Home
Scitech

எதிரிகளைத் திணறடிக்க தயார் நிலையில் தேஜாஸ்.!!

By Meganathan

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தேஜாஸ் இலகுரக போர் விமானம் நாளை இந்திய விமானப்படைக்கு வழங்கப்பட இருக்கின்றது. முதற்கட்டமாக இரண்டு விமானங்களும் அடுத்த ஆண்டில் எட்டு விமானங்களையும் தயாரித்து வழங்க இந்துஸ்தான் ஏநோநாட்டிக்கல் திட்டமிட்டுள்ளது.

நாளை முதல் இந்திய விமானப்படையில் வழங்கப்பட இருக்கும் தேஜாஸ் போர் விமானம் குறித்த சில முக்கிய தகவல்கள் ஸ்லைடர்களில்..

01

01

தேஜாஸ் ஒற்றை என்ஜின், குறைந்த எடை, மல்டி-ரோல் சூப்பர் சோனிக் போர் விமானம் ஆகும். பல ஆண்டுகளாகத் தயாரிப்பில் இருந்து தற்சமயம் பயன்பாட்டிற்கு வழங்கப்பட இருக்கின்றது.

02

02

உலகின் மிகச்சிறிய, குறைந்த எடை கொண்ட மல்டி-ரோல் போர் விமானம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

03

03

அதிக சிரமம் இன்றி விமானத்தைக் கட்டுப்படுத்த வழி செய்யும் குவாட்ரா பிளெக்ஸ் டிஜிட்டல் ஃப்ளை-பை-வையர் கண்ட்ரோல் அமைப்பு கொண்டுள்ளது.

04

04

தேஜாஸ் போர் விமானத்தில் ஆக்டிவ் எலக்ட்ரிக்கல்லி ஸ்கேன்டு அர்ரே ரேடார், யுனிஃபைடு வார்ஃபேர் சூட், நடுவானில் எரிபொருள் நிரப்பும் திறன், போன்றவற்றை வழங்கி மேம்படுத்த இந்திய விமானப்படை முடிவு செய்துள்ளது.

05

05

இந்திய விமானப்படை சார்பில் ரூ. 275 - 300 கோடி மதிப்பில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தேஜாஸ்1ஏ என அழைக்கப்பட இருக்கின்றது.

06

06

இந்தியாவில் மொத்தம் 300 இலகுரக போர் விமானங்கள் தேவை என்பதால் மத்திய பாதுகாப்பு அமைச்சகமானது விமானத்தில் கிட்டத்தட்ட 40 மாற்றங்களைச் செய்ய திட்டமிட்டுள்ளது.

07

07

தயாரிப்பு பணிகளை பொருத்த வரை 2015-2016 ஆகிய காலகட்டத்தில் சுமார் 6 விமானங்களும், இந்த எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் 8ஆக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

08

08

குறைந்த எடை மற்றும் சுறுசுறுப்பாக இயங்குவதோடு ஸ்மார்ட் அம்யூனிஷன் மற்றும் பாம்கள் துல்லியமாகத் தாக்கும் படி தேஜாஸ் வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

09

09

பாகிஸ்தான் மற்றும் சீனாவின் கூட்டு முயற்சியில் உருவான JF17 போர் விமானங்களை விட அதிக சக்திவாய்ந்த விமானமான தேஜாஸ், வானில் பறந்து கொண்டே மற்ற விமானங்களைத் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டுள்ளது.

10

10

தேஜாஸ் போர் விமானத்தை மிக் 21 விமானங்களுக்கு மாற்றாகப் பயன்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Interesting facts about Indian Made Light Combat Aircraft Tejas Tamil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X