால் விண்வெளி வீரர்கள் அனைவரும் இருக்கும் ஒரு கழிவறையை மட்டுமே பயன்படுத்தவேண்டிய சூழ்நிலையில் சர்வதேச விண்வெளி நிலையம் செயல்பட்டுவந்தது. ஆனால் ரோஸ்கோஸ்மோஸ் அனுப்பிய அப்டேட்டிற்குப் பின் அதுவும் செயல்படாமல் சிக்கலை உருவாக்கியது.

உஷார்: இந்த 19 ஆப்களில் ஒன்று வைத்திருந்தாலும் ஆபத்து உறுதி- உடனடியாக செயலிழக்க செய்யுங்கள்உஷார்: இந்த 19 ஆப்களில் ஒன்று வைத்திருந்தாலும் ஆபத்து உறுதி- உடனடியாக செயலிழக்க செய்யுங்கள்

விண்வெளி வீரர்களுக்கு டயாப்பரா?

விண்வெளி வீரர்களுக்கு டயாப்பரா?

என்ன மாதிரியான சிக்கலை உருவாக்கியது என்றால், விண்வெளி வீரர்கள் எப்போதுமே டயப்பர்களில் இருக்க வேண்டும் அல்லது அவர்கள் ஐ.எஸ்.எஸ்ஸில் கப்பலில் வைக்கப்பட்டிருந்த சோயுஸ் விண்கலங்களில் உள்ள கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டும் என்பது தான்.

சரி செய்யப்பட்ட சிக்கல்

சரி செய்யப்பட்ட சிக்கல்

இருப்பினும் எதனால் இந்தச் சிக்கல் உருவானது என்று ரோஸ்கோஸ்மோஸ் கண்டறிந்து, கழிப்பறையிலிருந்த செபேரட்டரை மாற்றம் செய்து சிறிது நேரத்தில் செயலிழந்த கழிப்பறைகளை அதிர்ஷவசமாக சரி செய்துவிட்டது. இதனால் பெரிய ஆபத்தான சிக்கலிலிருந்து சர்வதேச விண்வெளி நிலைய வீரர்கள் காப்பாற்றப்பட்டனர்.

Best Mobiles in India

English summary
International Space Station Toilets Stopped Working : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X