பசிபிக் கடலில் மூழ்கடிக்கப்படும் சர்வதேச விண்வெளி நிலையம்.! எப்போது? காரணம் என்ன?

|

அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா மற்றும் சில நாடுகள் இணைந்து விண்வெளி ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி நிலையத்தை வடிவமைத்தன. குறிப்பாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இதுவரை அமெரிக்கா, ரஷ்யா உட்பட 15 நாடுகளுக்கும் மேற்பட்ட விண்வெளி வீரர்கள் தங்கி ஆய்வுகளை நடத்தி விட்டு திரும்பி வந்துள்ளனர்.

ல் இந்த சர்வதேச விண்வெளி நிலையம்

துவக்கத்தில் இந்த சர்வதேச விண்வெளி நிலையம் 15 ஆண்டுகள் வரை மட்டுமே இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. அதன்பின்பு பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுகப்பட்டது. இந்நிலையில் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தின் செயல்பாடு வரும் 2031 ஆண்டுடன் நிறைவு பெறும் என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாதெரிவித்துள்ளது.

பூமியை தாக்கிய சூரிய புயல்: இப்படி செய்யும் நினைக்கவே இல்ல? ரேடியோ சேவைகள் நாக் அவுட்.. எங்கே தெரியுமா?பூமியை தாக்கிய சூரிய புயல்: இப்படி செய்யும் நினைக்கவே இல்ல? ரேடியோ சேவைகள் நாக் அவுட்.. எங்கே தெரியுமா?

சர்வதேச விண்வெளி நிலையமான IS

அதாவது சர்வதேச விண்வெளி நிலையமான ISS இல் தொடர்ந்து பல விதமான கோளாறுகள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக காலாவதியான உபகரணங்கள் மற்றும் வன்பொருள் போன்றவற்றின் மூலம் விண்வெளி நிலையத்தில் பல கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ. 6,599 முதல் ரூ. 10,000 விலைக்குள் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் பட்டியல்.. இதைவிட பெஸ்ட் சலுகை கிடைக்காதுரூ. 6,599 முதல் ரூ. 10,000 விலைக்குள் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் பட்டியல்.. இதைவிட பெஸ்ட் சலுகை கிடைக்காது

 சர்வதேச விண்வெளி நிலையத்தில்

அதேபோல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இன்னும் சில காலத்தில் "சரிசெய்ய முடியாத" அளவிற்குத் பிரச்சனைகளைசந்திக்க நேரிடும் என்று ரஷ்ய அதிகாரிகள் எச்சரித்தனர். எனவே இதை தொடர்ந்து தான் சர்வதேச விண்வெளி நிலையத்தை பூமிக்கு திரும்ப பெறும் நடவடிக்கை குறித்து நாசா ஆய்வு செய்து வருகிறது.

மூன்று கேமரா.. 5ஜி.. 6000mah பேட்டரி கொண்ட Tecno Pova 5G விலை இவ்வளவு தானா? நம்பவே முடியலையே..மூன்று கேமரா.. 5ஜி.. 6000mah பேட்டரி கொண்ட Tecno Pova 5G விலை இவ்வளவு தானா? நம்பவே முடியலையே..

 வரும் 2031 ஜனவரியில் சர்வதேச

குறிப்பாக வரும் 2031 ஜனவரியில் சர்வதேச விண்வெளி நிலையம் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைவது குறித்து விஞ்ஞானிகள் திட்டமிட்டு வருகின்றனர். அதாவது பூமிக்கு திரும்பும் சர்வதேச விண்வெளி நிலையம், பாயிண்ட் நெமோ எனப்படும் தெற்கு பசிபிக் பெருங்கடலில் மக்கள் வசிக்காத பகுதியில் கடலில் மூழ்கடிக்கப்படும் என நாசா சார்பில் தகவல் வெளிவந்துள்ளது.

6000 எம்ஏஎச் பேட்டரி, டைமன்சிட்டி 900 உடன் இந்தியாவில் அறிமுகமான டெக்னோ போவா 5ஜி: விலை கம்மி தான்!6000 எம்ஏஎச் பேட்டரி, டைமன்சிட்டி 900 உடன் இந்தியாவில் அறிமுகமான டெக்னோ போவா 5ஜி: விலை கம்மி தான்!

து பாயிண்ட் நெமோ என்பது பசிபிக் கடலில்

அதாவது பாயிண்ட் நெமோ என்பது பசிபிக் கடலில் உள்ள புள்ளியாகும். இது நிலத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளதுமற்றம் பல விண்கலங்களுக்கு இது நீர் கல்லறையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து சட்டச் சிக்கலில் சிக்கித் தவிக்கும் ஆப்பிள்: மீண்டும் ஆப்பிள் நிறுவனத்துக்கு அபராதம்- காரணம் என்ன?தொடர்ந்து சட்டச் சிக்கலில் சிக்கித் தவிக்கும் ஆப்பிள்: மீண்டும் ஆப்பிள் நிறுவனத்துக்கு அபராதம்- காரணம் என்ன?

 விண்வெளி நிலையத்திற்கு போட்டியா

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு போட்டியாக சீனா தனியாக தியாங்காங் என்ற விண்வெளி நிலையத்தை உருவாக்கி வருகிறது குறிப்பாக பூமியிலிருந்து 340 கி.மீ முதல் 450 கி.மீ உயரத்தில் இந்த விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பாகங்களை விண்கலங்கள் மூலம் பலகட்டங்களாக சீனா கொண்டு சென்றுள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

News Source: thequint

Best Mobiles in India

English summary
International Space Station is about to fall into the Pacific Ocean: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X